தமிழக செய்திகள்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையை 1 மணி 52 நிமிடத்தில் ஓடி முடித்த தமிழக டி.ஜி.பி..!!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு பணிகள் குறித்து நேற்று முன்தினம் 2-வது நாளாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். முன்னதாக அதிகாலையில் உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக அவர் கிரிவலப்பாதையில் ஓடினார். சாதாரணமாக பக்தர்கள் நடந்து சென்றால் கிரிவலப் பாதையை சுற்றி முடிக்க குறைந்தது 3 மணி நேரம் ஆகும். ஆனால் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையை டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஒரு மணி நேரம் 52 நிமிடத்தில் ஓடி முடித்து … Read more
எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு நிலையை கடைபிடிக்கக் கூடாது – மனம் திறக்கிறார் மூத்த காங்கிரஸ் தொண்டர் அமெரிக்கை நாராயணன்
சென்னை: பரபரப்புக்குப் பஞ்சமில்லாத தமிழ்நாடு காங்கிரஸ், கடந்த மூன்றரை ஆண்டுகளாக கே.எஸ்.அழகிரி தலைமையில் சப்தமில்லாமல் இருந்தது. ஆனால், கடந்த நவ. 15-ம்தேதி தொண்டர்கள் மோதலால் சத்தியமூர்த்திபவன் வளாகமே போர்க்களமாக மாறியது. அன்றிலிருந்து தமிழக தலைவர்கள் டெல்லி செல்வதும், வருவதுமாக பரபரப்பாகியுள்ளது. இதற்கிடையே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து, மத்திய அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ் மூத்த தொண்டர் அமெரிக்கை நாராயணன் … Read more
வாலிபர்களை கண்டித்த நடத்துனர்! பதிலுக்கு பேருந்து மீது கல் எறிந்ததால் பரபரப்பு!
வேலூரில் இருந்து காட்பாடி அடுத்த குப்பிரெட்டி தாங்கள் வரை செல்லும் வழித்தடம் 10-B அரசு பேருந்து இன்று வழக்கம் போல் பயணிகளை ஏற்றுக்கொண்டு காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தூரம் வரை சென்றுள்ளது. அப்பொழுது படியில் தொங்கியபடி 3 வாலிபர்கள் பயணம் செய்துள்ளனர், இதனைக் கண்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் படியில் தொங்க வேண்டாம் உள்ளே செல்லுங்கள் என கூறியுள்ளனர். இதனை அடுத்து வாலிபர்கள் படியில் தொங்கிய படியே கீழே இறங்கி கற்களை பேருந்தின் … Read more
எம்பிசி பட்டியலில் நரிக்குறவர் என்பதில் குறவரை நீக்க வழக்கு: அரசுகள் பதிலளிக்க உத்தரவு
மதுரை: மதுரை, விளாங்குடியைச் சேர்ந்த இரணியன் (எ) முத்துமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழை பூர்வீகமாகக் கொண்டு மலைப்பகுதியில் வசித்தவர்கள் குறவர் சமூகத்தினர். தமிழ்நாட்டில் எஸ்சி-எஸ்டி பட்டியலில் உள்ளனர். 1951ல் எம்பிசி பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்க்கப்பட்டனர். குறவர்கள் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். ஆனால், நரிக்குறவர்கள் சமயம், பழக்கவழக்கம், திருமண முறைகள் வேறுபாடு கொண்டது. இவர்கள் ஆந்திராவில் குருவிக்காரர்கள், நரிக்குறவர்கள் என்றும், குஜராத்தில் வாக்கிரிவாலா என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் … Read more
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த அதிமுக ஒன்றிய செயலாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிமுக ஆட்சியில், விருதுநகர் மாவட்டம் – வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் விஜய நல்லதம்பி. முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரரான இவர், தன்னிடம் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்த சிவகாசி கோட்டையூரைச் சேர்ந்த தங்கதுரை என்பவரிடம் ‘உன் மனைவி கிருஷ்ணவேணிக்கு சத்துணவு அமைப்பாளர் போஸ்டிங் வாங்கித் தருகிறேன். 3.5 லட்சம் கொடு. வேலைக்கான ஆர்டர் … Read more
துணிவு படத்தின் புதிய போஸ்டர் வைரல்!!
துணிவு படத்தின் புதிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது. துணிவு படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், சிபி சக்கரவர்த்தி, அமீர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் அதிக தாடியுடன், வெள்ளை நிற முடியுடனும் நடித்து வந்தார். அந்த தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் … Read more
கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா. நினைவரங்கம்: காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்
கோவில்பட்டி/சென்னை: சாகித்ய அகாடமி விருது பெற்ற மறைந்த எழுத்தாளர் கி.ரா.வின் நினைவரங்கம் கோவில்பட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவரங்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார். மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சிஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் முழுவுருவச் சிலையுடன் நினைவரங்கம், மின்னணு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்துதமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக கி.ரா.நினைவரங்கத்தை திறந்து … Read more
இன்னும் 4 நாட்கள் தான்… அதுவும் மிக அதிக மழையாம்… தமிழகத்திற்கு வானிலை அலர்ட்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. வழக்கமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதிகப்படியான மழைப்பொழிவை அளிக்கும். ஆனால் இம்முறை இருமுறை நல்ல மழையை காட்டியது. அதன்பிறகு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலப் பகுதியை நோக்கி நகராமல் ஏமாற்றம் அளித்தது. கடற்பகுதியிலேயே வலுவிழந்து காணாமல் போனது. வானிலை மையமும், வானிலை ஆய்வாளர்களும் மழை குறித்து கணிப்பதும், பின்னர் அது ஏமாற்றம் அளிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இருப்பினும் சென்னைக்கு ஆதாரமாக விளங்கும் … Read more