நெல்லை, தூத்துக்குடியில் வீடு, நிறுவனங்களில் ஜொலிக்கும் `ஸ்டார்கள்: அலங்கார பொருட்கள் விற்பனை விறுவிறுப்பு

நெல்லை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கியுள்ளன. நெல்லையில் கிறிஸ்துமஸ்  ஸ்டார் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனை விறுவிறுப்புடன் நடந்து  வருகின்றன. வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இரவு நேரங்களில் அலங்கார  நட்சத்திரங்கள் மின்னொளியில் ஜொலிக்கிறது.கிறிஸ்துமஸ்  பண்டிகை நாடு முழுவதும் வரும் டிச.25ம்தேதி வழக்கமான உற்சாகத்துடன்  கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கி விடும். இயேசு பிரானின் சிறப்பை விளக்கும் வகையில் குடில்கள் அமைத்தல், சிறப்பு பிரார்த்தனை, வீடுகளில் வண்ண, வண்ண … Read more

சென்னை : மாநகர பேருந்து மீது மெட்ரோ ரயில் கிரேன் மோதி விபத்து.!

சென்னை மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. சென்னை வடபழனியில் இன்று காலை சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து மீது மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மாநகரப் பேருந்தின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. மேலும் காலை நேரம் என்பதால் பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த … Read more

வாகனங்களில் பொருத்தப்பட்ட சட்டவிரோத நம்பர் பிளேட்டுகளை அகற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சட்டவிரோத நம்பர் பிளேட்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரைச் சேர்ந்த சந்திரசேகர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ”மத்திய, மாநில மோட்டார் வாகனச் சட்டப்படி இரு சக்கர வாகனங்களில் விதிமுறைப்படியே நம்பர் பிளேட்டுகள் இருக்க வேண்டும். ஆனால் வாகன உரிமையாளர்கள் நம்பர் பிளேட்டுகளில் அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர், நடிகைகளின் படங்களை ஒட்டியுள்ளனர். விரும்பும் வடிவங்களில் எண்களை எழுதிக் கொள்கின்றனர். இது சட்டவிரோதமாகும். இது … Read more

முதல்வரை மோசமாக திட்டிய பாஜகவினர்…மொத்தமாய் அள்ளிய போலீஸ்!

திருச்சியில் காவல் துறையினரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தகாத வார்த்தைகளில் ஆபாசமாக பேசியதாக அதற்கான வீடியோ ஆதாரத்துடன், திமுகவினர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதேபோல் உறையூர் காவல் நிலையத்திலும் திமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில், திருச்சி பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன்,தமிழக முதல்வரை ஆபாசமாக பேசிய லட்சுமி நாராயணன் மேலும் கௌதம்,காளி உள்ளிட்ட 11 பேர் மீது உறையூர் காவல் நிலைய … Read more

பிஷப் தலைமையில் சிறப்பு திருப்பலி கோட்டாறு சவேரியார் பேராலயத்தில் இன்று 2வது நாள் தேர் பவனி: போக்குவரத்து மாற்றம் அமல்

நாகர்கோவில்:  நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலய 9ம் திருவிழாவையொட்டி இன்று இரவு தேர் பவனி நடக்கிறது. மாலையில் பிஷப் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டாறு  புனித சவேரியார் பேராலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெற்று வருகிறது. நேற்று (1ம் தேதி) 8ம் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை  ஆடம்பரக்கூட்டு திருப்பலி … Read more

நெல்லை மாவட்ட எஸ்.பி.யை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு – என்னக் காரணம்?

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணனை கைது செய்து ஆஜர்படுத்தும்படி தென் மண்டல ஐ.ஜி.-க்கு தமிழ்நாடு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், சிவந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தம் என்கிற பட்டியல் இனத்தை சேர்ந்தவரின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, வழி மறிக்கப்பட்டு, வேலியிடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் அறிக்கை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கடந்த ஜூன் 10 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருமுறை அவகாசம் … Read more

முதல்வர் குறித்து ஆபாச பேச்சு : திருச்சியில் 9 பா.ஜ.க நிர்வாகிகள் சிறையில் அடைப்பு

முதல்வர் குறித்து ஆபாச பேச்சு : திருச்சியில் 9 பா.ஜ.க நிர்வாகிகள் சிறையில் அடைப்பு Source link

காஞ்சிபுரம்: அரசு பேருந்து-லாரி மோதி விபத்து.! 2 பெண்கள் பலி, 9 பேர் படுகாயம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பேருந்து-லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர் மற்றும் ஒன்பது பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் படூரில் இருந்து பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பேருந்து சிறுமயிலூர் அருகே எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்ப்பாராத விதமாக அரசு பேருந்து மீது மோதியது. இதில் பேருந்தின் ஒருபுறம் முழுவதும் சேதமடைந்த நிலையில் பேருந்தில் பயணம் செய்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக … Read more

தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் செல்போனுக்கு தடை விதிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க அறநிலையத் துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கக் கோரி அர்ச்சகர் சீதாராமன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க கோயில் நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய … Read more