புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் – அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தல்
சென்னை: புயல், கனமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து துறை உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேற்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் வெளியிட்ட அறிவுறுத்தல்கள் வருமாறு: > கனமழையை எதிர்கொள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அனுப்பியுள்ள கடிதத்தில் உள்ள அறிவுரைகளை சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர்கள் பின்பற்ற வேண்டும். > கடலோரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 424 முன்னெச்சரிக்கை அமைப்பு மூலம், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொது … Read more