திருவண்ணாமலை | அண்ணாமலையார் கோயிலில் ஒரு மாத உண்டியல் காணிக்கை ரூ.1.60 கோடி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.60 கோடியை பக்தர்கள் செலுத்தி உள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், கிரிவல பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில், அஷ்ட லிங்க கோயில்கள் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உண்டியல்கள் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் காணிக்கையை, மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, ஆவணி மாத பவுர்ணமிக்கு பிறகு, அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண … Read more

KCRன் தேசிய கட்சி: ஜோதிட நம்பிக்கை தான் காரணம்- மாணிக்கம் தாகூர் M.P!

விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் மாணிக்கம் தாகூர் M.P., செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்; தீபாவளி நெருங்கி வரும் சூழ்நிலையில் டெல்லி மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதித்ததை தொடர்ந்து பிற மாநிலங்களில் தடை விதிப்பதற்கு முன்னர், பட்டாசு தொழிலை பாதுகாக்கும் வண்ணம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத வேண்டும். அதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வரை சந்தித்து கடிதம் அளிக்க … Read more

கோயில் நில இழப்பீடு விவகாரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சாலமேடு கோயில் நில இழப்பீடு தொகை பெறுவதில் ஏற்பட்ட சிக்கலை தீர்க்கக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவர்களது கோரிக்கை குறித்து மனு அளிக்குமாறு கூறினர். அதனைத் தொடர்ந்து அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த கோயில் … Read more

திருப்பூர் காப்பகத்தில் உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. விசாரணை குழு அமைப்பு!

திருப்பூர் காப்பகத்தில் உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. விசாரணை குழு அமைப்பு! Source link

#Breaking : சீரியல் நடிகர் அர்ணவ் நேரில் ஆஜர்.. திருமண விவகார பிரச்சனையில் அதிரடி திருப்பம்.! 

மகராசி சீரியல் நடிகை திவ்யா, தன் காதல் கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த நைனா முகமத். இவர் தமிழ் சீரியல் சேனல்களில் நடிகராக நடித்து வருகிறார். இதேபோல கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சீரியல் நடிகை திவ்யா, சென்னை புரசைவாக்கத்தில் மகராசி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். கேளடி கண்மணி என்ற சீரியல் தொடரில் நடிக்கும் போது நைனா முகமதுவுடன் நடிகை திவ்யாவுக்கு பழக்கம் … Read more

தமிழ்நாடு கிராம வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகள் கையாடல் செய்த வங்கி கிளை மேலாளர் பணியிடைநீக்கம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த 14 வாடிக்கையாளரின் 250 சவரன் நகையை கையாடல் செய்த வங்கி கிளை மேலாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தாசப்பகவுண்டன்புதூர் பகுதியில் செயல்பட்டுவரும் இவ்வங்கியில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். இங்கு நடைபெற்ற தணிக்கையில், பல நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது . தகவலறிந்து வங்கி முன் குவிந்த வாடிக்கையாளர்கள், நகைகள் மீட்டுத்தரப்படும் … Read more

புதுச்சேரி மின் ஊழியர்கள் போராட்டம் | முதல்வர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு  – வேலைநிறுத்தம் தீபாவளி வரை ஒத்திவைப்பு

புதுச்சேரி: புதுவையில் மின்துறை தனியார்மயத்துக்கு எதிராகப் போராடி வரும் மின் ஊழியர்கள் கூட்டமைப்புடன், முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் தீபாவளி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்து, பணிக்கு திரும்புவதாக மின்துறையினர் தெரிவித்துள்ளனர். புதுவையில் மின்துறை தனியார்மயத்தை எதிர்த்து அத்துறை ஊழியர்கள் 6 நாள்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால், மாநிலம் முழுவதும் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டு, பொது மக்களும் பல இடங்களில் … Read more

பொன்னியின் செல்வியாக மாறிய தமிழிசை; அதிர்ந்து போய்க்கிடக்கும் 2 மாநில அரசுகள்!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. தற்போது மீதமுள்ள மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கவும், வரும் 2024ம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வென்று மீண்டும் பிரதமர் பதவியை அலங்கரிக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் பெரும்பாலான மாநிலக் கட்சி தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். இதில் பாஜகவை கடுமையாக எதிர்க்கும் மாநில முதல்வர்களில் முதன்மையானவராக தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் உள்ளார். பிரதமர் மோடி தெலங்கானா மாநிலத்துக்கு … Read more

திருப்பூரில் கெட்டுப்போன உணவு உட்கொண்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 குழுக்கள் அமைப்பு

திருப்பூர்: திருப்பூரில் கெட்டுப்போன உணவு உட்கொண்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் களைகட்டும் தசரா திருவிழா – குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தசரா பெரும் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (அக்.05) நள்ளிரவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பக்தர்கள் குவிகின்றனர். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா ஆண்டு தோறும் 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு இத்திருவிழா செப்டம்பர் 26-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு அணிந்து பல்வேறு வேடம் தரித்தும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தசரா குழுவினர் பல்வேறு ஊர்களில் குடில் அமைத்து … Read more