”1000 வருடங்களுக்கு முன் ஏது இந்து?” – வெற்றிமாறனுக்கு ஆதரவாக திருமாவளவன் கருத்து

சமீபத்தில் இராஜராஜ சோழன் இந்து இல்லை என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தது சர்ச்சையான நிலையில், அவருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். திருமாவளவன் மணி விழாவை முன்னிட்டு நடைபெற்ற குறும்பட நிகழ்ச்சியில் பேசியிருந்த வெற்றிமாறன், “மக்களுக்காக தான் கலை; மக்களை பிரதிபலிப்பது தான் கலை. இந்த கலையை சரியாக இன்று நாம் கையாள வேண்டும். இந்த கலையை சரியாக கொண்டு செல்ல வேண்டும். இல்லாவிடில், வெகு விரைவில் நம்மிடமிருந்து பல … Read more

மக்களே கவனம்.. இந்த 15 மாவட்டங்களில் 2 நாள் கொட்டப்போகுது கனமழை..!

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் 7 மற்றும் 8-ம் தேதிகளில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். சில … Read more

தமிழகத்தில் 380 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு

தஞ்சாவூர்: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 380 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் 17 பேர்.மீதமுள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 3 – 4 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது. பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் காய்ச்சல் … Read more

சென்னை: பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம்; 5 பேர் அதிரடி கைது – பின்னணி

சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், அந்த நபர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கையில் இறங்கியது. இதன் தொடர்ச்சியாக விருகம்பாக்கம் காவல் நிலைய போலீஸ், சாலிகிராமம் சாந்தி காலனி … Read more

ஓமலூர்: 4 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு வராமலேயே வீணாய்போன அம்மா பூங்கா!

ஓமலூர் அருகே அம்மா பூங்கா மற்றும் நவீன உடற்பயிற்சி மையம் அமைத்து நான்கு ஆண்டுகளாகியும் பயன்பாட்டிற்கு வராமலேயே சிதைந்து விட்டது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அம்மா பூங்காவும், பூங்கா வளாகத்திலேயே நவீன உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்பட்டது. பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்காக ஊஞ்சல், சறுக்கு, பொம்மைகள், நடைபாதை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டது. இந்த பூங்கா வளாகத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கிராமப்புற இளைஞர்களின் … Read more

பூ வியாபாரி அரிவாளால் வெட்டிப் படுகொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பூ வியாபாரியை வெட்டிப் படுகொலை செய்த மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மஞ்ச நம்பிகிணறு கிராமத்தைச் சேர்ந்த அழகுதுரை என்பவர் பூக்களை கொள்முதல் செய்து பூ மார்க்கெட்டிற்கு அனுப்பி வைக்கும் வேலை செய்து வந்துள்ளார். நேற்றிரவு அழகுதுரை வீட்டில் இருந்த போது அங்கு வந்த  மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டியதில் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

ராணிப்பேட்டை | 5 மணி நேரத்தில் 52 லட்சம் பனை விதைகள் நட்டு உலக சாதனை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் 5 மணி நேரத்தில் 52 லட்சம் பனை விதைகள் நடப்பட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. பனை விதைகள் நடவு செய்யும் பணி தொடக்க நிகழ்ச்சி வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் அமிர்த சரோவர் திட்டத்தின் மூலம் வெட்டப்பட்ட குளத்தின் கரை பகுதியில் நேற்று நடந்தது. ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்று பனை … Read more

நெருங்கும் கொடநாடு கிளைமாக்ஸ்… எடப்பாடிக்கு சிக்கலா? அதிமுகவில் நடக்கும் ட்விஸ்ட்!

அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சம் தொட்டு மற்றும் தலைமையில் இரு அணிகளாக மோதிக் கொண்டிருக்கும் நிலையில், மற்றொரு தலைவலியாக நீடித்து வருவது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு. ஜெயலலிதாவின் இரண்டாம் தாய் வீடு என்று அழைக்கப்பட்ட கொடநாடு எஸ்டேட்டில் நடந்த சம்பவங்கள் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இதன் விசாரணை கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் சயான், வாளையார் மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், குட்டி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். … Read more

சாலையை கடந்த யானை! ஓட்டம் பிடித்த மக்கள்! வைரலாகும் வீடியோ!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குட்டிகளுடன் யானைகள் சாலையை கடந்ததால் வாகன ஓட்டிகள் ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் சிலர் ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுக்க சென்றவர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் குஞ்சப்பனை, மாமரம், கீழ் தட்டப்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் சமவெளி பகுதிகளில் இருந்து உணவு தேடி காட்டு யானைக் கூட்டம் தேயிலை மற்றும் காபி தோட்டங்களில் முகாமிட்டு உள்ளது. இந்நிலையில் தேயிலை … Read more

நாகர்கோவில் மாநகராட்சியில் வேகமெடுக்கும் பாதாள சாக்கடை பணி: 3 மாதங்களுக்கு பின் மீண்டும் தொடங்கியது

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியில் கடந்த மார்ச் 2013ம் ஆண்டு, பாதாள சாக்கடை பணி  தொடங்கியது. மொத்தம் உள்ள 52 வார்டுகளில் 18 வார்டுகள் முழுமையாகவும், 17 வார்டுகளில் பகுதியாகவும் பாதாள சாக்கடை பணிகள் தொடங்கியது. இந்த பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் செயல்படுத்தி வருகிறது. மொத்தம் 118.86 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கின. சுமார் 9 ஆண்டுகள் ஆகியும் இந்த பணிகள் முடிவடையாமல் இழுபறி உள்ளன. கடந்த வருடம் இறுதியில் 102.76 கிலோ … Read more