பள்ளிக்கு செல்லாமல் வெளியில் சென்ற மாணவிகள்.! வழி தெரியாமல் தத்தளித்த சம்பவம்.!

திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள மகளிர் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த செல்லாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இரண்டு மாணவிகள், நந்தவனப்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த 2 மாணவிகள் என்று மொத்தம் நான்கு பேரும் நெருங்கிய தோழிகளாக இருந்தனர். இந்நிலையில், இவர்கள் அனைவரும் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்தனர். ஆனால், அன்று மாலை நான்கு பேரும் வீடு திரும்பவில்லை.  இதனால், அவர்களது பெற்றோர்கள் பதறி அடித்துக்கொண்டு பள்ளிக்கு வந்து விசாரித்ததில், … Read more

சுண்ணாம்பில் இவ்வளவு விஷயம் இருக்கா..? இது தெரியாம போச்சே..!!

சில காலங்களுக்கு முன் ஒவ்வொரு வீட்டிலும் சுண்ணாம்பு இருக்கும். வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஒரு பாட்டி வெற்றிலை மென்று கொண்டேயிருக்கும். இந்தச் சுண்ணாம்பில் ஏராளமான கால்சியம் நிறைந்திருக்கிறது. எலும்புகளைப் பலப்படுத்தும். செரிமான சக்தியை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே உண்டு பண்ணும் ஆற்றல் வாய்ந்தது. இதை தனியாக சாப்பிட முடியாது என்றாலும் சில பொருட்களுடன் சேர்ந்து சாப்பிட உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்கச் செய்யும். ஒரு டீஸ்பூன் தேனுடன் ஊசி முனையளவு சுண்ணாம்பு சேர்த்து குழந்தைகளுக்கு … Read more

அரசுப்பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் மாடிப்படிகளில் பாடம் படிக்கும் மாணவர்கள்..!

கல்வராயன்மலை அருகே அரசுப்பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் மாடிப்படிகளில் அமர்ந்து மாணவர்கள் பாடம் படிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கொட்டபுத்தூரில் அரசு மலைவாழ் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு போதிய வகுப்பறை வசதி இல்லாததால் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் மாடிப்படி மற்றும் வரண்டாவில் அமர்ந்திருப்பது போன்றும் அவர்களுக்கு ஆசிரியர் பாடம் நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. Source link

கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தின் 10 ஆயிரம் உறுப்பினர்களுக்கு வீட்டுவசதி – திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.400 கோடியில் வீட்டுவசதி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிலாளர் நலத்துறையின் கடந்த 2021-22-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற, சொந்தமாக வீடு இல்லாத கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்தமாக வீட்டுமனைவைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ளநிதியுதவி வழங்கப்படும், வீட்டுமனை இல்லாதவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட … Read more

கணவருக்கு விஷம் கொடுத்ததாக புகார் புதுப்பெண் தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திங்கள்சந்தை: குமரி மாவட்டம் இரணியல் அடுத்த ஆழ்வார்கோயில் தாந்தவிளை பகுதியை சேர்ந்தவர் வியாகப்பன். இவரது மகன் வடிவேல் முருகன் (33). இவருக்கும், இறச்சக்குளம் பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தனது மனைவி ஸ்லோ பாய்சன் கொடுத்து, தன்னை கொல்ல முயன்றதாக வடிவேல் முருகன் புகார் அளித்தார். வடிவேல் முருகன் புகாரின் பேரில் புதுப்பெண் மீது, இரணியல் காவல் நிலையத்தில் வழக்குபதிவும் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே வடிவேல் … Read more

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மீது வழக்கு பதிவு! அதிரடி உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம்!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞரை தாக்கிய தொடர்பான வழக்கில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உட்பட நெல்லை மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து பதிந்துள்ளது.  நெல்லை மாவட்டம் மாரியங்குலத்தை சேர்ந்த வழக்கறிஞர் நாகரத்தினம் தாக்கல் செய்த மனுவில் மனித உரிமை தொடர்பான வழக்குகள் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடியவர்களுக்கான வழக்குகளை நடத்தியுள்ளார். இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி நள்ளிரவில் … Read more

அதிர்ச்சி வீடியோ..!! ஒரு நபருக்கு மரணம் எந்த நேரத்திலும் எப்போ வேணுமானாலும் வரலாம்..!!

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் குடா ராம்சிங் கிராமத்தை சேர்ந்தவர் சலீம் பாய் ராநவாஸ். உடற்கல்வி ஆசிரியரான இவர் ரனாவாஸில் நடந்த உறவினரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது மனமேடையில் உறவினர்களுடன் பாடலுக்கு சலீம் பாய் நடனமாடிக் கொண்டிருந்தார். பிறகு அனைவரும் மேடையி விட்டு கீழே இறங்கும் போது திடீரென சலீம் பாய் மயக்கமடைந்து விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை அருகே இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த … Read more

பல்லடம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, திருச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில், பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோர், சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். செம்மிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து, 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், திருச்சி – கோவை நெடுஞ்சாலை நோக்கி சென்றது. அப்போது, திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த தனியார் பேருந்து, செம்மிபளையம் பிரிவு அருகே, சாலையை கடந்த தனியார் நிறுவன பேருந்து மீது மோதி … Read more

தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட இளம் வீராங்கனை உயிரிழப்பு – தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம்

சென்னை: சென்னை அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட நிலையில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை உயிரிழந்தார். கவனக்குறைவாக செயல்பட்ட 2 அரசு மருத்துவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாணவியின் குடும்பத்துக்கு அரசு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்புக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். சென்னை வியாசர்பாடியில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ரவிக்குமார் – உஷாராணி … Read more

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா 27ம் தேதி கொடியேற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, டிச.6ம் தேதி மகாதீப பெருவிழா நடைபெறும். அன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அண்ணாமலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். இந்நிலையில், தீபத்திருவிழா முன்னேற்பாடுகளை நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் … Read more