“துப்பாக்கிகளோடு திரியும் கும்பல் ஆர்எஸ்எஸ்! அவர்களும் நாங்களும் ஒன்றா?”- திருமாவளவன்

“பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போல ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளும் தடை செய்யப்பட வேண்டும். ஏனெனில் துப்பாக்கிகளோடு திரியும் கும்பல் அவர்கள்” என சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். ஆந்திர மாநிலம் குண்டூரில் மண்டல கமிஷன் தலைவராக இருந்த b.p.மண்டலுக்கு அங்கு உள்ள ஓ.பி.சி அமைப்பை சேர்ந்தவர்கள் சிலை வைத்தனர். சிலையை நிறுவும் முன்பே அதை ஆந்திர அரசு தகர்த்து … Read more

பென்ஷன்தாரர்களே, இன்றே கடைசி நாள்.. உடனே இதை செய்யுங்க..!

ஓய்வூதியம் பெறுவோர் தங்களின் ஆயுள் சான்றிதழை இன்றைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பென்ஷன் வாங்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை தெரிவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30-ம் தேதிக்குள் ஆயுள் சான்றிதழ் என்ற ஜீவன் பிரமான் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். கொரோனா பரவல் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு இந்த சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க இன்று … Read more

நில அபகரிப்பு புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான வழக்கு ரத்து 

சென்னை: நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜெயகுமாருக்கு … Read more

ஆர்.எஸ்.எஸ். பேரணி: திருமா மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு காவல்துறைக்கு அனுமதி அளிக்கும்படி ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 22ஆம் தேதி உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் … Read more

Madras HC: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம்  மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக ஜெயகுமாருக்கு எதிராக மகேஷ் புகார் … Read more

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கான தடையை அமல்படுத்தி அரசாணை வெளியீடு: புதுச்சேரி அரசு

புதுச்சேரி: புதுச்சேரியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கான தடையை அமல்படுத்த அரசாணையை புதுச்சேரி அரசு வெளியீட்டுள்ளது. ஒன்றிய அரசின் உத்தரவை பின்பற்றும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசாணை பிறப்பித்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தது இது தொடர்பாக 15 மாநிலங்களில் … Read more

வாணியம்பாடி: லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து – ஓட்டுநர் பலி

வாணியம்பாடி அருகே கனரக வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நெக்குந்தி சுங்கச்சாவடி அருகே உள்ள மேம்பாலத்தின் மீது பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனசேகர் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் மேம்பாலத்தின் மீது கற்கள் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் திடீரென பழுதானதால் பின்னால் வந்த ஆம்னி பேருந்து கனரக வாகனம் மீது … Read more

சில்லறைய மாத்துறோம்.. சீக்கிரமா கொடுக்குறோம்.. துரைமுருகன் 'லகலக'..!

“குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்காக சில்லறை மாற்றிக் கொண்டிருக்கிறோம்; விரைவில் வழங்குவோம்” என, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே 40 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் பேசிய அவர், “தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. மு.க.ஸ்டாலினுடைய ஆட்சி மக்களோடு மக்களாக … Read more

மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றினால் மாவட்ட ஆட்சியர்கள் பணியிடை நீக்கம்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

மதுரை: தமிழகத்தில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால் சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா,உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: நாட்டில் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இப்பணியின்போது தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்ததால் மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த உச்ச நீதிமன்றம் 2013-ல் தடை விதித்தது. இருப்பினும் பல்வேறு … Read more