விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்க இலக்கு!

கோவை மாவட்டதில் சிந்தாமணி ரேஷன் கடையில் இரண்டு மற்றும் ஐந்து கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனை துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு விற்பனையை துவங்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன் “நடப்பு நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதுவரை நடப்பு நிதியாண்டில் 9.51 லட்சம் விவசாயிகளுக்கு 7,166 கோடி ரூபாய் விவசாய கடன் … Read more

அலுவலகங்கள் மூடல்.. ட்விட்டர் நிறுவனத்தில் நடப்பது என்ன?

ட்விட்டர் நிறுவனத்தை உலகத்தில் உள்ள பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கினார். அதன் பின் ஊழியர்களுக்கு ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு ஊழியர்களுக்கு எலான் மஸ்க் மெயில் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் ஊழியர்கள் வேலை நேரம் போக கூடுதலாக அலுவலகத்தில் இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.  ஊழியர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும், இல்லையென்றால் வெளியேறுங்கள் என்ற எலன் மஸ்க்கின் உத்தரவை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒரே … Read more

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-எஸ்’ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: புறப்பட்ட 2.5 நிமிடத்தில் இலக்கை எட்டி சாதனை

சென்னை: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான ‘விக்ரம்-எஸ்’ ஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆய்வில்உலகளவில் முன்னணி அமைப்பாக திகழ்கிறது. உலகளாவிய விண்வெளிவர்த்தகப் போட்டியை சமாளிப்பதற்காக இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அதன்ஒரு பகுதியாக, விண்வெளி ஆய்வில்தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இஸ்ரோ முடிவுசெய்தது. இதற்காக 2020-ம் ஆண்டு ‘இன்ஸ்பேஸ்’ என்ற அமைப்பு நிறுவப்பட்டது. இதன்மூலம் ராக்கெட்,செயற்கைக் கோள் தயாரித்தல் ஆகியபணிகளில் தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டன. … Read more

முத்துநகர் எக்ஸ்பிரஸில் வெடிகுண்டு மிரட்டல்: சோதனையில் இறங்கிய நிபுணர்கள்!

தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து தினமும் இரவு 8.20 மணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் ஒருநபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதை தொடர்ந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயிலை வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் ரயில்வே போலீசார் மற்றும் … Read more

Tamil News Live Update: திருமலை நாயக்கர் மஹாலை நவ.25ம் தேதி வரை கட்டணமின்றி பார்வையிடலாம் 

Tamil News Live Update: திருமலை நாயக்கர் மஹாலை நவ.25ம் தேதி வரை கட்டணமின்றி பார்வையிடலாம்  Source link

மீண்டும் விபத்தில் சிக்கிய வந்தே பாரத் ரயில்..!! மக்கள் அதிர்ச்சி

இந்தியாவின் அதி நவீன சொகுசு வசதிகள் கொண்ட ரயிலாக வந்தே பாரத் ரயில் அறியப்படுகிறது. நாடு முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை – மைசூரு செல்லும் வந்தே பாரத் ரயில் போன வாரம் தான் திறப்பு விழா கண்டது. பிரதமர் மோடி கடந்த 12-ஆம் தேதி பெங்களூருவில் வைத்து இந்த வந்தே பாரத் ரயில் சேவையை … Read more

மாணவி பிரியா வழக்கு | தலைமறைவாக உள்ள மருத்துவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைப்பு

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, நான்கு மருத்துவர்கள் உள்ளிட்ட 5 பேர் மீது புதிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள இரண்டு மருத்துவர்களையும் கைது செய்ய மூன்று தனிப்படை அமைத்துள்ளது காவல்துறை. சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரியா (17), ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தார். அவரது வலது கால் மூட்டு சவ்வு விலகியதால் அவதிப்பட்டு வந்த பிரியாவுக்கு, பெரியார் நகரில் உள்ள அரசு … Read more

ஒற்றை காட்டு யானையிடம் சிக்கிய நபர்: தப்பித்தது எப்படி?

ஒற்றை காட்டு யானை ஓய்வு பெற்ற ஆசிரியரை தாக்க வந்த காட்சி வெளியாகியுள்ளது. கோவை துடியலூரை அடுத்த வரப்பாளையம் பொண்ணூத்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்து உள்ளது. கேரளா ஒட்டியுள்ள வனப் பகுதியில் நாள்தோறும் தண்ணீர், உணவு தேடி வரும் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள், ஊருக்குள் வருவது வழக்கம். இந்நிலையில் வரப்பாளையம் கிராமத்தில் காட்டு யானைகள் புகுந்ததாக அப்பகுதி விவசாயிகளுக்கு தகவல் கிடைத்தது. யானைகள் ஊருக்கு புகுந்ததை கேள்விப்பட்ட விவசாயி ஓய்வு பெற்ற ஆசிரியர் … Read more

நீர் பயன்படுத்துவோர் பாசன சங்க தேர்தல்: புதுக்கோட்டையில் உள்ள 7 டாஸ்மாக் கடைகள் இன்று ஒருநாள் மூடல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள 7 டாஸ்மாக் கடைகளை இன்று ஒருநாள் மூட மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வசுந்தரா தேவி ஆணையிட்டுள்ளார். நீர் பயன்படுத்துவோர் பாசன சங்க தேர்தல் நடக்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரியாக வருவோம்: ஆசைப்பட்ட மாணவிகளை உற்சாகப்படுத்திய காவல் ஆய்வாளர்

காவல்துறை அதிகாரியாக வருவேன் என விருப்பம் தெரிவித்த அரசுப் பள்ளி மாணவிகளை ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் தனது இருக்கையில் அமர வைத்து கௌரவித்த சம்பவம் மாணவிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. உலக பெண்கள் குற்றத் தடுப்பு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சுமார் 50 பேர் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு காவல் நிலையத்தை சுற்றிக் காண்பித்த போலீசார், சமுதாயத்தில் பாதுகாப்பாக இருப்பது குறித்தும், அச்சமின்றி சமுதாயத்தை எதிர்கொள்ளவும் ஆலோசனைகள் … Read more