களக்காடு மலையடிவாரத்தில் வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பல்: புகைப்படங்கள் வெளியீடு

களக்காடு: களக்காடு மலையடிவாரத்தில் வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பல் குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த கும்பலை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெற்கு வீரவநல்லூர் பீட்டில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வருவாய்துறையினருக்கு சொந்தமான கன்னிப் பொத்தை உள்ளது. இப்பகுதியில் சுற்றி திரியும் வனவிலங்குகளை மர்ம நபர்கள் வேட்டையாடுவதாக களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் களக்காடு துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில், களக்காடு … Read more

இளைஞர்களே ரெடியா.. மதுரையில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர். இதனையடுத்து தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்கின்றனர். அந்த வகையில் மதுரையில் நாளை (நவம்பர் 25 ஆம் தேதி) தனியார் … Read more

பேனர் ஒன்றுக்கு ரூ.7,906 செலவிடப்பட்டதாக புகார்: தமிழக அரசு மறுப்பு

சென்னை: “நம்ம ஊரு சூப்பரு இயக்கம்” செயல்படுத்த விழிப்புணர்வு பதாகைகள் நிறுவியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ள புகார்களுக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ”ஊரக பகுதிகளில் ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 2 வரை ‘நம்ம ஊரு சூப்பரு ” என்ற “சிறப்பு மக்கள் இயக்கம்” அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15 கிராம சபை கூட்டத்தின்போது துவங்கப்பட்டது. இந்த இயக்கமானது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, கழிவு நீர் மேலாண்மை … Read more

ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு – குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு ஹேப்பி நியூஸ்!

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காதவர்களுக்கு, பொருட்கள் வாங்கியது போல் குறுஞ்செய்தி சென்றால் துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கூட்டுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 34 ஆயிரத்து 790 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. 246 கிடங்குகளும் பயன்பாட்டில் இருக்கின்றன. நியாய விலைக் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு, அரிசி இலவசமாகவும், துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் … Read more

குறைகிறது சுங்கச்சாவடி கட்டணம் – அமைச்சர் எ.வ.வேலு தகவல்

வேலூர் அரசினர் தொழிற் பயிற்சி வளாகத்தில் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற பயிற்சி பணிமனை கட்டுமானப் பணிகள் ரூ.3.73 கோடியில் நடைபெற்றுவருகிறது. இதனை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று  ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்க வசதியாக 69 ஐ.டி.ஐ.க்களை மேம்படுத்த ரூ.264.83 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்தப் பணிகள் அனைத்தையும் வரும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளேன். … Read more

திருச்சி கட்டவுட் ஐயப்பன் கோயில் 38வது ஆண்டு பிரம்மோற்சவம்: சுவாமி ஐய்யப்பனுக்கு முருங்கைப்பேட்டை காவிரி படித்துறையில் ஆராட்டு நிகழ்ச்சி

திருச்சி: திருச்சி கட்டவுட் ஐயப்பன் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி சுவாமி ஐய்யப்பனுக்கு முருங்கைப்பேட்டை காவிரி படித்துறையில் ஆராட்டு நிகழ்ச்சியில் பெருந்திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பக்திபரவசத்துடன் வழிபட்டு புனிதநீராடினர். திருச்சி மாநகர் கண்டோன்மென்ட் பகுதியில் எழுந்தருளியுள்ள பிரசித்திபெற்றதுமான சுவாமி ஐய்யப்பன் ஆலயத்தின் 38வது ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 19ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினசரி கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகளும், அன்னதான நிகழ்ச்சிகளும் நடைபெற்றுவந்தது. முக்கிய நிகழ்ச்சிகளின் ஒன்றான ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. இதனையொட்டி … Read more

உத்தரவை அமல்படுத்துங்க, இல்லை இரயிலே ஓடாது – எச்சரிக்கும் சென்னை உயர்நீதிமன்றம்.!

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் யானைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக கடந்த முறை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, சோலார் விளக்குகள் அமைப்பதை தவிர்த்து மற்ற உத்தரவுகள் அனைத்தும் அமல்படுத்தப்பட்டு விட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து ரெயில்வே தரப்பில், “18 கோடி ரூபாய் மதிப்பில் சோலார் விளக்குத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.  அதன் … Read more

சிறார் குற்ற விவகாரங்களில் காவல் துறை வரைமுறையின்றி நடவடிக்கை: உயர் நீதிமன்றம் அதிருப்தி

சென்னை: குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் தெளிவாக இருந்தும் சிறார் குற்றங்கள் தொடர்பான விவகாரத்தில் காவல் துறையினர் வரைமுறையின்றி கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 16 வயது மாணவிக்கு, சக மாணவன் மஞ்சள் கயிறைக் கட்டும் காட்சிகள், சமூக வலைதளத்தில் பரவியது. மாணவனுக்கு எதிராக சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல, மாவட்ட குழந்தைகள் நலக்குழு, மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்தது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில், மாணவியை … Read more

அக்கா தம்பியாக மாறிய சூர்யா – டெய்சி… அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா..!

திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. தமிழ்நாடு பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளராக இவர் உள்ளார். பாஜவுக்கு சென்ற பிறகு திமுக தலைமை மற்றும் முக்கிய நிர்வாகிகள் குறித்து கடுமையாக விமர்சித்து பேசி வரும் அவர், பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சியுடன் சமீபத்தில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த ஆடியோவில், டெய்சிக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்ததுடன், காது கூசும் வகையில் கெட்ட வார்த்தைகளை உபயோகித்து மிகவும் … Read more