வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக ஃபேஸ்புக் மூலம் மோசடி: 45 பாஸ்போர்ட்கள் பறிமுதல்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக முகநூலில் விளம்பரம் கொடுத்து மோசடி செய்த நபரிடம் இருந்து 45 பாஸ்போர்ட் பறிமுதல் செய்து, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் நல்லபெரட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த வாசு என்பவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் ஆசையில் இருந்து உள்ளார். கூலி வேலை செய்து சேர்த்து வைத்த பணத்தை வைத்து முகநூல் மூலமாக கிடைத்த விளம்பரத்தை பார்த்து மதுரையை சேர்ந்த பாண்டியன் என்பவர் கொடுத்த … Read more

கோயம்பேடு மார்க்கெட்.! (30.09.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 30/09/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 28/24/18 நவீன் தக்காளி 35 நாட்டு தக்காளி 32/30 உருளை 34/26/25 சின்ன வெங்காயம் 60/45/40 ஊட்டி கேரட் 100/80/60 பெங்களூர் கேரட் 90/80 பீன்ஸ் 50/40 பீட்ரூட். ஊட்டி /60.50 கர்நாடக பீட்ரூட் 40 சவ் சவ் 20/18 முள்ளங்கி 35/30 முட்டை கோஸ் 25/20 வெண்டைக்காய் 20/15 உஜாலா கத்திரிக்காய் 20/18 வரி … Read more

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?

ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, செப். 30 மற்றும் அக். 1 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 2, 3 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் … Read more

ஆயுதபூஜையை முன்னிட்டு இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: இதுவரை 48 ஆயிரம் பேர் முன்பதிவு

சென்னை: ஆயுதபூஜையை முன்னிட்டு இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் பயணிக்க இதுவரை 48 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகைகள் அக்.4, 5-ம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளன. இதற்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் பொதுமக்கள் நெரிசலின்றி பயணிக்கும் வகையில் இன்றும், நாளையும் (செப்.30, அக்.1) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து நாள்தோறும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், 2,050 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல … Read more

RS mangalam பள்ளி வினாத்தாள் கசிவு விவகாரம்: தலைமையாசிரியர் உட்பட மூவர் சஸ்பெண்ட்

சென்னை: வினாத்தாள் வெளியான விவகாரத்தில், பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே 6,7,8-ம் வகுப்பு முதல் பருவத் தேர்வு வினாத்தாள் வெளியானது தொடர்பாக தலைமயைாசிரியர் உள்ளிட்ட 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.மணக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 6,7,8 வகுப்புகளுக்கான அறிவியல் பாட முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத்தேர்வு நேற்று நடைபெற இருந்தது. ஆனால் அதற்கான வினாத்தாள் நேற்று முன்தினம் … Read more

ரயில்வே ஊழியர்களுக்கு பெரிய ஜாக்பாட்! தீபாவளி போனஸ் அறிவிப்பு..!!

இந்தியாவில் மிகப்பெரும் அரசுத் துறையாக ரயில்வே செயல்பட்டு வருகிறது. இந்த துறையில் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களின் முந்தைய ஆண்டு செயல்பாட்டின் அடிப்படையில் போனஸ் வழங்கப்படுகிறது. இந்த போனஸ் ஆண்டுதோறும் துர்கா பூஜை மற்றும் தசராவுக்கு முன்னர் வழங்கப்பட்டு விடும். இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க ரூ.2081.68 ஒதுக்க … Read more

ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புக்கும் ஊர்வலம், கூட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது – தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம்

சென்னை: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புக்கும், ஊர்வலம் மற்றும் கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்க இயலாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினம், விஜயதசமியை முன்னிட்டு, வரும் அக். 2-ம் தேதி தமிழகம் முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் சார்பில் அனுமதி கோரப்பட்டது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்குமாறு காவல் துறைக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த … Read more

விவகாரத்து வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து: முன்னாள் கணவனுக்கு தேநீர் கிடையாதா?

விவகாரத்துக்குப் பின்னர் குழந்தையை காண வரும் முன்னாள் கணவனுக்கு தேநீர் கொடுத்து உபசரிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை தொடர்பாக விவாகரத்து பெற்றுள்ளனர். இந்நிலையில் மனைவியின் பராமரிப்பில் இருக்கும் குழந்தையை சந்திக்க கோரி கணவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பிரிந்து வாழும் தம்பதியர், தங்களை … Read more

பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு வந்த மிரட்டல் கடிதம்; எங்களுக்கு தொடர்பில்லை என எஸ்.டி.பி ஐ விளக்கம்

பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு வந்த மிரட்டல் கடிதம்; எங்களுக்கு தொடர்பில்லை என எஸ்.டி.பி ஐ விளக்கம் Source link

விசாரணைக்குச் அழைத்து சென்ற ரவுடி உயிரிழப்பு…!! தொடரும் லாக்கப் மரணம்…?

சென்னை அயனாவரம் ஏராங்கிபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ஆகாஷ் (20). இவர் சி கேட்டகரி ரவுடி என போலீசார் வகைப்படுத்தியுள்ளனர். இவர் மீது கொள்ளை, கொலை மிரட்டல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த 20-ம் தேதி பெரம்பூரை சேர்ந்த ரயில்வே ஊழியர் பாலகிருஷ்ணமூர்த்தி கார் கண்ணாடி கல்லால் அடித்து உடைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரில் ஓட்டேரி போலீசார் கடந்த 21-ம் தேதி ரவுடி ஆகாஷை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து … Read more