கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 18ம் தேதி வலுப்பெறக்கூடும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கையை மீறி ஆபத்தை உணராமல் வெள்ள நீரில் குளித்து கும்மாளமிடும் சிறுவர்கள்

வெள்ள நீர் வடிந்து வேகமாக வாய்க்கால்களில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் எச்சரிக்கையும் மீறி ஆபத்தை உணராமல் குளித்து கும்மாளமிடும் சிறுவர்களால் அச்சம் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10 மற்றும் 11ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. வடிகால் வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளில் அதிக அளவில் தண்ணீர் சென்று வருகிறது. இதனால் குழந்தைகளை நீர் நிலைகளுக்கு அருகில் விட வேண்டாம் எனவும், ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை குளிப்பாட்ட மற்றும் … Read more

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஐப்பசி மாத துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக இன்று (நவம்பர் 16ம் தேதி) நடைபெற உள்ள கடைமுக தீர்த்த வாரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாவட்ட … Read more

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!!

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அது வருகிற 19ஆம் தேதி தமிழக கடலோர பகுதிகளை நெருங்க உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் வருகிற 18ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும். தெற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று … Read more

தொடர் புகார்கள்… குற்றாலம் காவல் ஆய்வாளரை கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி நெல்லை சரக டிஐஜி உத்தரவு!

தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் ஆய்வாளர் தாமஸ் மீது தொடர்ந்து புகார்கள் சென்றதையடுத்து கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். குற்றாலத்தில் ஏராளமான மசாஜ் சென்டர்கள் அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாகவும், புகையிலைப் பொருட்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வியாபாரமும் அதிகளவில் நடைபெறுவதாக காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. குற்றாலம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் தாமஸ் மீதும் ஏராளமான புகார்கள் சென்ற நிலையில், அவரை கட்டாய காத்திருப்புக்கு பட்டியலுக்கு … Read more

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (16-ம்தேதி) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்துகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 18-ம் தேதி வலுப்பெறக்கூடும். இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறைந்த காற்றழுத்த தாழ்வு … Read more

250 வழக்குகளில் துப்பு துலக்கிய மோப்ப நாய் ‘சிம்பா’ சாவு: வேலூர் எஸ்பி மலர் வளையம் வைத்து அஞ்சலி

வேலூர்: வேலூர் மாவட்ட காவல்துறையில் கொலை, கொள்ளை வழக்குகளில் துப்பு துலக்க மோப்பநாய் பிரிவில் லூசி, சிம்பா, அக்னி, சாரா, ரீட்டா ஆகிய 5 நாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் லூசிக்கு அதிக வயதானதால் ஓய்வு கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மோப்ப நாய் சிம்பா, கொலை, கொள்ளை குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2013 பிப்ரவரி 22ம் தேதி முதல் இதுவரை 250க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை வழக்குகளில் துப்பு துலக்க மோப்ப … Read more

தமிழ்நாடு எனும் தனிநாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு – திருமாவளவன் பேச்சு

தமிழ்நாடு எனும் தனிநாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக தலைவர் திருமாவளவன் குறித்த திருமாவின் சிந்தனை கோட்பாடுகள் எனும் தலைப்பில் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் ஜெ.பாரத் என்பவர் நூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், திருமாவளவன் பங்கேற்று நூலை வெளியிட்டார். முன்னதாக, அம்பேத்கர் சட்டக் கல்லூரியை … Read more