ஒரே நாளில் ரூ.5.11 கோடி உண்டியல் காணிக்கை!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் புரட்டாசி மாதம் 10 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 69,211 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஒரு நாள் உண்டியல் காணிக்கையாக 5 … Read more

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி எதுவும் இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு டிஜிபி விளக்கம்

சென்னை: பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, பாதுகாப்புஏற்பாடுகளில் எவ்வித குளறுபடியும் ஏற்படவில்லை என்று டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார். தமிழக காவல் துறை உளவுப் பிரிவு ஏடிஜிபிஅக். 30-ம் தேதி அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘பிரதமர்பங்கேற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் திருப்திகரமாக இல்லை. அவற்றைப் பழுதுபார்க்கவோ, பயனற்றுப்போகும் கருவிகளை அப்புறப்படுத்தவோ முயற்சிக்கவில்லை. எனவே, அனைத்து மாவட்டங்கள், மாநகரங்களிலும் வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்து, அகற்றும் குழுவினரிடம் உள்ள கருவிகளை, அந்தந்த மண்டல … Read more

ஈரோடு அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள், 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்

ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள், 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த மாத ஊதியமான ரூ.21,000-ஐ ஒப்பந்த நிறுவனம் தர மறுப்பதாக புகார் எழுந்ததையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம்! தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வி ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் எரிபொருளுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் “கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்பட்ட பிறகு டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிப்பொருள்கள் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்படாததால் எரிபொருள் விலைக்கு ஏற்றார் போல் ஆட்டோ கட்டணத்தையும் ஓட்டுநர்கள் தானாகவே உயர்த்தி வசூலிக்கிறார்கள். … Read more

அதிரடி அறிவிப்பு! மார்ச் மாதத்தில் இருந்து இலவச மின்சாரம்!!

182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் சட்டசபைக்கு இன்று முதல்கட்ட வாக்குப்பதிவும், டிசம்பர் 5ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிது. கால் நூற்றாண்டுக்கு மேலாக பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத்தில், இம்முறை காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சியும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றன. குஜராத்தில் இன்று வாக்கு பதிவு நடைபெறவுள்ள நிலையில், அகமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற உறுதியாக தெரிவித்தார். வடமேற்கு மாநிலங்களில் ஒன்றான … Read more

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப மையம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 30 ஆயிரம் சதுரஅடிபரப்பில் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ‘அடுத்த தலைமுறைக்கான இணையம் 3.0’ என்ற சர்வதேச கருத்தரங்கம் சென்னையில் நேற்றுநடைபெற்றது. இதை தமிழக தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர்மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பிரதி எடுக்க முடியாத பாதுகாப்பு அம்சங்கள் (என்எஃப்டி)கொண்ட, மெய்நிகர் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ‘நேற்றுஇன்று நாளை’ என்ற காணொலியையும் அவர் வெளியிட்டார். இதில், இந்திய தொழில் … Read more

எட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப் பட்டணம், அரியலூர், பெரம்பலூர், திருச்சியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலிலும் காலை 10 மணிக்குள் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் பல இடங்களில் லேசான மழை பதிவாகியுள்ளது. டிசம்பர் ஐந்தாம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் … Read more