தமிழை 2வது மொழியாக வடகிழக்கு மாநிலங்களில் அறிமுகப்படுத்த முயற்சி – ஆளுநர் ஆர்.என் ரவி

தமிழ் மொழியை இரண்டாவது மொழியாக வடகிழக்கு மாநிலங்களில் அறிமுகப்படுத்த அம்மாநில முதல்வர்களோடு பேசி வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும், திருக்குறளை மற்ற மாநிலங்களில் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் சிறப்பு விருதுநராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், ”இந்தியாவின் உருவாக்கத்திற்கு அடித்தளம் இட்ட பெருமை தமிழகத்தை பெரிதும் சாரும். புத்தக அறிவு … Read more

தமிழகத்தில் மோடி பாதுகாப்பில் குளறுபடி… செயல்படாத ‘மெட்டல் டிடெக்டர்’கள்: ஆளுனரிடம் அண்ணாமலை புகார்

தமிழகத்தில் மோடி பாதுகாப்பில் குளறுபடி… செயல்படாத ‘மெட்டல் டிடெக்டர்’கள்: ஆளுனரிடம் அண்ணாமலை புகார் Source link

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் – முழு விவரம்!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தொலைதூரபயணிகளின் வசதிக்காக கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான அந்த அறிவிப்பில், தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை. மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்துகள், இருக்கை … Read more

குரூப் 1 தேர்வுக்கான அதிகாரபூர்வ விடைகள் வெளியீடு..!

நவம்பர் 19-ம் தேதி நடைபெற்ற குரூப் 1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகளை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குநர் ஆகிய குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டு இருந்தது. முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில், முதல்நிலைத் தேர்வு கடந்த நவம்பர் … Read more

சென்னை – மெரினா கடற்கரையில் விரைவில் இலவச வைஃபை சேவை

சென்னை: சென்னை – மெரினா கடற்கரையில் இலவச வைஃபை சேவையை வழங்கவுள்ளது சென்னை மாநகராட்சி. இதற்கு மாமன்றத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 49 இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் கம்பங்கள் மூலம் பொதுமக்களுக்கு 30 நிமிடம் இலவச வைஃபை வழங்கப்படுகிறது. 15-வது மண்டலம் தவிர்த்து அனைத்து மண்டலங்களிலும் இந்த வசதி நடைமுறையில் உள்ளது. இதைத் தவிர்த்து சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் … Read more

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி சாலையாக விரிவாக்க வேண்டும்: அன்புமணி

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி விரைவுச்சாலையாக விரிவாக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: சென்னை – திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 ஆண்டுகளில் 6,131 விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன; அவற்றில் 2,076 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்ற புள்ளிவிவரம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. உயிர்களை பலிவாங்கும் சாலையாக மாறியுள்ள இந்த … Read more

30 கிமீ தூரம் வரை பயணிக்க அனுமதி கேட்டு நீலகிரியில் ஆட்டோ டிரைவர்கள் வேலைநிறுத்தம் – பேரணி

ஊட்டி:  ஆட்டோக்கள் பயணிக்கும் தூரத்தை அதிகரிக்க வலியறுத்தி நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஆட்டோ டிரைவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். ஊட்டியில் பேரணியில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர் மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் ஆட்டோக்கள் குறிப்பிட்ட தூரம் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்டோக்கள் … Read more

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் லிப்டில் சிக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு திட்டங்கள் தொடக்க விழாவிற்கு வருகை தந்த மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் லிப்டில் மாட்டிக்கொண்டார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், கை சிறப்பு மற்றும் அறுவை சிகிச்சை துறை கட்டிடத்திற்கு வருகை தந்தார். நிகழ்ச்சியின் நிறைவுக்கு பிறகு மூன்றாவது தளத்திலிருந்து தரைத்தளத்திற்கு வருகை தந்த அவர் லிப்டில் பயணம் செய்யும்போது எதிர்பாராத விதமாக லிப்டின் இயக்கம் தடைப்பட்டது. செய்வதறியாது திகைத்து நின்ற அமைச்சர் மற்றும் … Read more

கோவை அருகே சோகம்.! மனைவியை மிரட்டுவதற்காக தீக்குளித்த கணவர் உயிரிழப்பு.!

கோவை மாவட்டத்தில் மனைவியை மிரட்டுவதற்காக தீக்குளித்த கணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சின்கோனா பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி பாலகிருஷ்ணன் (43). இவருடைய மனைவி மாதவி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் பாலகிருஷ்ணன் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். அப்பொழுது மனைவியிடம் அடிக்கடி தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி மிரட்டியும் வந்துள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் … Read more