புதுச்சேரி | மணக்குள விநாயகர் கோயில் யானை ‘லட்சுமி’ நடைபயிற்சியில் மயங்கி விழுந்து திடீர் மரணம்: மீளா துயரில் பக்தர்கள்

புதுச்சேரி: ஓய்வில் இருந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து இன்று காலை உயிரிழந்ததால் பக்தர்கள் சோகமடைந்துள்ளனர். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு கடந்த 1996ம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி யானை வந்தது. புதுச்சேரியில் உள்ள பக்தர்களுக்கு மிகவும் நெருக்கமான யானையாக லட்சுமி திகழ்ந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மணக்குள விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் யானை லட்சுமியை தரிசிக்காமல் சென்றதில்லை. தமிழகத்தில் கோவில் யானைகளுக்கு … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை!

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். பட்டியலின மாணவரான அவரும், அவரோடு படித்து வந்த நாமக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவரும் காதலித்து வந்தனர். இதனிடையே, கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி அந்த இளம் பெண்ணுடன் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்ற கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சி ஸ்வாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில்,பிறழ் சாட்சியாக மாறிய ஸ்வாதி, ஜகோர்ட் கிளை உத்தரவின்படி கடந்த 25ம் தேதி ஆஜராகி நீதிபதிகளின் பெரும்பாலான கேள்விகளுக்கு, சரியான பதில் இல்லை. இதையடுத்து ஸ்வாதியை மீண்டும் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக ஸ்வாதியை, போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். அப்போது ஸ்வாதியை சாட்சி கூண்டில் … Read more

நெல் கொள்முதல் முறைகேட்டில் ரூ.1.5 கோடி சுருட்டிய திமுக பிரமுகர்! அதிகாரிகள் உட்பட 30 பேர் அதிரடி கைது! மாஸ் காட்டும் வேலூர் சிபிசிஐடி!

நெல் கொள்முதல் முறைக்கேடு தொடர்பாக வேலூர் சிபிசிஐடி போலீசார் கடந்த ஓராண்டுக்கு முந்தைய காரீப் பருவத்தின் போது வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முறைகேடாக நெல் கொள்முதல் செய்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் விவசாயிகளிடமிருந்து குறைந்த அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. அதற்கு மாறாக வியாபாரிகள் மற்றும் தனியார் ஏஜெண்டுகளையும் இருந்து அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு திமுகவை சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகளும் உதவியுள்ளனர். வியாபாரிகள் மூலம் பெறப்படும் ஒவ்வொரு … Read more

பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் இல்லை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்

சென்னை: “பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் இல்லை. தமிழக காவல்துறையில் நவீன தொழில்நுட்பக் கருவிகளைத்தான் வைத்திருக்கிறோம். தமிழக காவல்துறையிடம் அளவுக்கு அதிகமாகவே உபகரணங்கள் உள்ளன. கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உள்ளன” என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். சென்னையில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், … Read more

மீண்டும் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

அந்தமான் கடல் பகுதிகளில் 5-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 30.11.2022 மற்றும் 01.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 02.12.2022 மற்றும் 03.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக … Read more

தமிழக விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த ரூ.40.89 கோடி பரிசு: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

திருவண்ணாமலை: தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில், 1,433 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.40.89 கோடி பரிசுத்தொகையை முதல்வர் வழங்கியுள்ளார் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 63வது குடியரசு தின தடகளப் போட்டிகள் கடந்த 25ம் தேதி தொடங்கியது. 14 முதல் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, பல்வேறு போட்டிகள் நடந்தது.  தடகளப் போட்டியின் நிறைவு விழா, திருவண்ணாமலையில்  நேற்று மாலை நடந்தது. துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி … Read more

ரூ 360 கோடி கோக்கைன் போதைப் பொருள் பறிமுதல்; சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்: இ.பி.எஸ்

ரூ 360 கோடி கோக்கைன் போதைப் பொருள் பறிமுதல்; சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்: இ.பி.எஸ் Source link

தேசிய இயக்கத்தில் இருந்த எம்ஜிஆரை திமுகவிற்கு அழைத்து வந்தவர் கருணாநிதி – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜானகி எம்ஜிஆரின் நூற்றாண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில், திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அதன் பின்னர், அவர் பேசியதாவது:  ஜானகி எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமைக்குரியவர். தமிழ் உள்ளிட்ட ஆறு மொழிகளை நன்கு அறிந்தவர் ஜானகி அம்மையார். தற்போது, ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு துவக்கவிழா நடத்துவது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். நான் மாணவராக இருந்தபோது பள்ளியில் … Read more