சாத்தூர், சிவகாசியில் அடுத்தடுத்து பயங்கரம பட்டாசு ஆலைகள் வெடித்து 3 பேர் கருகி பலி

சிவகாசி: சாத்தூர் மற்றும் சிவகாசி அருகே பட்டாசு ஆலைகளில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த மாரியப்பனுக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே  கனஞ்சம்பட்டியில் உள்ளது. இங்கு 40க்கும் மேற்பட்ட அறைகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நேற்று மதிய உணவு இடைவேளைக்கு பின் ராக்கெட் … Read more

சென்னை 2வது விமான நிலையம்: பரந்தூரில் இடம் அனுமதி கோரி டிட்கோ விண்ணப்பம்

சென்னை 2வது விமான நிலையம்: பரந்தூரில் இடம் அனுமதி கோரி டிட்கோ விண்ணப்பம் Source link

திருவள்ளூர் : கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி.! நொடியில் உயிர் தப்பிய ஓட்டுனர்.!

சரக்குகளுடன் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று சென்னை எண்ணூர் துறைமுகத்தில் சரக்குகளை இறக்கிவிட்டு வல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதையடுத்து, இந்த லாரி அத்திப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றின் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டுள்ளது.  இதைப்பார்த்த கண்டெய்னர் லாரியின் ஓட்டுனர் விபத்தை தவிர்ப்பதற்காக லாரியை திசை திருப்பியுள்ளார். அப்போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மேம்பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி கீழே தொங்கியது.  இதைப்பார்த்து, அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் … Read more

பழனி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு: வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை: “பழனி முருகன் கோயில் கருவறை, வேள்விச்சாலை, கோபுரக்கலசம் ஆகிய இடங்களில் தமிழ் மந்திரங்களும், சமஸ்கிருத மந்திரங்களும் சம அளவில் அர்ச்சிக்கப்படும் என்பதை பொத்தாம் பொதுவாக கூறாமல், அறிக்கை வாயிலாக தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், தஞ்சைப் பெருவுடையார் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வெற்றியை நிர்ணயிக்கும் பெண் வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் தீவிரம்!

ஈரோடு சட்டமன்ற தொகுதி கடந்த 2008 ஆம் ஆண்டு மறு சீரமைப்பில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என பிரிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட வி.சி. சந்திரகுமார் வெற்றி பெற்று கிழக்கு தொகுதியின் முதல் எம்.எல்.ஏ ஆனார். அதனை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசும், 2021 ஆம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட … Read more

தை பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள்

வத்திராயிருப்பு: தை பிரதோஷத்தை முன்னிட்டு, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பௌர்ணமிக்கு தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இன்று தை மாத பிரதோஷமாகும். வரும் சனிக்கிழமை தை அமாவாசையாகும். இதையொட்டி இன்று முதல் … Read more

”அன்று நானும் தேஜஸ்வியும் இருந்தோம்; விமானத்தில் நடந்தது இதுதான்” – அண்ணாமலை பேட்டி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அப்போது இடைத்தேர்தல், தமிழ்நாடு குறித்த ஆளுநர் சர்ச்சை, குஜராத் ரயில் எரிப்பு சம்பவம் போன்றவற்றை குறித்து பேசினார்.  இடைத்தேர்தல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “இடைத்தேர்தல் தொடர்பாக பாஜக தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, ஜி.கே.வாசன் ஆகியோரிடம் தொலைபேசியில் பேசி உள்ளேன். கூட்டணி கட்சியினரிடம் பேசிய பிறகு அதுகுறித்து பாஜக மேலிடத்துக்கு தெரிவிப்பேன். அதன் … Read more

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர். இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2 முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில், பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (ஜனவரி … Read more

திருட்டு வழக்கில் கைதானவர் தனது மனைவியுடன் பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை முயற்சி

திருப்பூர்: திருட்டு வழக்கில் கைதானவர் தனது மனைவியுடன், பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மதுரை ஜெய்ஹிந்தாபுரத்தை சேர்ந்தவர் கருப்புசாமி(29). இவரது மனைவி மஞ்சுளா (25). தம்பதியருக்கு 1 ஆண் மற்றும் 3 பெண் குழந்தைகள். இந்நிலையில் கருப்புசாமி, திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட வேலப்பகவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் ரேடியேட்டர் உற்பத்தி நிறுவனத்தில் பணி செய்து வந்தார். இந்நிலையில் அங்கு பணி செய்து … Read more