திருக்குறளை மொழி பெயர்த்த எல்லீசுக்கு மணிமண்டபம் அமைக்க கோரி வழக்கு: முதன்மை செயலர்கள் பதிலளிக்க உத்தரவு

மதுரை: திருக்குறளை மொழி பெயர்த்த எல்லீசுக்கு மணிமண்டபம் அமைக்கக் கோரிய வழக்கில், முதன்மை செயலர்கள் பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கிழக்கிந்திய ஆட்சி காலத்தில் கடந்த 1810ல் சென்னை கலெக்டராக இருந்தவர் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ். சென்னை மக்களின் குடிநீர் பிரச்னைக்காக ஏராளமான கிணறுகளை வெட்டினார். தமிழ் மொழி மீதான ஆர்வத்தால் தமிழில் எழுதவும், படிக்கவும் … Read more

டிச.4 டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. பிரதமரை தனியாக சந்திக்க திட்டம்?

டிச.4 டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.. பிரதமரை தனியாக சந்திக்க திட்டம்? Source link

மத்திய தொழிலாளர் விரோத சட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த அதிகாரிகள் முயற்சி: இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

கும்பகோணம்: மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த அதிகாரிகள் முயற்சிக்கின்றனர் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். கும்பகோணத்தில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தமிழகஅரசு உரிய கால அவகாசம் வழங்கி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதேபோல, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவித்துள்ளது, வாக்காளர்களைக் குறைக்க முயற்சிக்கும் சதியோ … Read more

புள்ளி விவரங்களை அப்படியே வாசிக்கும் பொம்மை முதல்வர்… ஸ்டாலினை விளாசிய இபிஎஸ் டீம் மேட்!

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும், நலன்களையும் பேணி காத்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் அனைத்து நாடுகளும் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள், மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் பார்வை குறைபாடு உடையவர்கள் பாதுகாப்பாக சாலையினை கடப்பதற்கு ஏதுவாக குரல் ஒழிப்பான், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் வாழ்க்கையை சிறப்புற அமைக்கும் வகையில் தக்க ஆலோசனை வழங்குவதற்கு, இந்தியாவிலேயே … Read more

வேலைவாய்ப்பு உறுதிபடுத்தும் சட்டம் இயற்றப்படுமா? பதிலளிக்காமல் சென்ற பிடிஆர்!

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக நிதியமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு சென்று நேரடியாக அவர்களை சந்தித்து பேசி நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இந்த நிலையில் மத்திய தொகுதிக்குட்பட்ட மகபூப்பாளையம், எல்லீஸ்நகர், திடீர்நகர், தத்தனேரி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளி பயனளிகளுக்கு முதல்வரின் மருத்துவகாப்பீட்டு திட்டத்தின் கீழ் செயற்கைக்கால் மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை, அதிநவீன வாகனம் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார்.  பின்னர், அவர்களிடம் கலந்துரையாடிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், … Read more

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லை: வைகை அணை நீர்மட்டம் சரிவு

ஆண்டிபட்டி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், வைகை அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம், இந்தாண்டில் இரு முறை முழுக்கொள்ளளவை எட்டியது. குறிப்பாக தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்ததால் அணை நீர்மட்டம் கடந்த 3 மாதங்களாக குறையவே இல்லை. இதன்காரணமாக வைகை அணையில் இருந்து முதல்போகம், ஒருபோகம், 58ம் கால்வாய் மற்றும் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் அதிகமான நீர்வரத்தால் உபரிநீரும் … Read more

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் படகுப்போட்டி.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கட்சி நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர்.  இந்த நிகழ்ச்சிகளை 1 மாதம் அளவுக்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இவரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் திமுக சார்பில் படகுப்போட்டி நடைபெற்றது.  இந்த போட்டியில், ஒவ்வொரு படகிலும் நான்கு பேர் … Read more

மூணாறில் உள்ள தமிழர் வீடுகளை அகற்ற முயல்வதா? – கேரள அரசுக்கு ராமதாஸ் கண்டனம் 

சென்னை: எல்லை அளவீடு என்ற பெயரில் மூணாறில் உள்ள தமிழர்களின் வீடுகளை அகற்ற முயலும் கேரள அரசின் செயல் கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கேரளத்தின் எல்லைகள் டிஜிட்டல் முறையில் மறு அளவீடு செய்யப்பட்டு வருவதாக அறிவித்திருக்கும் கேரள அரசு, அதன் ஒரு கட்டமாக மூணாறில் வாழும் தமிழர்களின் வீடுகளை காலி செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படும் எல்லை அளவீடு சட்டவிரோதம் … Read more

மூணாறில் வாழும் தமிழர்களின் வீடுகளை காலி செய்ய ஆணை -கொந்தளிக்கும் ராமதாஸ்

மூணாறில் வாழும் தமிழர்களின் வீடுகளை காலி செய்ய அம்மாநில அரசு ஆணையிட்டிருப்பதை தடுக்கக்கோரி தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; கேரளத்தின் எல்லைகள் டிஜிட்டல் முறையில் மறு அளவீடு செய்யப்பட்டு வருவதாக அறிவித்திருக்கும் கேரள அரசு, அதன் ஒரு கட்டமாக மூணாறில் வாழும் தமிழர்களின் வீடுகளை காலி செய்ய ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படும் எல்லை அளவீடு சட்டவிரோதம் எனும் நிலையில், அதைக் காரணம் காட்டி … Read more