சென்னை காவல்துறை சார்பில் சைபர் ஹேக்கத்தான் அறிவிப்பு: வெற்றியாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு

சென்னை: சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சைபர் கிரைம் , சிசிடிவி பகுப்பாய்வு குறித்து ’’சைபர் ஹேக்கத்தான்’’ (Cyber Hackathon) போட்டி நடத்தப்படவுள்ளது. இந்த ’சைபர் ஹேக்கத்தான்’’ போட்டி குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பெரும்பாலான குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், குற்ற நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளவும், விபத்து, வன்முறை சம்பவங்கள் மற்றும் அசம்பாவிதங்களின்போது நிகழும் சம்பவங்களை அறியவும், பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்புக்காகவும், சிசிடிவி … Read more

கல்லூரி பேருந்தில் Rugged Girl-க்கும் ஆசிரியைக்கும் நடந்த மோதல்! வைரலாகும் வீடியோ!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரி பேருந்தில் மாணவிக்கும் ஆசிரியருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.  கல்லூரியில் இருந்து வழக்கம் போல் மாணவர்களும் ஆசிரியர்களும் பேருந்துக்குள் ஏறி செல்லும் பொழுது மாணவி அருகில் ஆசிரியை ஒருவர் அமர்ந்திருக்கிறார். அப்பொழுது அந்த மாணவி நீங்கள் யார் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த ஆசிரியை இந்த கல்லூரியின் ஆசிரியர் என தெரிவித்திருக்கிறார். ஆசிரியை என்றால் கழுத்தில் ஐடி கார்டு அணியும் படி மாணவி ஆசிரியரிடம் தெரிவித்திருக்கிறார்.  நான் எதற்கு … Read more

நடுக்கடலில் நாட்டு படகு மீது இலங்கை கடற்படை தாக்குதல் என ராமேஸ்வரம் மீனவர்கள் புகார்..!!

ராமநாதபுரம்: நடுக்கடலில் நாட்டு படகு மீது இலங்கை கடற்படை தாக்குதல் என புகார் எழுந்துள்ளது. இந்திய கடல் எல்லைக்குள்தான் மீன்பிடித்ததாகவும் ராமேஸ்வரம் மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் இந்திய கடற்படை ரோந்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த மீனவரை மற்ற மீனவர்கள் கரை சேர்த்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதுக்கோட்டை: குடும்பப் பிரச்னையில் மாமனாரை சுட்டுக் கொலை செய்த மருமகன்

கந்தர்வக்கோட்டை அருகே குடும்பப் பிரச்னை காரணமாக மாமனாரை, மருமகன் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சைவராஜ். இவரது மகள் லதாவை அதே கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். ரவிச்சந்திரன் (52) ராணுவத்தில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ள நிலையில், ரவிச்சந்திரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த ஓரு ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி லதா … Read more

சபரிமலை கோயில் பற்றி விமர்சனம்: பேராசிரியை சுந்தரவள்ளிக்கு நீதிமன்றத்தில் அபராதம்

சபரிமலை கோயில் பற்றி விமர்சனம்: பேராசிரியை சுந்தரவள்ளிக்கு நீதிமன்றத்தில் அபராதம் Source link

தாம்பரம் : பிரபல நகைக்கடையில் கொள்ளை.. வடமாநில இளைஞர் கைது.!

சேலையூர் வேளச்சேரி சாலையில் உள்ள ப்ளூ ஸ்டோன் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் அருகே சேலையூர் – வேளச்சேரி சாலையில் உள்ள ப்ளூ ஸ்டோன் பிரபல நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான வைரம், தங்கம் நகைகள் நேற்று இரவு கொள்ளையடிக்கப்பட்டது. மாடி வழியாக வந்த கொள்ளையர்கள் லிப்டில் இறங்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில் கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து நகைகளையும் திருடியுள்ளனர். மேலும் லாக்கரை திறக்க முயற்சி செய்தபோது எச்சரிக்கை அலாரம் அடித்ததால் … Read more

ராமஜெயம் கொலைக்கு இதுதான் காரணமா..?: புதிய கோணத்தில் திரும்பும் விசாரணை..!

திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் திருச்சி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக முதன்மை செயலாளரும், தமிழக அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம். இவர், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ம் தேதி அதிகாலை நடைபயிற்சிக்கு சென்றார். ஆனால், அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. போலீசார் அவரை தேடி வந்த நிலையில், கல்லணை ரோடு திருவளர்ச்சோலை பகுதியில் அவரது உடல் … Read more

சென்னை மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை: நாளை பயன்பாட்டுக்கு வருகிறது 

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை நாளை (நவ.27) திறந்து வைக்கப்படவுள்ளது. சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் மாற்றும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மனல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி கடற்கரையின் மணல் பரப்பில் வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு பாதையை அமைக்கும் பணி நடைபெற்றது. இதன்படி … Read more

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நெடுஞ்சாலையில் இந்திரா காந்தி சிலையை அகற்ற எதிர்ப்பு..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நெடுஞ்சாலையில் இந்திரா காந்தி சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சிலையை அகற்றும் பணி 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஓசூர்: கார் ஓட்டுநர் வெட்டிக் கொலை – முன்விரோதம் காரணமா? போலீசார் விசாரணை

ஓசூர் அருகே கார் ஓட்டுநரை கடத்திய கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து உடலை சாலையோரத்தில் வீசிச் சென்றுள்ளனர். ஓசூர் அடுத்த தளி அருகே எலேசந்திரம் கிராமம் சென்னே கவுண்டன் ஏரிக்கரை சாலையோரம் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் தளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் … Read more