மக்களே எச்சரிக்கை..!! கேரளாவில் தட்டம்மை நோய் பரவல்… 160 பேருக்கு தொற்று உறுதி!!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந் தொற்று, பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. இப்போது தான் கொரோனாவுக்கு பின் உலகம் மெல்ல இயல்பு நிலையை நோக்கித் திரும்பி வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக குரங்கம்மை, தக்காளி காய்ச்சல் போன்ற புதுப்புது நோய்கள் உருவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில், புதிதாக தட்டம்மை என்ற வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. கேரளா முழுவதும் வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், … Read more

வழக்கு நிலுவை | மேகதாது அணைக்கு அனுமதி கோருவது சரியல்ல?: ராமதாஸ் கண்டனம்

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதியளிக்கக்கூடாது என்று மத்திய அரசிடம் தமிழகம் வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்குத் தேவையான அனுமதிகளை விரைவாக வழங்க வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேரில் வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் … Read more

கோவில்களின் பெயரில் இணையதளங்கள் தொடங்கி மோசடி: தீர்ப்பு ஒத்திவைப்பு!

கோவில் இணையதளங்கள் குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உத்தரவாக பிறப்பிக்க உள்ளதாக கூறி வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தது உயர் நீதிமன்ற மதுரை கிளை. தமிழகத்தில் உள்ள சென்னை கபாலீஸ்வரர் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர், திருச்சி ஸ்ரீரங்கம் கோவில், பழனி முருகன் கோவில், சென்னை வடபழனி, ஆண்டாள் கோவில் , பார்த்தசாரதி கோவில் பெயர்களில் போலி இணையதளம் தொடங்கி காணிக்கை வசூலில் மோசடி நடைபெற்றுள்ளதாக ராமநாதபுரத்தை சேர்ந்த … Read more

கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அருப்புக்கோட்டையில் பொதுமக்கள் தீக்குளிக்க முயற்சி: போலீசார் குவிப்பு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மணி நகரில் கோயிலை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிமக்கள் தீக்குளிக்க முயன்றனர். அவர்களுடன், அதிகாரிகள் மற்றும் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பதற்றத்தை தடுக்க 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மணி நகரம் உச்சி செட்டி தெருவில் சந்தன மாரியம்மன் கோயில் உள்ளது. 30 வருடங்களுக்கு முன்பு இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கோயில் இடையூறாக உள்ளது என தனிநபர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு … Read more

”சசிகலா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா?”.. உத்தரவு ஒத்திவைப்பு

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என்ற சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி, சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, தனி நீதிபதி விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த மனு மீதான உத்தரவை, சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி. தினகரனும், அ.தி.மு.க. பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். … Read more

#தமிழகம் | மக்காச்சோள பயிரின் ஊடுபயிராக கஞ்சாவை பயிரிட்ட விவசாயி கைது!

சத்தியமங்கலம் அருகே மக்காச்சோள பயிரின் ஊடுபயிராக கஞ்சாவை பயிரிட்ட விவசாயியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் கிராம மலைப்பகுதியில் கஞ்சா செடி பயிரிடப்படுவதாக வனத்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகளும், போலீசாரம் சோதனை மேற்கொண்டதில், விவசாயி பழனிச்சாமி என்பவரின் வீட்டின் பின்புறம் உள்ள விளைநிலத்தில் மக்காச்சோளத்துடன் ஊடுபயிராக கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டது தெரியவந்தது. சுமார் 40 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த … Read more

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் விவகாரம்: ஆளுநரைக் கண்டித்து கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்: ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் நலச் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் … Read more

ஆறிய சோற்றை கிளறிய அண்ணாமலை; அரசுக்கு ஆளுநர் ரவி பிறப்பித்த உத்தரவு!

சென்னையில் ‘செஸ்’ ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில், பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்து இருந்தார். மேலும் இந்த விழாவில் 180 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வந்து இருந்தார்கள். இதையடுத்து பிரதமர் பாதுகாப்புக்கு தமிழக போலீசார் தேவையான ஏற்பாடு செய்து இருந்தனர். பிரதமர் மோடிக்கு செய்யப்பட்டிருந்த இந்த பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டு இருந்ததாகவும், பிரதமர் மோடி பாதுகாப்புக்கு முக்கிய உபகரணமாக இருக்க வேண்டிய மாநில … Read more

2009 பியான் புயலில் மாயமானவர்கள் உட்பட 12 மீனவர்கள் இறந்தவர்களாக அறிவிக்கப்படுவார்களா?.. குமரி மாவட்ட அரசிதழில் அறிவித்து 5 மாதம் ஆகியது

நாகர்கோவில்: பியான் புயலில் மாயமானவர்கள் உட்பட 12 மீனவர்களை இறந்தவர்களாக அறிவிப்பது தொடர்பாக குமரி மாவட்ட அரசிதழில் அறிவித்து 5 மாதங்கள் ஆகிய நிலையில் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அரபிக்கடலில் கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ம் தேதி நள்ளிரவு உருவான பியான் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து இந்தியாவில் தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா,  உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் தாக்கிய அன்று … Read more