#Breaking : சீரியல் நடிகர் அர்ணவ் நேரில் ஆஜர்.. திருமண விவகார பிரச்சனையில் அதிரடி திருப்பம்.! 

மகராசி சீரியல் நடிகை திவ்யா, தன் காதல் கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த நைனா முகமத். இவர் தமிழ் சீரியல் சேனல்களில் நடிகராக நடித்து வருகிறார். இதேபோல கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சீரியல் நடிகை திவ்யா, சென்னை புரசைவாக்கத்தில் மகராசி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். கேளடி கண்மணி என்ற சீரியல் தொடரில் நடிக்கும் போது நைனா முகமதுவுடன் நடிகை திவ்யாவுக்கு பழக்கம் … Read more

தமிழ்நாடு கிராம வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த நகைகள் கையாடல் செய்த வங்கி கிளை மேலாளர் பணியிடைநீக்கம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த 14 வாடிக்கையாளரின் 250 சவரன் நகையை கையாடல் செய்த வங்கி கிளை மேலாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தாசப்பகவுண்டன்புதூர் பகுதியில் செயல்பட்டுவரும் இவ்வங்கியில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். இங்கு நடைபெற்ற தணிக்கையில், பல நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது . தகவலறிந்து வங்கி முன் குவிந்த வாடிக்கையாளர்கள், நகைகள் மீட்டுத்தரப்படும் … Read more

புதுச்சேரி மின் ஊழியர்கள் போராட்டம் | முதல்வர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு  – வேலைநிறுத்தம் தீபாவளி வரை ஒத்திவைப்பு

புதுச்சேரி: புதுவையில் மின்துறை தனியார்மயத்துக்கு எதிராகப் போராடி வரும் மின் ஊழியர்கள் கூட்டமைப்புடன், முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் தீபாவளி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்து, பணிக்கு திரும்புவதாக மின்துறையினர் தெரிவித்துள்ளனர். புதுவையில் மின்துறை தனியார்மயத்தை எதிர்த்து அத்துறை ஊழியர்கள் 6 நாள்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால், மாநிலம் முழுவதும் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டு, பொது மக்களும் பல இடங்களில் … Read more

பொன்னியின் செல்வியாக மாறிய தமிழிசை; அதிர்ந்து போய்க்கிடக்கும் 2 மாநில அரசுகள்!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. தற்போது மீதமுள்ள மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கவும், வரும் 2024ம் ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வென்று மீண்டும் பிரதமர் பதவியை அலங்கரிக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் பெரும்பாலான மாநிலக் கட்சி தலைவர்கள் மற்றும் முதல்வர்கள் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர். இதில் பாஜகவை கடுமையாக எதிர்க்கும் மாநில முதல்வர்களில் முதன்மையானவராக தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் உள்ளார். பிரதமர் மோடி தெலங்கானா மாநிலத்துக்கு … Read more

திருப்பூரில் கெட்டுப்போன உணவு உட்கொண்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 குழுக்கள் அமைப்பு

திருப்பூர்: திருப்பூரில் கெட்டுப்போன உணவு உட்கொண்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் களைகட்டும் தசரா திருவிழா – குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தசரா பெரும் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (அக்.05) நள்ளிரவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பக்தர்கள் குவிகின்றனர். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா ஆண்டு தோறும் 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு இத்திருவிழா செப்டம்பர் 26-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு அணிந்து பல்வேறு வேடம் தரித்தும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தசரா குழுவினர் பல்வேறு ஊர்களில் குடில் அமைத்து … Read more

ரூ.41 ஆயிரம் கோடி ரகசியம்: இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்ததில் இருந்தே, இபிஎஸ் தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் மாறிமாறி எதிர்தரப்பினர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ஆதரவு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் லஞ்சஒழிப்புத்துறை சோதனைகளுக்கு பின்னால் ஓபிஎஸ் இருப்பதாக இபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதற்கு ஏற்றாற்போல், குற்றச்சாட்டுகள் இல்லையென்று மாஜி அமைச்சர்கள் நிரூபிக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை … Read more

கெட்டுப்போன உணவை உண்ட 3 சிறுவர்கள் பலி; சிகிச்சையில் 11 பேர் – விசாரணை குழு அமைப்பு

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே விவேகானந்தா சேவாலயம் சார்பில் ஆதரவற்ற சிறுவர்களுக்கான விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள சிறுவர்களுக்கு இன்று (அக். 6) காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. அந்த உணவை உண்ட சிறுவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த உணவு கெட்டுப்போயிருந்ததாக கூறப்படுகிறது.  இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில், சிகிச்சை பலனின்றி 3 சிறுவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மேலும், அந்த உணவை … Read more

திருப்பூர் விடுதியில் 3 சிறுவர்கள் உயிரிழந்தது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது: திருப்பூர் காவல் ஆணையர் பிரபாகரன் பேட்டி

திருப்பூர்: திருப்பூர் விடுதியில் 3 சிறுவர்கள் உயிரிழந்தது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று திருப்பூர் காவல் ஆணையர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். திருமுருகன்பூண்டியில் விவேகானந்த சேவாலயம் நடத்தும் விடுதியில் கெட்டுப்போன உணவு உண்ட 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாள்பட்ட உணவை உட்கொண்ட சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. 2 சிறுவர்கள் காப்பகத்திலேயே உயிரிழந்துள்ளனர்; ஒருவர் வழியில் பலியானார். உடல்நிலை பாதிக்கப்பட்ட 11 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விடுதியில் விசாரணை மேற்கொண்ட பின், … Read more

குமரி பகவதியம்மன் கோயில் திருவிழாவில் நாளை பரிவேட்டை: சிறப்பு பேருந்துகள் இயக்கம், படகு சவாரி ரத்து

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா கடந்த 26-ம் தேதி தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் பரிவேட்டை நாளை நடக்கிறது. இதையொட்டி நாளைஅதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து காலை 9.15 மணிக்கு மேல் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம்பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 11-30 மணிக்கு கோயிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் தொடங்குகிறது. இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக … Read more