காலாண்டு விடுமுறை… தமிழகப் பள்ளிகள் திறப்பு தேதி திடீர் மாற்றம்!

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் காலாண்டு தேர்வுகள் முடிவடைந்தன. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி, 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை அக்டோபர் 13ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் எல்.கே.ஜி, யு.கே.ஜி முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வரும் … Read more

சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம்: தமிழிசை

புதுச்சேரி: தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு; சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அதை மறைக்க முற்படுகின்றனர். அதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாதம் தோறும் 5-ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும்: தூயமைப் பணியாளர்கள் கோரிக்கை

மாதம் தோறும் 5-ம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் பணியாளர்கள் விசைப்பம்பு இயக்குநர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (3-ம் தேதி) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, … Read more

கோவை மாவட்ட திமுக செயலாளர்கள் பொறுப்பேற்பு

திமுக கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக நா.கார்த்திக், வடக்கு மாவட்டச் செயலாளராக தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்டச் செயலாளராக தளபதி முருகேசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக், காந்திபுரத்தில் உள்ள அண்ணாவின் உருவச்சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் வைக்கப்பட்டிருந்த பெரியார், கருணாநிதி ஆகியோரது உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தார். பின்னர், வடகோவையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயலாளராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். தொண்டர்களிடையே மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் பேசும்போது, … Read more

புதுசு புதுசா யோசிக்கிறாங்க! பேருந்து பின்னால் ஸ்கேட்டிங் செய்த நபர்!

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டமும் கோவை மாவட்டம் அருகே உள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் கோவை விமான நிலையத்திற்கு வருகின்றனர். இந்நிலையில்  கோவை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த வெளிநாட்டவர் ஒருவர் கோவை அவிநாசி சாலையில் அரசு பேருந்தின் பின்புற கம்பியை பிடித்து காலில் சக்கரத்தை மாட்டிக் கொண்டு சாலையில் ஸ்கேட்டிங் செய்துள்ளார்.  சித்ரா பகுதியில் இருந்து ஹோப்ஸ் … Read more

மேற்கு வங்கத்தில் துர்கா சிலைகளை கரைக்க சென்ற போது வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் துர்கா சிலைகளை கரைக்க சென்ற போது வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் மாயமான பலரை தேடி வருகிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர். துர்கா சிலைகளைக் கரைகளைச் சென்று பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கோவில்களில் நவராத்திரி விழா நிறைவு கோலாகலம்…

சென்னை திருவொற்றியூர்  தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன்  கோவிலில்  நவராத்திரி விழாவின் 10ஆம் நாளான நேற்று உற்சவ  வடிவுடையம்மன்  மீனாட்சி அலங்காரத்தில் எழுந்தருள தியாகராஜர் திரு நடனமாடி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  புதுச்சேரி யூனியன் காரைக்கால் அடுத்த திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற அம்பு போடுதல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  கன்னியாகுமரியில் பகவதி அம்மன் பணாசூரன் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்ச்சி சிறப்பாக … Read more

ஆயுதபூஜை முன்னிட்டு கோவையில் ஒரு கிலோ செவ்வந்திப் பூ ரூ.600

ஆயுத பூஜையையொட்டி கோவை மார்க்கெட்டில் பூ, பொரி மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றன. கோவை மார்க்கெட்டில் பொரி ஒரு படி ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகைப் பூ, நேற்று ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுதொடர்பாக மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, ‘‘கடந்த சில தினங்களுக்கு முன் ஜாதிமல்லி ஒரு கிலோ ரூ. 300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. … Read more

தமிழகத்தில் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காற்றழுத்த தாழ்வுப் பகுதி மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 4 முதல் 7-ம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சூறாவளிக் … Read more