5 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல்.! பதுக்கி வைத்து விற்பனை செய்த 5 பேர் கைது.!

சேலம் மாவட்டத்தில் 5 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  இந்த தகவலையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவருக்கு … Read more

‘கமல்ஹாசனை கேலி பேசுவதா?’ – அண்ணாமலை மீது மநீம ஆவேசம்

சென்னை: “ஒரு நேர்மையான அரசியலை கொண்டுவர முயலும் கமல்ஹாசனைக் குற்றம் சொல்லும் தகுதி தனக்கில்லை என்பதை பாஜக மாநிலத் தலைவர் உணரவேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சி காட்டமாக கூறியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை வழக்கமாக பேசும் பொறுப்பற்ற பேச்சுக்களில் ஒன்றை அண்மையில் அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் பேசிய காணொலி ஒன்றை காண நேர்ந்தது. வழக்கமான குப்பைகளில் ஒன்று என்று … Read more

திமுக தலைவராக ஸ்டாலின் பேச்சு… அமைச்சர் பொன்முடி புது விளக்கம்!

திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( அக்டோபர் 9) சென்னையில் நடைபெற்றது. இதில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் பேசும்போது, ” தினமும் காலை கண்விழிக்கும்போது நம்மவர்கள் (திமுக நிர்வாகிகள்) யாரும் இன்று புது பிரச்னைகள் எதையும் உருவாக்கி இருக்ககூடாதே என்ற எண்ணத்துடன்தான் கண் விழிக்கிறேன். இந்த எண்ணமே சமயத்தில் தம்மை தூங்கவிடாமல்கூட செய்துவிடுகிறது” என்று பேசியிருந்தார். பொது இடங்களில் தங்களது சர்ச்சையான பேச்சுகள், செயல்பாடுகளால் கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும் … Read more

மீனாட்சியம்மன் கோயில் இணையதளம் திடீர் முடக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணையதளம் திடீரென முடங்கியதால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மதுரையில் உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். கோயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வமான www.meenakshitemple.org இணையதளம் நேற்று முன்தினம் இரவு திடீரென முடங்கியது. கோயில் திருவிழா, கோயிலின் வரலாறு, கோயிலின் சிறப்பு, சிறப்பு கட்டணம் மற்றும் ஆன்லைன் மூலம் பிரசாதம் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள், … Read more

'ஓசி' என பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் பொன்முடி!

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்றதை கொண்டாடும் விதமாக வேப்பேரி பெரியார் திடலில் திமுக சார்பில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. இதில், திராவிடர் கழக தலைவர் வீரமணி, திமுக பொதுச்செயலாளர் துரை முருகன், துணை பொதுச்செயலார் பொன்முடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, “வாயா போயா என்ற வார்த்தையை சொல்லவே தற்போது பயமாக இருக்கிறது. தலைவர் என்னை பார்த்து அப்படி பேசாதீர்கள் என சொல்லி விட்டார். பாஜக டார்கெட் செய்து தாக்கி கொண்டிருக்கிறார்கள். தளபதி … Read more

இந்தி திணிப்பை கண்டித்து அக். 15-ம் தேதி தி.மு.க இளைஞரணி ஆர்ப்பாட்டம் – உதயநிதி அறிவிப்பு

இந்தி திணிப்பை கண்டித்து அக். 15-ம் தேதி தி.மு.க இளைஞரணி ஆர்ப்பாட்டம் – உதயநிதி அறிவிப்பு Source link

துண்டு சீட்டு இல்லாமல் ஆங்கிலத்தில் பேசி அசத்திய சென்னை மேயர் பிரியா!

ஆங்கில மொழி பயிற்றுவிக்கும் பயிற்சியை முடித்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் மேயர் பிரியா!  சென்னை பெருநகர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆங்கில மொழி கற்பிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த பயிற்சியில் கலந்து கொண்டு தேர்ச்சி அடைந்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மாநகராட்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா, துணை மேயர், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் … Read more

கேரளாவில் உள்ள தமிழர்களின் பாதுகாப்பை அம்மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: வாழ்வாதாரம் தேடிச் செல்லும் தமிழர்களின் பாதுகாப்பை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “வறுமை காரணமாக கேரளத்திற்கு சென்று பரிசுச்சீட்டு விற்று வந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண் நரபலி தரப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்தறிவு அதிகம் பெற்ற கேரளத்தில்தான் நரபலி போன்ற … Read more

திடக்கழிவுகள்: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையானது நகர்ப்புறங்களில் வசிக்கும் குடிமக்களுக்கு மிக முக்கியமான துறை. நகர்ப்புற குடிமை வசதிகளின் அனைத்து வளர்ச்சி மற்றும் பராமரிப்புகளை இத்துறை மேற்கொள்கிறது. இந்த நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, துறை ரீதியாக நடைபெற்று வரும் பல்வேறு பணிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு விளக்கம் அளித்தனர். கூட்டத்தில் … Read more

கொடைக்கானலில் கொட்டி தீர்த்த கனமழை; 12.7 செமீ மழை பதிவு

திண்டுக்கல்: கொடைக்கானலில் நேற்று கனமழை கொட்டியது. இதனால் அருவிகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கொடைக்கானல் படகு குழாமில் 12.7 செமீ மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல் நகரில் நேற்று மதியம் முதல் பரவலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக திண்டுக்கல் நகரில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நகர் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.கொடைக்கானல் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 3 தினங்களாக இரவு நேரங்களில் பலத்த மழை … Read more