உணவகங்களில் நடத்தப்படும் திடீர் சோதனைகளை செய்ய தடை.!

ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார், உணவகங்களில் ஆய்வுக்கு செல்லும்போது விதிகளை பின்பற்றாமல் ஊடகங்களை அழைத்துச் சென்று வீடியோ எடுத்து வெளியிடுவதாகவும், இதனால் தங்கள் உணவகங்களின் பெயர் கெடுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், கெட்டுப் போன உணவு என்பதை ஆய்வகத்தில் உறுதி செய்த பிறகு தான் நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு அதிகாரம் இருப்பதாகவும், அதை விடுத்து முன்கூட்டியே … Read more

வங்கிக் கடன் ஆவணம், வாடகை ஒப்பந்தங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை அமல்: நடைமுறை சிக்கலால் புதிய வசதியை தவிர்க்கும் மக்கள்

சென்னை: வங்கிக் கடனுக்கான உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு, வாடகை ஒப்பந்தம் ஆகியவற்றை இணையதளம் மூலம் பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. தமிழக பதிவுத் துறையில் அனைத்து பணிகளும் கணினிமயமாக்கப்பட்டு, ‘ஸ்டார்’ மென்பொருள் மூலம் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலமாக பதிவுக்கான ஆவணங்களை தயாரித்தல், வில்லங்க சான்று பெறுதல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், குறு. சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் வங்கிக் கடன் பெறுவதற்கான உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு (எம்ஓடி), … Read more

ஏரியில் மூழ்கி பலியான ஐடிஐ மாணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகை..!!

சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் பழங்குடியின மக்களுக்காக அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ) செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி நிலையத்தில் தர்மபுரி மாவட்டம் அரூர் சித்தேரி பகுதியைச் சேர்ந்த வேடன் என்பவரின் மகன் பிரவீன்குமார் (18) படித்து வந்தார். இவர் பயிற்சி நிலையம் அருகே உள்ள அரசினர் மாணவர் தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் மாணவர் பிரவீன் குமார், விடுதி நண்பர்களுடன் அரசு பயிற்சி நிலையத்தின் … Read more

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை நவ.6-ல் நடத்தலாம்: போலீஸார் அக்.31-க்குள் அனுமதி அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை காந்தி ஜெயந்தியான அக்.2அன்று நடத்தாமல் நவ.6-ல் நடத்தவேண்டும். அதற்கு அக்.31-ம் தேதிக்குள் போலீஸார் அனுமதி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்.2 காந்தி ஜெயந்தியன்று தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.திருவள்ளூர் நகர் காவல் ஆய்வாளர் இந்த ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்ததை அடுத்து, ஆர்எஸ்எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி ஜி.கே.இளந்திரையன் … Read more

அதிமுக அலுவலக வன்முறை வழக்கு: முன் ஜாமீன் நிபந்தனைகள் தளர்வு!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக பதிவான வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கு விதிக்கபட்ட முன் ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ம் தேதி ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே நடந்த கலவரம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் மீது கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக கூடுதல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு … Read more

வீராப்பு எங்க பாஸ் போச்சு? கைதுக்கு பின் பம்மிய டிடிஎப் வாசன்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் Twin throttlers என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்குகளில் சாகசங்கள் செய்தும், நீண்ட தூரம் பயணித்தும் அதை வீடியோவாக பதிவிட்டு 2k  கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். கவாசகி, நிஞ்சா உள்ளிட்ட சூப்பர் பைக்குகளில் சாகசம் செய்யும் வாசன், ஹெல்மெட்டில் கேமராவைப் பொருத்தி பைக்கின் வேகத்தை வீடியோவாக பதிவு  செய்து யூட்யூபில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி … Read more

திடீர் உடல்நலம் பாதிப்பு: அமைச்சர் மெய்யநாதன் சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி

 திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட  விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருச்சியில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதால் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் கார் மூலமாக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரிய பாதிப்பு … Read more