அதிமுக ஆட்சியில் தகுதியற்றவர்களுக்கு வழங்கல் கலைமாமணி விருதை தகுதியான நபர்களுக்கு வழங்க நடவடிக்கை: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்
மதுரை: தகுதியான கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, வண்ணார்பேட்டையைச் சேர்ந்த சமுத்திரம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:நையாண்டி மேள நாதஸ்வர கலைஞராக உள்ளேன். 50 ஆண்டுகளுக்கும் மேலான எனது கலைச்சேவையை பாராட்டி கடந்த 2017ல் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் சிறந்த கலைஞர்களுக்காக ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்படும் … Read more