அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் முருகர் தேர் வெள்ளோட்டம்: பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு

திருவண்ணாமலை நகரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 15 லட்சம் மதிப்பீட்டில் புதுபிக்கப்பட்ட முருகர் தேர் வெள்ளோட்டம் சிறப்பு பூஜை செய்து நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகர் தேரை வடம் பிடித்து கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்று பக்தி பரவசத்துடன் திருக்கோவிலில் நான்கு மாட விதிகளை சுற்றி இழுத்து வழிபட்டு வருகின்றனர். அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் 10 நாட்கள் … Read more

ராணிப்பேட்டை அருகே இரவுக்காவலர் வீட்டில் நகை, பணம் திருடியதும் வீட்டிற்கு தீ வைத்து தப்பிய கும்பல்-போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை :  ராணிப்பேட்டை அருகே நேற்று இரவுக்காவலர் வீட்டில் நகை பணம் திருடிவிட்டு, வீட்டிற்கு தீ வைத்துவிட்டு தப்பி சென்ற மர்ம கும்பலை சிப்காட் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு கிராமம் புதிய தெருவை சேர்ந்தவர் கந்தசாமி(73). இவர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் இரவுக்காவலராக பணி செய்து வருகிறார். இவரது மனைவி துர்கா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகள் தனது கணவருடன் திருத்தணியில் வசித்து … Read more

‘பாக்,. பங்கேற்காவிட்டால் இந்தியா நடத்தும் உலகக் கோப்பையை யார் பார்ப்பார்கள்?’: ரமீஸ் ராஜா கேள்வி

‘பாக்,. பங்கேற்காவிட்டால் இந்தியா நடத்தும் உலகக் கோப்பையை யார் பார்ப்பார்கள்?’: ரமீஸ் ராஜா கேள்வி Source link

ஆடை அணியாவிட்டாலும் பெண்கள் அழகுதான்.. சர்ச்சையை கிளப்பிய பாபா ராம்தேவ்..!

பெண்கள் எதையும் அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள் என்று, தேவேந்திர ஃபட்னாவிஸ் மனைவி முன்னிலையில் யோகா குரு பாபா ராம்தேவ் கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் தானேயின் ஹைலேண்ட் பகுதியில், பதஞ்சலி யோகா பீடம் மற்றும் மும்பை மகிளா பதஞ்சலி யோகா சமிதி சார்பில் யோகா அறிவியல் முகாம் மற்றும் மகளிர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ரிதா ஃபட்னாவிஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகனும் எம்பியுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே … Read more

தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ்

சென்னை: தமிழீழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” தமிழர்களுக்கென ஒரு தனி நாடாக தமிழீழம் அமைக்கும் முயற்சியில் இன்னுயிர் ஈந்த ஈழப்போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் நவம்பர் 27ம் நாள் மாவீரர் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் ஈழ விடுதலைக்காக உயிர்த்தியாகம் செய்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம். இலங்கையின் களச்சூழல் மாறியிருக்கலாம். ஆனால், தனித்தமிழ் ஈழத்திற்கான … Read more

முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்: மோடியை சந்திக்க திட்டம்?

முதல்வர் ஸ்டாலின் வரும் டிசம்பர் 4ஆம் தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். 2023ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜி-20 மாநாடு முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்க டிசம்பர் 5ஆம் தேதி டெல்லியில் கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் டிசம்பர் 4ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளார். கூட்டத்தை தொடர்ந்து பிரதமர் மோடியை தனியாக சந்தித்து தமிழ்நாடு நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை முக்கிய சாலையில் 15 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்: பீதியில் மக்கள்

சென்னை: ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மூன்றாவது முறையாக பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பெரம்பூர் பகுதியில் பேரக்ஸ் சாலை ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது.  இச்சாலையில் ஏற்கனவே இருமுறை பள்ளம் ஏற்பட்டு அதிகாரிகள் பார்வையிட்டு சரி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் அதிக சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதட்டமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு வந்து பார்த்துள்ளனர். அப்போது இச்சாலையில் 15 அடி ஆழத்தில் … Read more

ரசாயன கழிவு விவகாரம்: ஈரோடு அருகே செங்குளத்தில் இரும்பு ஆலையின் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு மின் உற்பத்தி நிறுத்தம்..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் ஈங்கூர் செங்குளத்தில் இரும்பு ஆலையின் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஆலையில் இருந்து ரசாயனத்தை சுத்திகரிக்காமல் அப்படியே வெளியேற்றுவதாக புகார் வந்ததையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆலையை சுற்றியுள்ள பகுதியில் கோட்டாட்சியர் சதீஸ், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்திருந்தனர்.

பிரபல நகைக் கடையில் கொள்ளை – சில மணி நேரங்களில் ஒருவர் கைது: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தாம்பரம் அருகே ப்ளுஸ்டோன் தங்க நகைக்கடையில் கொள்ளைப்போன வழக்கில் கொள்ளையன் சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டார். சென்னை தாம்பரம் அடுத்த கெளரிவாக்கத்தில் உள்ள ப்ளுஸ்டோன் தங்க நகைக் கடையில் மர்ம நபர் இன்று அதிகாலை கொள்ளையடிக்க பைப் வழியாக ஏறிச் சென்று கடைக்குள் இறங்கி கொள்ளையடித்துள்ளார். கடையில் திருட்டு நடப்பது குறித்து மேலாளர் ஜெகதீசன் என்பவருக்கு தகவல் சென்றுள்ளது. உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கபட்டு சேலையூர் போலீசார் சமபவ இடத்திற்கு விரைந்து வந்து … Read more

அரசியலமைப்பு தினம்: அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர் பாதுகாப்பு மற்றும் ‘இந்தியாவின் பண்டைய அரசியல்’ பற்றி டாக்டர் அம்பேத்கர் கூறியது

அரசியலமைப்பு தினம்: அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர் பாதுகாப்பு மற்றும் ‘இந்தியாவின் பண்டைய அரசியல்’ பற்றி டாக்டர் அம்பேத்கர் கூறியது Source link