கடலூரில் ஆட்டோ டிரைவர் கழுத்தறுத்து படுகொலை.. போலீஸ் விசாரணை..!
கடலூர் அருகே, கழுத்தறுத்து ஆட்டோ டிரைவர் படுகொலை செய்யப்பட்டது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குறவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவமணியை காணாததால், உறவினர்கள் தேடி வந்தனர். அங்குள்ள வாழைத்தோப்பில் சருகுகளால் மூடப்பட்ட நிலையில், அவர் சடலமாக கிடந்தார். ஆட்டோ பாலத்தின் அருகேயுள்ள குழியில் கவிழ்க்கப்பட்டு கிடந்தது. மோப்ப நாய் உதவியுன் ஆய்வு செய்த போலீசார், 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர். Source link