கிருஷ்ணகிரி டாடா ஆலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கே அதிக வாய்ப்பா? – தமிழக அரசு விளக்கம்

சென்னை: கிருஷ்ணகிரி டாடா எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை அளித்த குற்றச்சாட்டு தொடர்பாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “டாடா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக தனது தொழிற்சாலையை … Read more

அடுத்த நெருக்கடி..! பக்கா ஸ்கெட்ச் – வசமாக சிக்கிய ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தை விட்டு வெளியே பயணம் செய்ய அனுமதி கோரிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, 3 கோடி ரூபாய் மோசடி புகார் தொடர்பான வழக்கில், தமிழக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் ரிட் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 4 வாரம் இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டதுடன், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள காவல் நிலைய எல்லையைத் … Read more

உதயநிதிதான் முதலமைச்சராக வேண்டும் – போர்க்கொடி தூக்கும் மருமகள்… வருத்தத்தில் ஸ்டாலின்

ஸ்டாலின் மகன் என்பதை தாண்டி ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்பதன் ஆரம்பத்தில் அடையாளப்பட்டவர் உதயநிதி ஸ்டாலின். திரைப்பட தயாரிப்பு, விநியோகம் என எழுந்த உதய் ஹீரோவாக வளர்ந்தார். அரசியல் ரத்தம் உடலில் ஓடுவதால் கடந்த 2019ஆம் ஆண்டு திமுகவின் இளைஞரணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் திமுகவின் இளைஞரணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு உதயநிதி மீது விமர்சனங்களை சிலர் வைத்தனர். இருப்பினும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உதயநிதிக்கு தேர்தலில் சீட் ஒதுக்கினார் ஸ்டாலின். ஏற்கனவே இளைஞரணி பஞ்சாயத்து புகைந்துகொண்டிருக்க … Read more

தமிழகத்தில் சுற்றுலா இடங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் எளிதில் செல்லும் வகையில் வழிமுறைகளை வகுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: தமிழகத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக செல்ல தேவையான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் சுற்றுலாத் தலங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் எளிதாக செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது என கூறிய நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகள் கையாளும் வகையில் சுற்றுலா வழிகாட்டி புத்தகத்தையும் வெளியிட ஆணையிட்டனர். மெரினா கடற்கரையின் அழகை அருகே சென்று ரசிக்கவும் உணரவும் நிரந்தர சாய்வு வசதி ஏற்படுத்தப்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சின்னம்மை பாதிப்பு.. முகக்கவசம் கட்டாயம்.. சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு..!

சபரிமலையில் 5 போலீசாருக்கு சின்னம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என கேரள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இதற்காக, கடந்த 16-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. 17-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த முறை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு இருமுடி கட்டி … Read more

அரசு பணி நியமனங்களில் தேர்வு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்: புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புதுச்சேரியில் அரசு பணி நியமனங்களின்போது தேர்வு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். அதனை மீறுவது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், பட்டதாரி இளைஞர் அய்யாசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், “புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் சட்டவிரோதமாக பணி நியமனங்கள் நடைபெறுகின்றன. தற்காலிகமாக பணியாளர்களாக நியமித்து பின் அவர்களே பணி நிரந்தரம் செய்யப்படுகின்றனர். இந்த சட்டவிரோதமான நியமனங்களால் படித்து விட்டு, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு … Read more

வாயால் கெடும் தவளை போல்.. புதிய சிக்கலில் எடப்பாடி!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: தமிழ்நாட்டில் எந்த ஒரு தனி நபர் நிறுவனத்துக்கும் விளம்பர பதாகை அச்சடிக்க கொடுக்கவில்லை. மொத்தம் 89 நிறுவனங்களின் வாயிலாக 27 மாவட்டங்களில் அச்சடிக்கப்பட்டன. இதில் 9 மாவட்டங்களில் ஊராட்சிகளின் மூலம், அச்சகங்கள் மூலம் 80 ஆயிரத்திற்கும் அதிகமான பேனர்கள் அச்சிடப்பட்டன. இந்த பேனர்கள் 6*4, 12*8, 10*8 என்று பல்வேறு வெவ்வேறு அளவுகளில் அச்சிடப்பட்டன. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுவது உண்மைக்கு … Read more

அதிமுக வேறு.. பாஜக வேறு.. உட்கட்சி விவகாரத்தில் யார் தலையிடும் இல்லை -ஜெயக்குமார்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் “அதிமுக இணைப்பு, திமுக ஆட்சி, எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்தது என பல விசியங்களை குறித்து பேசினார். குறிப்பாக அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதில்லை. அதை அவர்கள் விரும்புவதும் இல்லை எனவும், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கு எந்த நிலையிலும் அதிமுகவில் இடமில்லை என திட்டவட்டமாகவும் கூறியுள்ளார்.  செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுகவின் முன்னாள் … Read more

பெண்ணின் வீட்டு சுவரை இடித்த பாஜ நிர்வாகிக்கு போலீஸ் வலை

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை அருகே உள்ள ரெட்டியார் காலனியை சேர்ந்தவர் வசந்தகுமாரி. ஜெயங்கொண்டம் மேலகுடியிருப்பை சேர்ந்தவர் ராமர். ஜெயங்கொண்டம் நகர பாஜ தலைவர். இந்நிலையில், வசந்தகுமாரி புறம்போக்கு இடத்தில் தனது வீட்டின் சுற்றுச்சுவரை கட்டியுள்ளதாக கூறி, நேற்று முன்தினம் அத்துமீறி சென்று பொக்லைன் இயந்திரம் உதவியுடன்  சுற்றுச்சுவரை, ராமர் இடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் வசந்தகுமாரி புகார் செய்தார். அதில், பட்டா உள்ள இடத்தில் தான் வீட்டின் சுற்றுச்சுவர் கட்டியுள்ளேன். … Read more