உள்ளத்தை திறந்து காட்டிய ஸ்டாலின்: உணர்வார்களா உடன்பிறப்புகள்?

திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், திமுக தலைவராக 2ஆவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் , பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி அமர்ந்த இடம் இது. ஆனால், நான் அண்ணாவோ, கலைஞரோ அல்ல என்று குறிப்பிட்டார். ஆனால், நேற்றைய தினம் அவரது நிதானமான பேச்சும், அவர் பயன்படுத்திய ஆழமான … Read more

தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் மூழ்கி மாணவன் உட்பட 2 பேர் பலி-வாணியம்பாடி அருகே சோகம்

வாணியம்பாடி : தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் மூழ்கி பிளஸ்1 மாணவன், பள்ளி பியூன் ஆகிய 2 பேர் உயிரிழந்த சம்பவம் வாணியம்பாடி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புல்லூர் பகுதியில் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே 12 அடி உயர தடுப்பணை கட்டியுள்ளது. தற்போது மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து தடுப்பணை முழுவதும் நிரம்பி உபரி நீர் அதிகளவில் வெளியேறி வருகிறது. இந்த தடுப்பணையில் குளிப்பதற்காக ஆந்திரா மற்றும் தமிழ்நாடு … Read more

22 வயது எம்.பி.பி.எஸ் முதல் 90 வயது முன்னாள் சபாநாயகர் வரை; காங்கிரஸ் பிரதிநிதிகளின் தலைவர் தேர்வு யார்?

22 வயது எம்.பி.பி.எஸ் முதல் 90 வயது முன்னாள் சபாநாயகர் வரை; காங்கிரஸ் பிரதிநிதிகளின் தலைவர் தேர்வு யார்? Source link

சென்னை: காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் எடுத்த விபரீதம் முடிவு.!

சென்னையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை சின்னமாத்தூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் டேனியல் ராஜா. இவரது மகள் ஏஞ்சல் (23). இவர் கல்லூரி படிப்பை தொடராமல் பாதியிலே விட்டுவிட்டு தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் தனது வீட்டிற்கு அருகே வசித்து வந்த வேன் ஓட்டுநர் தனுஷ் என்பவரை ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இதனால் இரு வீட்டாரும் … Read more

தங்கம் விலை கிராமுக்கு அதிரடியாக குறைந்தது..!!

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,440-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து, ரூ.4,805-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 66,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,200 ரூபாய் குறைந்து, ரூ.64,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.   Source link

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இருவேறு இடங்களில், மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில், மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். வேப்பூர் சிறுபாக்கம் பகுதியை சேர்ந்த இராமர் என்பவர் மீது, மின்கம்பத்தில் உரசிக் கொண்டிருந்த கொடிக்கம்பி அறுந்து விழுந்ததால், மின்சாரம் தாக்கியது. ராமரை காப்பாற்ற முயற்சித்த அவரது மகன் மணிகண்டன் மீதும் மின்சாரம் பாய்ந்ததில், இருவரும் உயிரிழந்தனர். சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர், வீட்டு வாசலில் அறுந்து கிடந்த மின்கம்பி மீது, கவனிக்காமல் கால் வைத்ததால், மின்சாரம் தாக்கி, … Read more

தருமபுரி அருகே லாரி மீது கார் மோதி விபத்து: சிறுவன் உள்பட 3 பேர் பலி

தருமபுரி: தருமபுரி அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகுல் (22). இவரது நண்பர்களான தருமபுரி குமாரசாமிபேட்டையைச் சேர்ந்த ஜீவபாரதி (20), சந்தோஷ் (15) உட்பட 5 பேர் நேற்று இரவு காரில் தருமபுரி குண்டலபட்டி பகுதியில் இருந்து பென்னாகரம் செல்ல தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துள்ளனர். தருமபுரி அடுத்த சவுளுப்பட்டி மேம்பாலத்தில் சென்றபோது, முன்னால் … Read more

பணி நியமனம்: பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தாமதமாக சான்றிதழ்களை சமர்ப்பித்தார் என்பதற்காக பணி நியமனத்தை மறுக்க முடியாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், திருப்பூரைச் சேர்ந்த கலப்பு மணம் புரிந்தவருக்கு, அந்த முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் நான்கு வாரங்களில் பணிநியமனம் வழங்க பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை பள்ளிக்கல்வித் துறை 2015ம் ஆண்டு மேற்கொண்டது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடிப்படையிலும், நேரடியாகவும் தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த தேர்வில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும், நேரடியாகவும் … Read more

தஞ்சாவூர் அருகே சாலையை கடக்க முயன்ற 2 விவசாயிகள் லாரி மோதி பலி

திருவிடைமருதூர் : தஞ்சாவூர் அருகே சாலையை கடக்க முயன்ற 2 விவசாயிகள் லாரி மோதி பலியாகினர்.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருகாவூர் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வந்தவர்கள் மாமுண்டி (70), மாணிக்கம் (65). விவசாயிகளான இருவரும், நேற்றுமுன்தினம் மாலை திருவிடைமருதூர் அருகே ஆடுதுறைக்கு பஸ்சில் வந்தனர். பின்னர் எஸ்.எஸ் நகரில் உள்ள உறவினர் ரத்தினம் வீட்டிற்கு செல்வதற்காக ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி பள்ளி முன்பு பஸ்சிலிருந்து இறங்கினர்.அப்போது அங்கிருந்து சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே சென்ற … Read more