கூகுள் மேப்பை பார்த்தவாறு காரை ஓட்டி கழிவுநீர் வாய்க்காலில் இறங்கிய நபர்! மேப் பரிதாபங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் கூகுள் மேப்பை பார்த்தவாறு பயணம் செய்ததால், கழிவு நீர் வாய்க்காலில் கார் இறங்கி விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் தனது குடும்பத்தினருடன் திருக்கோவிலூர் அருகே உள்ள ஸ்ரீ ஞானானந்தகிரி தபோவனம் மடத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்து நேற்று இரவு கூகுள் மேப் உதவியுடன் கீழையூர் பகுதியில் உள்ள வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் தபோவனம் மடத்திற்கு செல்ல கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ளார். இந்நிலையில், கோவிலில் இருந்து நேராக சென்று … Read more

ராமநாதபுரம் : தண்ணீர் கேன்களில் இருந்தது என்ன? – விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அருகே வேதாளை கடற்கரை சாலையில் நேற்று இரவு கடலோர போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.  அப்போது அந்த காரில் சுமார் 25 லிட்டர் தண்ணீர் கேன்கள் முப்பது இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.  இந்த சம்பவம் குறித்து போலீசார் தெரிவித்ததாவது, “காரில் இருந்த ஜெயினுதின் … Read more

கனடாவில் இந்திய மாணவர் சாலையை கடந்தபோது நிகழ்ந்த சாலை விபத்தில் பலி ..!!

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் தலைநகரான டொராண்டோவில் ஷெரிடன் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் அரியானா மாநிலம் கர்னால் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் சைனி (20) என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி மாலை 4.30 மணியளவில் யங் ஸ்ட்ரீட் மற்றும் செயின்ட் கிளேர் ஆவென்யூ சந்திப்பில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அங்கு கார்த்திக் சாலையை கடக்க முயன்றபோது வேகமாக வந்த லாரி ஒன்று அவர் மீது பயங்கரமாக … Read more

ஸ்ரீரங்கம் கோயில் பகுதியில் விதிமீறல் கட்டிடங்கள்: மாநகராட்சி ஆணையர், செயல் அலுவலர் டிச. 1-ல் நேரில் ஆஜராக உத்தரவு

மதுரை: ஸ்ரீரங்கம் கோயில் பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கக்கோரிய வழக்கில் திருச்சி மாநகராட்சி ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் டிச. 1-ல் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த மகுடேஸ்வரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு. தமிழகத்தில் பழமையான கோயில்களில் கோயில் கோபுரத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் 9 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடங்கள் கட்டக்கூடாது என அரசாணை உள்ளது. இந்த அரசாணையை மீறி … Read more

வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் அவசர கடிதம்… விஷயம் இதுதான்!

தமிழக முதல்வர் , வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதி உள்ளார். அதில், ’28-11-2022 அன்று 23 மீனவர்களும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 221 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக மீனவ சமூகத்தினரிடையே கடுமையான மன அழுத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே … Read more

4 பெண் குழந்தைகளின் தாய் பலாத்காரம் செய்து கொலை?… உறவினர்கள் சாலை மறியல்

கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி ஊராட்சி தெற்கு பல்லவராயன்பத்தை கிராமத்தை சேர்ந்தவர் திருச்செல்வம்(38). இவரது மனைவி பழனியம்மாள்(35). திருச்செல்வம் மலேசியாவில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உளளனர். இந்த நிலையில் கடந்த 23ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பழனியம்மாள் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பழனியம்மாளின் தந்தை தங்கவேல் கடந்த 25ம் தேதி கறம்பக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து பழனியம்மாளை தேடி வந்தனர். … Read more

பெற்றோரைக் கொன்று சமைத்து சாப்பிட்ட மகன்.! கும்பகோணத்தில் பரபரப்பு.!

கும்பகோணம் அருகில் உள்ள திலயம்பூர் பகுதியில் லட்சுமி – கோவிந்தராஜ் என்ற தம்பதிக்கு ராஜேந்திரன் எனும் மகன் இருக்கின்றார். ராஜேந்திரன் மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த ராஜேந்திரன் சில நாட்களுக்கு முன் தாய் மற்றும் தந்தை இருவரையும் கொலை செய்துவிட்டு அந்த உடல்களை வீட்டில் வைத்துக்கொண்டு இருந்துள்ளார்.  அத்துடன் அதே வீட்டில் சமைக்கும் சாப்பிட்டு வந்துள்ளார். அந்த வழியே நடந்து சென்ற பொது மக்களுக்கு மோசமான துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அவர்கள் சந்தேகம் அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.  … Read more

6-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவன் தற்கொலை..!!

சென்னை அடுத்த வண்டலூர் – கேளம்பாக்கம் பிரதான சாலையில் மேலகோட்டையூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த புட்டாளா ஓம் கிரிஸ் என்பவர் பிடெக் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த மாணவன் கல்லூரியின் 6-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இதனைப்பார்த்த கல்லூரி மாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மாணவனை கேளம்பாக்கத்தில் … Read more