இந்து அறநிலைத்துறை கோவிலை விட்டு வெளியேற வேண்டும்! தமிழக அரசுக்கு சுப்பிரமணிய சுவாமி எச்சரிக்கை!

சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கின் தீர்ப்பின்படி இந்து சமய அறநிலை துறை வெளியேற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “கடந்த 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் சிதம்பரம் பொது தீட்சரவர்கள் சீர்மரபினர் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் 1951ல் உறுதி செய்ததை மீண்டும் பரிசீலிப்பதற்கு இடமே இல்லை என … Read more

பெண் யூ-டியூபருக்கு பாலியல் தொல்லை: 2 பேர் கைது

மும்பையில் தென் கொரியாவை சேர்ந்த பெண் யூ-டியூபருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்கொரியாவை சேர்ந்த பிரபல யூ-டியூபர் ஹியோஜியோங் பார்க், கடந்த மாதம் மும்பைக்கு வந்திருந்தார். இவர் மும்பையை சுற்றி பார்த்து பல வீடியோக்களை பதிவு செய்து உள்ளார். இந்தநிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் கர் பகுதியை வீடியோ எடுத்து யூ-டியூபில் நேரலை செய்து கொண்டு இருந்தார். அப்போது, அங்கு சென்ற ஒரு இளைஞர் பெண் யூ-டியூபருக்கு தொல்லை கொடுக்க … Read more

இந்திய கடலோர காவல்படையில் நவீன எம்.கே.3 ரக ஹெலிகாப்டர் இணைக்கப்பட்ட புதிய படை பிரிவு

சென்னை: கிழக்குப் பிராந்திய கடலோர காவல்படையில் அதிநவீன இலகு ரக எம்கே-3 என்ற ஹெலிகாப்டர் இணைக்கப்பட்ட 840 என்ற படைப் பிரிவை இந்திய கடலோர காவல்படை இயக்குநர் ஜெனரல் வி.எஸ்.பதானியா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். ‘ஆத்ம நிர்பார்’ திட்டத்தின்கீழ், இந்திய ஏரோநாட்டிக்கல் நிறுவனம் சார்பில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஹெலிகாப்டரில் அதிநவீன ரேடார் கருவிகள், எக்ட்ரோ ஆப்டிக்கல் சென்சார் கருவிகள், அதிக திறன் கொண்டதேடுதல் விளக்கு, அதிநவீனதகவல் தொடர்பு சாதனங் … Read more

தென் மாநிலங்கள் இருளில் மூழ்கலாம்! பயமுறுத்தும் நெய்வேலி நிலக்கரி சுரங்கம்

நெய்வேலி: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின், இரண்டு சுரங்கங்களில் நிலக்கரி வெட்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மின்சார உற்பத்தியில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் திறந்தவெளி சுரங்கத்தின் மூலமாக நிலக்கரி வெட்டப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. நெய்வேலியில் சுரங்கம் ஒன்று, சுரங்கம் ஒன்றின் விரிவாக்கம், சுரங்கம் இரண்டு என மூன்று சுரங்கங்களில் இருந்து நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.  … Read more

இறந்தவரின் உடலை பிணவறையில் வைக்க ரூ.500 லஞ்சமா? – அரசு மருத்துவமனையின் அவலம்

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடலை பிணவறையில் வைக்க மருத்துவ உதவி பணியாளர் ரூ.500 லஞ்சம் வாங்கியதாக அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தோட்டக்கார தெருவில் வசித்து வந்தவர் மனோகரன் (68). இவருக்கு நுரையீரலில் பிரச்னை இருந்தால் கடந்த ஆறுமாத காலமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து … Read more

நாளை (03.12.2022) அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

நாளை (டிசம்பர் 3ம் தேதி) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு நாளை ( டிசம்பர் 3ஆம் தேதி) அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை … Read more