மதுரை, தேனி, திண்டுக்கல் உட்பட 6 மாவட்டங்களில் குரூப் 1 தேர்வை 42,363 பேர் எழுதினர்; 18,983 பேர் ஆப்சென்ட்

மதுரை: மதுரை, தேனி, திண்டுக்கல் உட்பட 6 மாவட்டங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வை 42,363 பேர் எழுதினர். 18,983 பேர் ஆப்சென்ட் ஆகினர்.துணை கலெக்டர், டிஎஸ்பி, உதவி கமிஷனர், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர், ஊரக மேம்பாட்டு துறை உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 92 பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலை தேர்வு அறிவிக்கப்பட்டது. இத்தேர்வு நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. மதுரை மாவட்டத்தில் இத்தேர்வுக்காக 65 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. … Read more

”டேன் டீ நிறுவனத்தை மூடுவதா? முதல்வர் எழுதிக் கொடுத்தால் மத்திய அரசு நடத்தும்” – அண்ணாமலை

”டேன் டீ தேயிலை தோட்டத்தை திமுக அரசு திட்டமிட்டு மூட பார்க்கிறது. தமிழக முதல்வர் எழுதிக் கொடுத்தால் இந்த நிறுவனத்தை மத்திய அரசு ஏற்று நடத்தும்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு தேயிலை தோட்ட கழகமான டேன் டீ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் பற்றாக்குறை, இழப்பு உள்ளிட்ட காரணங்களை காட்டி சுமார் 2000 ஹெக்டேர் தேயிலை தோட்டங்களை அரசு வனத்துறை வசம் … Read more

வாடகை வீட்டில் இருப்போர் மின் இணைப்புடன் ஆதார் இணைக்கலாமா? மின்வாரியம் தந்த விளக்கம்!

தமிழ்நாடு மின்வாரியம் நுகர்வோர்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை நினைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான பணிகளும் தமிழ்நாடு மின்வாரியம் தொடங்கியுள்ளது. இதற்காக நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கு மின்வாரியம் குறுஞ்செய்தி அனுப்ப வருகிறது. சில நுகர்வோர்கள் தங்கள் வீட்டிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பை பெற்றுள்ளனர்.  சிலர் ஒரே பெயரில் பல மின் இணைப்புகளை வாடகை வீட்டிற்கும் பெற்றுள்ளனர். அவர்கள் தங்களின் ஆதார் எண்ணை இணைக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் தந்துள்ளனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் … Read more

நாய் போல் குரைத்து இளைஞர் கோரிக்கை! ஏன் தெரியுமா?

மேற்கு வங்க மாநிலம் பங்குரா என்ற பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகந்தி தத்தா என்ற நபரின் பெயர், ரேஷன் கார்டில் ஸ்ரீகந்தி குத்தா என்று அச்சிடப்பட்டிருந்தது. குத்தா என்றால் ஹிந்தியில் ‘நாய்’ என்று பொருள். இந்த தவறை சரி செய்ய சொல்லி தத்தா பலமுறை விண்ணப்பித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் அவரது பெயரை சரி செய்யவில்லை. இதனால் மன வேதனையில் இருந்த தத்தா, அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் முறையாக பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வட்டார வளர்ச்சி … Read more

நாளை சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது சென்னையில் இருந்து சுமார் 670 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்பதால், நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. நாளை மறுநாள் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் … Read more

'தமிழ் பேரினத்தின் பெருமைமிகு இசை அடையாளம் இளையராஜா' – சீமான் புகழாரம் 

சென்னை: “இளையராஜா எந்த இடத்தில் இருந்தாலும், தமிழர்களின் பெருமைமிக்க ஒரு அடையாளம்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது அவருக்கு விருப்பமாக உள்ளது. அவரே மறுத்தாலும், அவர் தமிழ் பேரினத்தின் பெருமைமிகு இசை அடையாளம்தான் அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். வட சென்னை – திருவொற்றியூர் தொகுதி நாம் தமிழர் மருத்துவப்பாசறை சார்பில் இன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. இதன் … Read more

சிறுமிகளை பள்ளிக்குள் அனுமதிக்காத விவகாரம்; தலைமையாசிரியை, ஆசிரியை சஸ்பெண்ட்: மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி

திருவாடானை: திருவாடானை அருகே 2 சிறுமிகளை பள்ளிக்குள் அனுமதிக்காத விவகாரத்தில் தலைமையாசிரியை, ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கடம்பாகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியை பகவதி என்பவர், கடந்த 6 மாதமாக சரிவர பள்ளிக்கு வராததால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் மாவட்ட கல்வித்துறைக்கு பல்வேறு புகார்களை அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கடம்பாகுடி அரசுப் பள்ளியில் விசாரணை நடத்தினர். அப்போது பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் 2 … Read more

பெண்குழந்தை வேண்டாமென கருக்கலைப்பு செய்துகொண்ட பெண் உயிரிழப்பு-கடலூரில் மீண்டும் அதிர்ச்சி

கர்ப்பிணியாக இருந்த வேப்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்ததால் தொடர் ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கு சம்பந்தமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட மருந்தாக உரிமையாளர் வடிவேலனிடம் தீவிர விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டு வேப்பூர் காவல் நிலையம் கொண்டு வந்தனர். நடந்தது என்ன? கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் (33) அமுதா (28) தம்பதியர். இவர்களுக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தை உள்ள நிலையில், … Read more