திமுக தலைவர் பதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்

சென்னை: திமுக தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கான தேர்தலும், தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கானத் தேர்தல் தொடர்பான மற்றும் திமுகவின் 15வது பொதுத் தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் கூட்டம் 9ம் தேதி சென்னை அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள “செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. ‘இதில் திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரை தேர்ந்தெடுக்கும் … Read more

நித்யானந்தாவின் தீவிர பக்தன் நான்- திருச்சி சூர்யா பேட்டி!

நித்யானந்தாவின் கைலாச விருதுகளில், பாஜகவை சேர்ந்த திருச்சி சூர்யாவிற்கு விருது அறிவிக்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருச்சி சூர்யா பேசுகையில்; இந்து மதத்தை பாதுகாக்கும் வகையிலும், இந்து மதத்துக்கு ஆதரவாகவும் ஊடகங்களில் பேசிவரும் எனக்கு கைலசாவிலிருந்து சுவாமி நித்யானந்தா சார்பாக அவர்கள் முன்னிலையில், தர்ம ரக்ஷன அவார்டு காணொலிக் காட்சி மூலமாக சுவாமிஜி வழங்கினார்கள். அதனால் 100% மகிழ்ச்சி அடைகிறேன். இந்து பெருமையை பேச பிஜேபில் அநேகர் இருக்கையில், உங்களுக்கு கொடுத்தது எப்படி என்ற … Read more

TN Weather Forecast: உஷார் மக்களே!! இங்கெல்லாம் இடியுடன் கூடிய மழை பெய்யும்

தமிழக மாவட்டங்களுக்கான வானிலை தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 07.10.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 08.10.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் … Read more

திருப்பூர் விவேகானந்தா காப்பகம் மூடப்படுகிறது: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூர் விவேகானந்தா காப்பகம் மூடப்படுகிறது என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். திருப்பூர் அருகே அவினாசி, பூண்டி ரிங் ரோட்டில் விவேகானந்தா சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 மாணவர்கள் பலியானார்கள். வாந்தி, மயக்கத்துடன் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க 3 குழுக்கள் அமைத்து அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்டுள்ளார். சமூக நலத்துறை … Read more

கழுகு தாக்கியதால் படுகாயமடைந்த தேவாங்கு ; காப்பாற்ற போராடும் வனத்துறை மருத்துவர்கள்

கழுகு தாக்கியதால் காயமடைந்த தேவாங்கை நக்சல் தடுப்பு படையினர் காப்பாற்றி மீட்டுள்ளனர். அழிந்து வரும் உயிரினமான தேவாங்கை காப்பாற்ற வனத்துறை மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, மான், காட்டெருது என பல்வேறு வன உயிரினங்களோடு சர்வதேச அளவில் அழிந்து வரும் உயிரினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள கழுதைப்புலி, தேவாங்கு, சிங்கவால் குரங்குகள் போன்ற அரிய வகையான உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் … Read more

‘லவ் ஃபெயிலியர்னா தாடி வளர்க்கணும்… இந்த சண்டாளப் பய ஊர் ஊரா போய் சண்ட போடச் சொல்றான்..!’ வந்தியத் தேவன் மீம்ஸ்

‘லவ் ஃபெயிலியர்னா தாடி வளர்க்கணும்… இந்த சண்டாளப் பய ஊர் ஊரா போய் சண்ட போடச் சொல்றான்..!’ வந்தியத் தேவன் மீம்ஸ் Source link

மக்களே, 3 மாதம் கவனமா இருங்க.. டெங்கு பாதிப்பு அதிகரிக்கலாம்..!

தமிழகத்தில், கொரோனா தொற்று பாதிப்பு தினமும் 500 என்ற சராசரி நிலையில் இருந்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 2,915 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 481; செப்டம்பரில் 572 பேர் என, பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. பருவகால காய்ச்சல்களுடன், டெங்குவும் வேகம் எடுத்துள்ளது. வரும் நாட்களிலும் டெங்கு பாதிப்பு மேலும் வேகம் எடுக்கும் என மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கின்றனர். … Read more

மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.166 ஊதிய நிர்ணயம்; மோசமான உழைப்புச் சுரண்டல்: ராமதாஸ் சாடல்

சென்னை: “மழலையர் வகுப்புகளுக்கு தகுதியும், திறமையும் கொண்ட மாண்டிசோரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஒரு பள்ளிக்கு 3 ஆசிரியர்கள் வீதம் 2381 பள்ளிகளுக்கும் 5143 மாண்டிசோரி ஆசிரியர்களை இட ஒதுக்கீட்டை பின்பற்றி நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க அரசு முன்வர வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் 2381 பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை நடத்துவதற்காக மாதம் ரூ.5,000 ஊதியத்தில் பள்ளிக்கு ஒரு சிறப்பு ஆசிரியர் நியமிக்கப்படுவார் என்று தமிழக அரசு … Read more

இரண்டு நாள்களுக்கு கொட்டும் மழை: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!

தென்மேற்கு பருவமழை இன்னும் விலகாத நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதியில் கடந்த சில நாள்களாக நல்ல மழைப் பொழிவு பதிவாகி வருகிறது. இந்நிலையில் அடுத்த இரு தினங்கள் வானிலை எப்படி இருக்கும் என்பதை தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். வட தமிழகத்தில் அடுத்த இரு தினங்கள் நல்ல மழைப் பொழிவு இருக்கும். இன்று காலையே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் 10 செ.மீ வரை மழை … Read more

நகைச்சுவை நடிகரை ஏமாற்றி நூதன முறையில் மோசடி செய்த நபர் கைது

தமிழ் திரைப்படங்களில் பல்வேறு காமெடி கதாபாத்திரத்தில் நடித்த போண்டாமணி என அழைக்கப்படும் கோடீஸ்வரன், சென்னை ஐயப்பன் தாங்கலில் வசித்து வருகிறார், கடந்த வாரம் போண்டா மணி உடல்நிலை சரியில்லாமல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கிட்னி அறுவை சிகிச்சை செய்த பின்னர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் பிரதீப் என்பவர் போண்டாமணியிடம் வந்து நலம் விசாரிப்பது போல் நெருக்கமாக பழகி உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 27 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பப்பட்டார், … Read more