ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு என திமுக கூட்டணி சார்பில் அறிவிப்பு..!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என திமுக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ., திருமகன் ஈ.வெ.ரா. மறைவையடுத்து, பிப்ரவரி 27ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தேர்தல் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சந்தித்துப்பேசினர். இந்நிலையில், 2021ஆம் ஆண்டு தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றிப்பெற்றதால், இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கே அத்தொகுதி ஒதுக்கப்படுவதாக திமுக … Read more

கரும்பு நிலுவைத் தொகை | கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து விவசாயிகள் முற்றுகை

கும்பகோணம்: புதிய ஆலை அதிபர்கள் மற்றும் அவர்களது பினாமிகள் உடனடியாக, கரும்பு விவசாயிகளைச் சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து விவசாயிகள் முற்றுகையிட்டதால் கோட்டாட்சியர் இருக்கையைவிட்டு எழுந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா தலைமை வகித்தார். வட்டாட்சியர் பி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு, தமிழக அரசைக் கண்டிக்கும் வகையில் கருப்புத் துண்டு அணிந்து வந்திருந்த விவசாயிகள், திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை … Read more

ஈரோடு கிழக்கு தேர்தல்… EVM சரிபார்ப்பு பணி தீவிரம்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று, மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி மற்றும் இதர கட்சியினர் முன்னிலையில் ஈரோடு மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இடைத்தேர்தலுக்கு தயார் செய்யும் பணியில் பெல் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி, “இடைத்தேர்தலுக்காக 500 … Read more

பழநி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும்: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: ‘பழநி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு விழா நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன’ என ஐகோர்ட் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையைச் சேர்ந்த வக்கீல் தமிழ் ராஜேந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி கோயிலில் 27ம் தேதி குடமுழுக்கு விழா நடக்கிறது. தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, கடந்த 2020ல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோயில்களிலும் … Read more

கேரளா கோவிலில் அமலா பாலுக்கு அனுமதி மறுப்பு; 2023-லும் இந்த நிலையா என அதிருப்தி

கேரளா கோவிலில் அமலா பாலுக்கு அனுமதி மறுப்பு; 2023-லும் இந்த நிலையா என அதிருப்தி Source link

#தமிழகம் | கலவர பூமியான கிராமம்! உயிர்பலி, மண்டை உடைப்பு, போலீசார் குவிப்பு! 

திருப்பத்தூர் அருகே மாடு விடும் விழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஒரு கிராமமே கலவர பூமியாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், கல்நார்சாம்பட்டி கிராமத்தில் நேற்று மாடு விடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகள் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து சுமார் 180 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த மாடு விடும் போட்டிக்கு போலீசார் மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கி இருந்தனர். … Read more

சட்டம் – ஒழுங்குக்கு சவால் விடும் எந்த சக்திகளையும் அனுமதிக்கக் கூடாது: காவல் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை: “காவல் நிலையத்திற்குச் சென்றால், நியாயம் கிடைக்கும் என்ற நிலை ஒவ்வொரு காவல் நிலையத்திலும் உருவாக்கப்பட வேண்டும்” என்று மாநில சட்டம் – ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை (ஜன.19) தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர், தமிழ்நாடு இவ்வரசின் தலைமையில் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருவதால், … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி: கோடிகளில் கொட்டும் வருமானம்… அப்படி என்ன ஸ்பெஷல்?

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வந்தாச்சு. மாநிலம் முழுவதும் இதே பேச்சு தான். ஊடகங்கள், செய்தித்தாள்கள், சமூக வலைதளங்கள் என தேர்தல் தொடர்பான தகவல்கள் ஆர்ப்பரித்து வருகின்றன. இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ஈரோடு கிழக்கு தொகுதி எங்கிருக்கிறது. அங்கு என்னென்ன தொழில்? எப்படியெல்லாம் வருமானம் ஈட்டப்படுகிறது? போன்ற விஷயங்கள் தெரிந்தால் சற்றே சுவாரஸியமாக இருக்கும். ஈரோடு கிழக்கு ஈரோடு கிழக்கு தொகுதி என்பது ஈரோடு மாநகருக்கு உள்ளேயே முடிந்து விடக் கூடியது. இங்கு விவசாயம் கிடையாது. ஜவுளித் … Read more

சாத்தூர், சிவகாசியில் அடுத்தடுத்து பயங்கரம பட்டாசு ஆலைகள் வெடித்து 3 பேர் கருகி பலி

சிவகாசி: சாத்தூர் மற்றும் சிவகாசி அருகே பட்டாசு ஆலைகளில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த மாரியப்பனுக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே  கனஞ்சம்பட்டியில் உள்ளது. இங்கு 40க்கும் மேற்பட்ட அறைகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நேற்று மதிய உணவு இடைவேளைக்கு பின் ராக்கெட் … Read more

சென்னை 2வது விமான நிலையம்: பரந்தூரில் இடம் அனுமதி கோரி டிட்கோ விண்ணப்பம்

சென்னை 2வது விமான நிலையம்: பரந்தூரில் இடம் அனுமதி கோரி டிட்கோ விண்ணப்பம் Source link