மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு 

சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி சிவலிங்கம் (வயது 42). இவரது மனைவி வீரம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 6-ம் தேதி இரவு 8 மணியளவில் சிவலிங்கம் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு வேலைக்கு செல்லும்போது, ஆரம்பாக்கம் அருகில் நிலை தடுமாறி வாகனத்தில் இருந்து கீழே … Read more

பொறியியல் மாணவர் சேர்க்கை: அமைச்சர் பொன்முடி அளித்த விளக்கம்!

பொறியியல் படிப்பில் இந்த ஆண்டு ஐடி, எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல் பிரிவில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். சென்னையில் தொழில்நுட்ப இயக்குநகரத்தில் கலந்தாய்வு குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கை இந்தாண்டு அதிகரித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழக மாணவர் சேர்க்கையில் இந்தாண்டு காலியிடம் என்பது இருக்காது. இன்னும் 1.10 லட்சம் பேருக்கு அக்டோபர் 13 … Read more

தம்பியை தொடர்ந்து அண்ணனும்.. தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்?

PM Modi Visit Tamil Nadu: தமிழகத்துக்கு வரும் 30 ஆம் தேதி வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, ராமநாதபுரத்தில் நடைபெறும் தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை வரும் 30 ஆம் தேதி  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் நடக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் 30 … Read more

நவீன காலத்திலும் தொடர்கிறது பாரம்பரிய முறை கடலுக்குள் கூண்டு வைத்து மீன்பிடிக்கும் மீனவர்கள்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் கடலுக்கு அடியில் கூண்டு வைத்து மீன்கள் பிடித்து வரப்படும் நடைமுறை இன்றும் தொடர்கிறது.கடலோரங்களில் தென்பட்ட மீன்கள் தூண்டில், ஒற்றை வலை வீசி துவக்கத்தில் பிடிக்கப்பட்டன. நாளடைவில் கட்டுமரம், கரைவலை என தொழில் முறை மாற்றம் பெற்றது. இதிலிருந்து சற்று ஒரு படி மேலே முன்னேற்றமாகி பாய்மரப்படகு, நாட்டுப்படகு என தொழில் செய்யும் யுக்தி மாறியது. தொழில்நுட்ப வளர்ச்சியால் விசைப்படகு, பைபர் படகு என படகுகளின் வடிவம் மாறியுள்ளது. தற்போது … Read more

காவிரி டெல்டாவில், ஈரப்பத விதியை தளர்த்தி நெல் கொள்முதல் செய்ய வேண்டும்! – டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்! 

காவிரி பாசன மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக விற்பனைக்காக கொள்முதல் நிலையங்களுக்கு உழவர்கள் கொண்டு வந்துள்ள நெல் மணிகள் நனைந்து ஈரமாகியுள்ளன. அதனால், அனுமதிக்கப்பட்ட அளவை விட ஈரப்பதம் அதிகரித்திருப்பதால், அரும்பாடுபட்டு விளைவித்த நெல்லை, தேவைக்கு ஏற்ப விற்பனை செய்ய முடியாத நிலைக்கு உழவர்கள் தள்ளப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.  மத்திய அரசிடம் விண்ணப்பித்து 25% வரை ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்ய முடியும். இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியுஷ் கோயலிடம் வேண்டுகோள் வைத்திருப்பதாக உணவுத்துறை … Read more

விருத்தாசலம் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் 13 மாணவர்களுக்கு பலத்த காயம்..!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோபாலபுரம் கிராமத்தில் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி, முருகன்குடி ஆகிய பகுதியில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளி வேனில் தினமும் அழைத்து வருவது வழக்கம். இந்த நிலையில் பெண்ணாடத்தில் இருந்து இரண்டு வேன் மூலம் பள்ளி மாணவர்களை அழைத்து வந்தனர். அப்பொழுது விருத்தாசலம் அருகே கோ.ஆதனுர் கிராமம் அருகே வரும்போது ஒரு வாகனத்தை விருத்தகிரியும் இன்னொரு வாகனத்தை வெற்றிசொல்வனும் ஓட்டி … Read more

GITEX கண்காட்சி: துபாய் சென்ற அமைச்சர் மனோ தங்கராஜ்

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஐக்கிய அரபு அமீரகம், துபாயில் ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள GITEX கண்காட்சியில் பங்கேற்பதற்காக, நேற்று முன் தினம் சென்னை விமான நிலையத்திலிருந்து சென்றார். GITEX (Gulf Information Technology Exhibition) – எனும் “வளைகுடா தகவல் தொழில்நுட்பக் கண்காட்சி”, ஆண்டுதோறும் உலகளவில் நடக்கும் மிகப் பெரிய நிகழ்வாகும். சுமார் 170 நாடுகளில் இருந்து அரசு சார்ந்த தலைவர்கள், அமைச்சர்கள், தனியார் துறைச் சார்பாளர், கொள்கை … Read more

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை: இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருப்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி … Read more

3% அகவிலைப்படி உயர்வு வழங்காததை கண்டித்து தமிழகம் முழுவதும் மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் தர்ணா..!!

சென்னை: 3% அகவிலைப்படி உயர்வு வழங்காததை கண்டித்து பாளை மின்சார வாரிய அலுவலகம் முன் ஓய்வூதியதாரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சி, ஈரோடு, கோவையிலும் மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.