பயிர் சாகுபடி காலத்தில் ஊரக வேலை திட்ட பணிகளை நிறுத்த விவசாயிகள் கோரிக்கை

கோவில்பட்டி: பயிர் சாகுபடி காலத்தில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளை நிறுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கடந்த 2007ம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள 45 மாவட்டங்களில் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமப்புறங்களில் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் வேலைவாய்ப்பின்றி கிராமப்புற மக்கள் பிழைப்புக்காக நகரங்களுக்கு புலம்பெயர்வதை தடுத்து அவர்களுக்கு அந்தந்த கிராமங்களிலேயே வேலையை உறுதிபடுத்துவதே ஆகும். இத்திட்டத்தில் மரக்கன்று … Read more

"ஒங்க வீட்டுல கோளாறு இருக்கு: தோஷம் கழிக்கணும்" – மோசடி சாமியாருக்கு விழுந்த தர்ம அடி!

தோஷம் கழிப்பதாகக் கூறி பெண்ணிடம் ஏமாற்றி வந்த போலி சாமியாருக்கு தர்ம அடி கொடுத்ததால் மத்தூர் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை அடுத்த, நரவந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நளினி (45). இவர் நத்தம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த வருடம் நளினி வீடு வழியே சென்ற போலி சாமியார் ஒருவர் நளினியிடம் வீட்டில் செய்வினை செய்திருப்பதாகவும், அதன் காரணமாக தொடர்ந்து கஷ்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதில் ஏமார்ந்துபோன நளின், … Read more

தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!

சென்னையில் தனியார் கல்லூரியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவன் 6ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வண்டலூர் – கேளம்பாக்கம் சாலை மேலகோட்டையூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில், மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த புத்தாலா ஓம்கிரீஸ் என்ற மாணவன் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அவர் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது, பாதியிலேயே வகுப்பறையில் இருந்து வெளியேறினார். பின்னர் புத்தாலா ஓம்கிரீஸ், திடீரென கல்லூரி வளாகத்தின் 6ஆவது மாடியில் … Read more

கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணிக்கிறது தெற்கு ரயில்வே – சிபிஐ குற்றச்சாட்டு

சென்னை: நாகை, திருவாரூர் மாவட்ட மக்கள் ரயில்வே துறையிடம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ்நாட்டு மக்கள் நலனை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. குறிப்பாக மத்திய அரசின் இரயில்வே அமைச்சகமும், தெற்கு இரயில்வே நிர்வாகமும் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகின்றன. நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம், சில ரயில்களின் … Read more

தமிழகத்தில் இனி ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநர் தான் காரணம் – அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு!

ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் அரசியல் செய்யாமல் இன்றுக்குள் கையெழுத்திட வேண்டும் எனவும், இனி தமிழகத்தில் ஒரு தற்கொலை நடந்தாலும் அதற்கு ஆளுநர்தான் காரணம் எனவும் தலைவர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான அவசர சட்ட மசோதா, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் தலைமையில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் … Read more

வீச்சு அரிவாளுடன் கொள்ளையடிக்க வரும் கொலைகார கும்பல்! பீதியில் நாமக்கல் மக்கள்

நாமக்கல் நகராட்சி 3-வது வார்டு பகுதியான சாய் நகர், பிருந்தா நகர் பகுதியில் நேற்று நள்ளிரவில்  கொள்ளையர்கள் இருவர் வீச்சு அரிவாளுடன் அப்பகுதிகளில் உள்ள வீடுகளின் ஜன்னல் மற்றும் கண்ணாடிகளை உடைத்து திருட முயற்சித்துள்ளனர். திருடர்களை கண்ட அப்பகுதி பொதுமக்கள் சத்தம் போட்டதை அடுத்து கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பியுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    அந்த காட்சிகளில் இரண்டு திருடர்கள் அரை நிர்வாணத்துடன் முகமூடி அணிந்தவாறு கையில் வீச்சு அரிவாளுடன் வீடுகளின் … Read more

விருதுநகர்- சிவகாசி சாலையில் விபத்தை ஏற்படுத்தும் ஆபத்தான பாலத்தின் தடுப்பு சுவர் சீரமைப்பு: வாகனஓட்டிகள் மகிழ்ச்சி

சிவகாசி: திருவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி, விருதுநகர், அருப்புகோட்டை, நரிக்குடி, பார்த்தீபனூர் வரையிலான 122 கி.மீட்டர் வரையிலான மாநில நெடுஞ்சாலை, சிவகாசி-விருதுநகர் வரையிலான 27 கி.மீட்டர் சாலை பராமரிப்பு பணிகளும் தனியாரிடம் வழங்க பட்டிருந்தது. சிவகாசி-விருதுநகர் சாலையில் 7 மீட்டர் வரை அகலப்படுத்த பட்டது. அப்போது சிறிதாக இருந்த பல பாலங்களை அகற்றி புதிய பாலங்கள் போடப்படவில்லை. இதனால் சாலையை விட இந்த பாலங்கள் குறுகளாக இருந்து வருகிறது. சாலையில் பக்கவாட்டில் போடப்பட்டுள்ள எச்சரிக்கை வெள்ளை நிற கோட்டை … Read more

மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் செல்லும் நடைபாதை திறப்பு.!

சென்னையில் உள்ள சுற்றுலாத்தலங்களில் ஒன்று மெரினா கடற்கரை. இங்கு தினமும் ஏராளமான மக்கள் மன அமைதிக்காகவும், கடலின் அழகை கண்டு ரசிப்பதற்காகவும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகளும் ரசிப்பதற்காக சுமார் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில், 263 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரமும் உடைய நடைபாதை அமைக்கும் பணிகள் தமிழக அரசால் கட்டப்பட்டுள்ளது.  இந்த நடைபாதையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் சிரமம் இன்றி நடப்பதற்காக நடைபாதையின் … Read more

கடையை மூடும் அமேசான்… டிசம்பர் 29 கடைசி நாள்!!

இந்தியாவில் உணவு டெலிவரி சேவையை டிசம்பர் 29ஆம் தேதியோடு நிறுத்த அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மே 2020இல் அமேசான் இந்தியாவில் உணவு சேவையை தொடங்கியது. இந்நிலையில் வரும் மாதம் 29ஆம் தேதி சேவை நிறுத்தப்படுகிறது. அதன்படி, பெங்களூருவில் சோதனையில் உள்ள உணவு விநியோக சேவையை டிச. 29 முதல் நிறுத்துவதாக அமேசான் இ-காமர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு, வருடாந்திர செயல்பாட்டு திட்டமிடல் மற்றும் மதிப்பீட்டின் ஒரு பகுதியாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அமேசான் விளக்கம் அளித்துள்ளது.  … Read more

இந்திய வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்: பொருநை இலக்கியத் திருவிழாவில் முதல்வர் வேண்டுகோள்

திருநெல்வேலி: ‘இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணிலிருந்து எழுதப்படட்டும்’ என்று பாளையங்கோட்டையில் பொருநை இலக்கியத் திருவிழாவை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் பொருநை (தாமிரபரணி), வைகை, காவிரி, சிறுவாணி, சென்னை என ஐந்து மண்டலங்களில் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களை ஒருங்கிணைத்து முதல் விழாவாக ‘பொருநை இலக்கியத் திருவிழா’ பாளையங்கோட்டையில் நேற்று … Read more