மணக்குள விநாயகர் கோயிலில் யானை லட்சுமி நின்ற இடத்தில் பூக்கள் வைத்து பக்தர்கள் மரியாதை

புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோயில் இன்று பூஜைகள் செய்யப்பட்டு திறக்கப்பட்டது. யானை லட்சுமி கோயில் முன்பு நின்ற இடத்தில் பக்தர்கள் பூக்கள் வைத்து அன்பை வெளிப்படுத்தினர். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி நேற்று உயிர் இழந்தது. உடல் கூறு ஆய்வு இரண்டு மணி நேரம் நடந்தது. அப்போது யானையின் தந்தங்கள் எடுக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அதையடுத்து யானை லட்சுமி உடல் குழியில் இறக்கப்பட்டு அதில் 50 மூட்டைகள் உப்பு, விபூதி … Read more

பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவையுங்கள்: அன்புமணி கோரிக்கை!

அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகளை முன்னிட்டு டிசம்பர் 14, 15, 16 ஆகிய நாட்களில் நடைபெறும் பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 990 அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் திசம்பர் 14 முதல் 16 வரை நடைபெறவுள்ளன. அதே காலகட்டத்தில் டிசம்பர் 10 – 20 வரை தமிழக பல்கலைக்கழகங்களில் எம்.எஸ்சி இயற்பியல் படிப்புக்கான பருவத் … Read more

பிரதமர் மோடியின் ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் பாரத் யூரியா அறிமுகம்

தூத்துக்குடி: பிரதமர் மோடியின் ஒரே நாடு ஒரே உரம் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் சார்பில் பாரத் யூரியா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வேளாண் உற்பத்திக்கு பயன்படும் உரங்களை பாரத் யூரியா என பெயர் மாற்றம் செய்ய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் தயாரிக்கும் யூரியா உரம், பாரத் யூரியா என பெயர் மாற்றப்பட்டது.

ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற விவகாரம்! நகரமன்ற தலைவரை போட்டுக் கொடுத்த திமுக கவுன்சிலர்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி 18 வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் சத்தியசீலன். இவர் வீடு கட்ட அனுமதிக்க ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. சம்பந்தப்பட்ட திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டது. இது குறித்து விளக்கம் அளித்த திமுக கவுன்சிலர் சத்தியசீலன் ஆறு மாதத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ என்றும் அப்பொழுது நகரமன்ற தலைவராக உள்ள திமுகவை சேர்ந்த பரிமளா என்னை அழைத்து ஒப்பந்ததாரர் … Read more

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

சென்னை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. வழக்கம் போல் தந்தை காலையில் வேலைக்கு சென்று விட்டார். மதியம் தேர்வு என்பதால் மாணவி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் மாலையில் வேலை முடிந்து மாணவியின் தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். வீடு உள்பக்கமாக பூட்டி … Read more

டிபிஐ வளாகத்துக்கு க.அன்பழகன் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பள்ளிக்கல்வித் துறை அலுவலகம் செயல்பட்டு வரும் டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் சிலை நிறுவப்படும். மேலும், அந்த வளாகம் இனி ‘பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகம்’ என்று அழைக்கப்படும். சிறந்த பள்ளிகளுக்கு அவரது பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியவர் பேராசிரியர் அன்பழகன். அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ரூ.7,500 கோடியில் ‘பேராசிரியர்அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ … Read more

கோயில் இணையதளங்கள் குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகள் உத்தரவாத பிறபிக்கப்படும்: ஐகோர்ட் கிளை

மதுரை: கோயில் இணையதளங்கள் குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகள் உத்தரவாக பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பிரபல கோயில்களின் பெயரில் இணையதளங்கள் தொடங்கி மோசடி நடைபெறுவதாக வழக்கு தொடரப்பட்டது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், மார்கண்டன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை ஐகோர்ட் மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

விவசாயத்துக்கான வாய்க்கால்களை அடைத்து அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை! விவசாயிகள் அதிர்ச்சி

நாகப்பட்டினம் முதல் கூடலூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை பணிகள் 2017 ஆம் ஆண்டு முடிந்திருக்க வேண்டிய நிலையில், கால தாமதமாக பணிகள் தொடங்கப்பட்டதால் தற்போது வரை அங்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், வாய்க்கால் இருப்பதை கூட பார்க்காமல் பழமைவாய்ந்த 3 வாய்க்கால்களை அடைத்து சாலை அமைத்து இருப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம் சிக்கல் ஊராட்சிக்குட்பட்ட பனை மேடு பகுதியில் ஓடம்போக்கி ஆற்றின் பிரிவு வாய்க்காலான … Read more

சென்னை சேலம் 8 வழிச் சாலை; ஸ்டாலினுடன் ஆலோசித்து முடிவு: எ.வ வேலு பேட்டி

சென்னை சேலம் 8 வழிச் சாலை; ஸ்டாலினுடன் ஆலோசித்து முடிவு: எ.வ வேலு பேட்டி Source link