டிசம்பர் 5லிருந்து 8வரை உஷாரா இருங்க மக்களே… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8ஆம் தேதியை ஒட்டி வடதமிழகம்- புதுவை மற்றும் அதனை ஒட்டிய  தெற்கு ஆந்திர … Read more

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,435 கனஅடியாக சரிவு

சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,435 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக உள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

ஐ.பி.எல்-லில் ஓய்வு… சி.எஸ்.கே-வில் புதிய பொறுப்பு… மறு அவதாரம் எடுக்கும் பிராவோ!

ஐ.பி.எல்-லில் ஓய்வு… சி.எஸ்.கே-வில் புதிய பொறுப்பு… மறு அவதாரம் எடுக்கும் பிராவோ! Source link

புழல் சிறையில் மூன்று நாட்களில் இரு கைதிகள் உயிரிழப்பு.!!

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சாகுல் மீரான் என்பவர் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய போதை பொருள் கடத்த தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி புழல் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் இன்று காலை சாகுல் மீரானுக்கு மூச்சுத் திறன் ஏற்பட்டதால் சிறை துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சாகுல் மீரானை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் … Read more

பிரபல பாடகரின் ட்விட்டர் கணக்கு முடக்கம்.. எலான் மஸ்க் விளக்கம்..!

பிரபல ஹாலிவுட் ராப் இசைப் பாடகர் கன்யே வெஸ்ட் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டதால் அவருடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார். அமெரிக்காவின் பிரபல ராப் இசை பாடகர் கன்யே வெஸ்ட். பல முறை கிராமி விருதுகளை வென்ற இவருக்கு பல்லாயிரக்காணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டதால் அவருடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இவர், ஹிட்லர் மற்றும் நாசிசவாதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களையும், எலான் மஸ்க் – கன்யே வெஸ்ட் … Read more

ஸ்டான்லி மருத்துவமனை லிஃப்டில் சிக்கிய சம்பவம் | யார் மீது தவறு? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் 

செங்கல்பட்டு: ஸ்டான்லி மருத்துவமனையில் லிஃப்ட் பழுதடைந்த நிகழ்வு சம்பந்தப்பட்ட அலுவலர்களின் தவறால் நடந்ததா அல்லது கடந்த ஆட்சியில் பெயர் தெரியாத நிறுவனத்திற்கு கான்ட்ராக்ட் கொடுத்ததால் நடந்ததா என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்; இரண்டு பொதுப் பணித்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பொதுப் பணித்துறை அமைச்சரிடம் கூறியுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செங்கல்பட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது … Read more

100% சுகப் பிரசவம் சாத்தியமா? அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை பேசுகிறாரா அமைச்சர்?

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவர்களிடம் ஆலோசிக்காமல் பொதுவெளியில் கவனக் குறைவாக கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தில் பொதுசெயலளார் இரவீந்திரநாத் கூறியுள்ளார். மகப்பேறில் 100% சுகப் பிரசவம் என்ற இலக்கை அடையும் நோக்கோடு மருத்துவர்கள் செயல்பட வேண்டும் என்ற அமைச்சர் மா சுப்பிரமணியனின் பேச்சு மருத்துவர்களுக்கு கூடுதல் அழுத்ததையும் அளிக்கும் என்பதால் அத்தகைய கருத்துகளை பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டுமென மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக நெல்லை பத்திரிக்கையாளர்கள் மன்ற்த்தில் செய்தியாளர்களை … Read more

சேகர் ரெட்டியிடம் விஜயபாஸ்கர் பெற்ற லஞ்சம் எவ்வளவு? வருமானவரித்துறை பகீர் தகவல்

கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-12 ம் ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரைக்குமான காலத்துக்கு 206 கோடியே 42 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கியை வசூலிக்கும் வகையில், புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களை முடக்கியும், மூன்று வங்கிக் கணக்குகளை முடக்கியும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் … Read more

ஸ்கூட்டரில் சென்ற மாணவி சிறுத்தை பாய்ந்து படுகாயம்

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஸ்ரீ மதுரை ஊராட்சி ஏச்சம் வயல் பகுதியில் வசிப்பவர் ராஜூ கூலித் தொழிலாளி. இவரது மகள் சுசீலா (18). கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறார். மேலும், அங்குள்ள ஜவுளிக்கடையில் பகுதி நேர வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வேலை முடிந்து தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பினார். புத்தூர் வயல் பகுதிக்கு முன்பு உள்ள தனியார் மருத்துவமனை பகுதியில் சென்றபோது, சாலை … Read more