பிச்சை கேட்பது போல் வட மாநில பெண் செய்த செயல்.. எச்சரிக்கையான மக்கள்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் யாசகம் கேட்பது ஒவ்வொரு வீட்டிற்கும் சென்ற ஒரு வட மாநில பெண் அடையாளபடுத்தும் விதமாக மார்க் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த மக்கள் அவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கன்னியாகுமரி அருகே நித்திரவிளை பகுதியில் அமைந்துள்ள நம்பாளி சுற்றுவட்டார பகுதியில் ஒரு வட மாநில பெண் வீடு வீடாக சென்று யாசகம் கேட்டு கொண்டு இருந்தார்.  பின், சில வாசல்களில் ரகசியமாக குறீயீடு போட்டுவிட்டு சென்றுள்ளார். இதன் காரணமாக சந்தேகமடைந்த … Read more

வரும் 1ம் தேதி அறிமுகமாகிறது டிஜிட்டல் ரூபாய்.. இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

வருகின்ற டிசம்பர் 1-ம் தேதி முதல் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2022 மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்நிலையில், டிஜிட்டல் ரூபாய் வெளியீடு குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாயும் சில்லறைப் பணப் பரிவர்த்தனைகளுக்காக டிசம்பர் 1-ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் … Read more

சென்னை மாநகராட்சியின் ரூ.2,200 கோடி வருவாயில் ரூ.489 கோடி மட்டுமே வசூல்: கணக்கு குழுத் தலைவர் அதிர்ச்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி தனது மொத்த வருவாய் ரூ.2200 கோடியில் ரூ.489 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாக கணக்கு குழுத் தலைவர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று (நவ.29) நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் பேசிய கணக்கு துறையின் நிலைக்குழு தலைவர் தனசேகரன், சென்னை மாநகராட்சியின் நிலம் மற்றும் உடைமைத் துறை மற்றும் வருவாய் துறையின் செயல்பாடுகள் குறித்து பேசினார். அவரது கூறிய தகவல்களின் முக்கிய அம்சங்கள்: நிலம் மற்றும் உடைமைத்துறையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 446 … Read more

சேலம்..கோவை பயணிகள் ஷாக்; முக்கிய ரயில்கள் திடீர் ரத்து!

சென்னை எழும்பூர் மற்றும் எம்ஜிஆர் சென்ட்ரலில் இருந்து சேலம், கோவை செல்லும் முக்கிய விரைவு ரயில்களை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதன் காரணமாக கீழ்க்காணும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி: சென்னை எழும்பூர் – சேலம் (வண்டி எண்: 22153) இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், நாளை (புதன்கிழமை) 1, … Read more

பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியமானது: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியமானது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. பாலியல் துன்புறுத்தல்கள் குழந்தைகளின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புகார் குழுக்களை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல் என்பது குழந்தையின் கண்ணியம், ஆளுமை மீது தாக்குதலை ஏற்படுத்தி அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கிறது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் பள்ளிகளில் புகார் குழுக்களை உருவாக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலியல் … Read more

1983-2021 வரை 1,635 ஊழல் வழக்குகள் நிலுவை – உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

தமிழகம் முழுவதும் கடந்த 1983-ம் ஆண்டு முதல் 2021 வரை 1,635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில் நடத்துநராக பணியாற்றிய அண்ணாதுரை என்பவர், 2018-ம் ஆண்டு ஓய்வுபெற்ற நிலையில், இதுவரை தனக்கு வழங்க வேண்டிய ஓய்வு பலன்களை வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த … Read more

வங்கி கணக்கு முடக்கம்.. ‘தொகுதிக்கு செலவு செய்ய முடியவில்லை’ – சி. விஜயபாஸ்கர்

வங்கி கணக்கு முடக்கம்.. ‘தொகுதிக்கு செலவு செய்ய முடியவில்லை’ – சி. விஜயபாஸ்கர் Source link

கோவை : கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களுக்கு தடை.!

கோயம்பத்தூர் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்தி குறிப்பில் அவர் தெரிவித்திருப்பதாவது:- “கோவை மாநகராட்சி பகுதிகளில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் தடைச்சட்டம் கடந்த 2013-ன் படி பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை ஈடுபடுத்துவதற்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், இந்த பணிகளை மேற்கொள்வதற்காக கோவை மாநகராட்சி சார்பில் போதுமான கழிவுநீர் உறிஞ்சி வாகனங்கள் மற்றும் எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது. எனவே, மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள மத்திய … Read more

ரூ.360 கோடி மதிப்பிலான ‘கோகைன்’ பறிமுதல்: திமுக பிரமுகர்கள் கைது..!

ராமேஸ்வரம் அருகே, இலங்கைக்கு கடத்த முயன்ற 360 கோடி ரூபாய் மதிப்பிலான ‘கோகைன்’ போதைப் பொருளை கடற்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, கீழக்கரை நகராட்சி திமுக கவுன்சிலர், முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே, மண்டபம் – வேதாளை சாலையில் நேற்று முன்தினம் இரவு கடற்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேகமாக சென்ற சொகுசு காரை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அதில், 20 லிட்டர், 30 … Read more

2019 – 2020 கலைமாமணி விருதுகளை ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் 

மதுரை: தமிழகத்தில் 2019 – 2020 ஆண்டிற்கான கலைமாமணி விருதுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையைச் சேர்ந்த சமுத்திரம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கலை இளமணி, 19 முதல் 35 வயது வரை கலை வளர்மதி, 36 முதல் 50 வயது … Read more