நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்தியா..!

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. வெலிங்டனில் நடக்க இருந்த தொடக்க ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. மவுன்ட் மாங்கானுவில் நடந்த 2-வது ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடிய இந்தியா, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா – நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேப்பியரில் … Read more

பதவி, அதிகாரம், தமிழக பாஜக… – அண்ணாமலை நடவடிக்கையின் பின்னணி என்ன?

யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளிப்பதில் கட்டுப்பாடு, சர்ச்சைக்குரிய உரையாடல் குறித்து விசாரணை, காயத்ரி ரகுராம் 6 மாத காலம் நீக்கம் என அடுத்தடுத்து கட்சிக்குள் அதிரடி காட்டியுள்ளார், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதன் பின்னணி குறித்து பார்ப்போம். கட்சி என்று இருந்தால் உள் விவகாரங்கள் இருக்கத்தானே செய்யும் என்பதுபோல் தமிழக பாஜகவில் பதவிக்கான பிரச்சினைகள் பூதாகரமாகி. அது தொடர்பான வீடியோக்கள் கசிந்து பல அருவருக்கத்தக்க உரையாடல்கள் அம்பலமாகி இருக்கிறது. இதன் விளைவு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை … Read more

டிபிஐ அலுவலகத்தில் க.அன்பழகனுக்கு சிலை: எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக!

பள்ளி கல்வி துறை வளாகத்தில் முன்னாள் அமைச்சர் க. அன்பழகனுக்கு சிலை அமைப்பதை திமுக அரசு கைவிட வேண்டும் என்று நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். தமிழக கல்வித்துறையில் முன்னாள் அமைச்சர் க.அன்பழகனின் பணி அளப்பரியது. பள்ளிக் கல்வித் துறை அலுவலகங்கள் இயங்கும் சாலையில், டிபிஐ வளாகத்தில் க.அன்பழகனுக்கு தமிழக அரசு சிலை அமைக்க உள்ளது. முன்னதாக 2021 சட்டபேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய நிதி அமைச்சர் … Read more

லஞ்சம் பெற்றதாக பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

கோவை : பேராசிரியர்கள் நியமனத்தில் லஞ்சம் பெற்றதாக பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. பேராசிரியர்கள் நியமனத்தில் லஞ்சம் பெற்றதாக பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதி மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விசாரணையில் புகார் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தை வெளியிடும் பிரபல நிறுவனம்… பாலிவுட்டில் ஜோதிகா ரீ-என்டரி… டாப் 5 சினிமா செய்திகள்

வாரிசு படத்தை வெளியிடும் பிரபல நிறுவனம்… பாலிவுட்டில் ஜோதிகா ரீ-என்டரி… டாப் 5 சினிமா செய்திகள் Source link

தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை 180 சதவீதமாக உயர்வு.! 

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, “இந்தியாவில் கடந்த 2011 ஆண்டு எடுக்கபட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 29 சதவீதம் பேரும், 14 முதல் 18 வயதுள்ள குழந்தைகள் 10 சதவீதம் பேரும் உள்ளனர்.  பொதுவாக குழந்தைகள் பள்ளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் தான் இருக்க வேண்டும். ஆனால், வறுமை, பொருளாதார சூழ்நிலை, முறையில்லா வருமானம் உள்ளிட்ட … Read more

மக்களே தெரிஞ்சிக்கோங்க..!! மெட்ராஸ் ஐ வரமால் தடுக்க சில வழிகள்!

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் முடிவடைந்த பிறகு இந்த ‘மெட்ராஸ் ஐ’ பாதிப்பு ஏற்படும், ஆனால் இந்த ஆண்டு நீடித்த மழைப்பொழிவு காரணமாக இதன் தாக்கம் அதிகரித்து இருக்கிறது. 20% க்கும் அதிகமானோர் ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கான்ஜுன்க்டிவிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வேகமாகப் பரவிவிடும், பெரும்பாலும் இது பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று காரணமாக ஏற்படுகிறது. கண்ணில் சுரக்கும் ஒருவகையான திரவத்தின் மூலம் இது பரவுகிறது, பாதிக்கப்பட்ட்டவருக்கு கண்களில் எரிச்சல், நீர் வடிதல், … Read more

பொதுமக்களிடம் தீபாவளி சீட் நடத்தி ரூ.27 கோடி மோசடி செய்த 4 பேரை கைது செய்த போலீஸ்..!

திருவள்ளூர் மாவட்டத்தில், தீபாவளி சீட்டு நடத்தி 27 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஜே.பி ஏஜென்சி உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மாலந்தூரை சேர்ந்த ஜோதி, மாவட்டம் முழுவதும் சுமார் மூவாயிரம் முகவர்களை நியமித்து, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் தருவதாக கூறி தீபாவளி சீட் நடத்தி பணம் வசூலித்து தலைமறைவானார். புகாரின் பேரில் ஜோதி உள்பட 10 பேர் மீது வழக்கு பதியப்பட்டு, … Read more

பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் 6 மாத காலத்துக்கு நீக்கம்: அண்ணாமலை நடவடிக்கை

சென்னை: தமிழக பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் … Read more

தமிழக கோயில்களில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும் – அமைச்சர் சேகர் பாபு

இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் குறித்த சீராய்வுக் கூட்டம் நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் இவ்வாறு பேசினார். திருவண்ணாமலை தீபத் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் அங்கு என்னென்ன முன்னேற்பாடுகள் நடந்துள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சரித்திரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அங்குள்ள நான்கு கோபுரங்களையும் சுத்தம் செய்துள்ளோம். 30 … Read more