விசைத்தறியாளர்கள் ஹேப்பி; அமைச்சர் செம சூப்பர்..தகவல்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கு அமைச்சர் சாமிநாதன் பரிசளித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், பேச்சு போட்டி, கட்டுரை போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்களை அமைச்சர் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் வழங்கினர். … Read more

சென்னை உயர்நீதிமன்றத்தின் வாயில்கள் ஆண்டுக்கு ஒருமுறை மூடப்படுவது ஏன்? பின்னணி

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் உயர் நீதிமன்றம் கட்டப்பட்டதால் இப்பகுதிகளில் வசித்த மக்கள் உயர்நீதிமன்றத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது. நாளடைவில் அது அதிக தூரமாக கருதி உயர் நீதிமன்ற வளாகத்தை வழிப்பாதையாக பயன்படுத்த தொடங்கினர்.  இதை கவனத்தில் கொண்ட நீதிமன்ற நிர்வாகம், மக்கள்  வருங்காலங்களில் நீதிமன்ற வளாக வழிப்பாதைகளை உரிமைகோரி விடக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் வருடத்தில் ஒரு நாள் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் … Read more

விகேபுரம் அருகே குடியிருப்பு பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலப்பு: பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம்

விகேபுரம்: விகேபுரம் அருகே குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்ததால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விகேபுரம் அருகே அகஸ்தியர்பட்டி விநாயகர் காலனி பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விநாயகர் காலனி 3வது தெருவில் தற்போது பெய்துவரும் தொடர் மழையால் மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் குடியிருப்பு பகுதியில் மழை நீர் குட்டை போன்று தேங்கியுள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை … Read more

குரூப் 1: அனுமதி மறுக்கப்பட்டதால் விரக்தியில் ஹால் டிக்கெட்டுகளை கிழித்த தேர்வாளர்கள்!

குரூப் 1 பிரிவில் உள்ள பல நிலைகளுக்கு தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மன விரக்தியில் கையில் வைத்திருந்த ஹால் டிக்கெட்களை கிழித்தெறிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் குரூப் 1 பிரிவில் 18துணை ஆட்சியா், 26துணைக் காவல் கண்காணிப்பாளா், 13வணிகவரி உதவி ஆணையா், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் என மொத்தம் 92 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கென 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு … Read more

கட்டுமான பணியின் போது இடிந்து விழுந்த மேம்பாலம் – 2 பேர் பலி!!

பீகார் மாநிலம் நாலந்தா பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்டுமான பணி நடைபெற்று கொண்டிருந்த போது திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் பாலத்திற்கு அடியில் சிக்கி உயிரிழந்தனர். கட்டுமானப் பணியில் பல தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்ததால் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த பாலம் அமைக்கும் போதே இரண்டு முறை இடிந்து விழுந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் … Read more

ஒரே இடத்தில் நின்று கொண்டு யாராலும் சாதிக்க முடியாது – நடிகை சுகாசினி

ஓடி ஓடி தான் ஒருவரால் சாதிக்க முடியும் ஒரே இடத்தில் நின்று கொண்டு யாராலும் சாதிக்க முடியாது என்று நடிகை சுகாசினி மணிரத்னம் கூறியுள்ளார். குழந்தைகளுக்கான புற்று நோய் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக மெட்ராஸ் ரவுண்ட் டேபிள் ஒன் என்ற அமைப்பு சென்னை ரன்ஸ் என்ற மாரத்தான் என்ற நிகழ்ச்சியை டிசம்பர் 11ஆம் தேதி நடத்துகிறது. இந்த நிகழ்ச்சிக்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. இதில் … Read more

தமிழக சுகாதாரத் துறையில் 22,000 பணியிடங்கள் காலி – நடவடிக்கை எடுக்குமா அரசு?

சென்னை: தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் மொத்தம் 22,000 பணியிடங்கள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி இயக்ககத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைகளும், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கீழ் மாவட்ட மற்றும் வட்டார மருத்துவமனைகளும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புதுறையின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த 3 மருத்துவ துறையின் கீழ் உள்ள மருத்துவமனைகள் தொடங்கி … Read more

அண்ணாமலையை கடிந்துகொண்ட அமித் ஷா… பறிபோகும் தலைவர் பதவி?

தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழகம் வந்த உள்துறை அமித் ஷா சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக ஒரு மணி நேரம் திட்டமிட்டிருந்த ஆலோசனை மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது என்று சொல்லப்படுகிறது. அப்போது, அமித் ஷா திமுக அரசின் நடவடிக்கைகளை உற்று கவனித்து ஒவ்வொரு நாளும் குறைகளை ஊடக வாயிலாக தெரியப்படுத்த வேண்டும் என்ற அசைன்மென்ட்டை கட்சி நிர்வாகிகளுக்கு கொடுத்துள்ளாராம். மேலும், அண்ணாமலையை அமித் ஷா கடிந்து … Read more

7 பேர் விடுதலை… மத்திய அரசின் மறுசீராய்வு மனுவுக்கு நாராயணசாமி வரவேற்பு

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எம்.பி. வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு, கட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இனிப்பு வழங்கினர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் … Read more

தூத்துக்குடி மாநகர பகுதியில் கொசு உற்பத்தியை தடுக்க சுகாதார துறை நடவடிக்கை

தூத்துக்குடி: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பல இடங்களிலும் இரவில் மக்கள் தூங்க முடியாத அளவிற்கு கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் கொசு ஒழிப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து  மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நகர்நல சுகாதாரத் துறை மூலம் மாநகராட்சி பகுதி முழுவதும் சுழற்சி முறையில்  பணியாளர்களை கொண்டு கொசுமருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.       இதுகுறித்து மாநகராட்சி எதிர்கட்சி கொறாடா வக்கீல் மந்திரமூர்த்தி … Read more