நெல்லை மாவட்ட காவல்துறைக்கு மண்டல ஜிஎஸ்டி உதவி ஆணையர் அனுப்பிய நோட்டீஸ் ரத்து

மதுரை: நெல்லை மாவட்ட காவல்துறைக்கு மண்டல ஜிஎஸ்டி உதவி ஆணையர் அனுப்பிய நோட்டீஸை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. 2013-17 வரை வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசுக்கு ரூ.18.65 லட்சம் ஜிஎஸ்டி வரி விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வங்கிகளுக்கு எடுத்துச் சென்ற பணத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியதற்கு சேவை கட்டணம் செலுத்தும் படி அனுப்பிய நோட்டீசுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

’பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்’ – சமூக ஊடகங்களில் புகார் பதிவிட்ட ஜர்னலிசம் மாணவி!

ஜர்னலிசம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னையில் தனியார் கல்லூரியில் ஜர்னலிசம் படித்து வரும் மாணவியை உபர் ஆட்டோ ஓட்டுநர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டிருந்தார். தோழியுடன் நேற்று இரவு உபர் ஆட்டோவில் வந்தபோது தவறாக நடந்து கொண்டதாக பதிவிட்டுள்ளார். மேலும், இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் விசாரிக்க பெண் போலீஸ் இல்லாமல் தான் தங்கி இருக்கும் ஹாஸ்டலில் வந்து … Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை.. வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர், … Read more

மாதம் ரூ.50,000 சம்பளம்.. கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் வேலை..!

தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் நிரப்பப்பட உள்ள சந்தையியல் மேலாளர் பணியிடங்களுகான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Marketing Manager காலியிடங்கள்: 11 சம்பளம்: மாதம் ரூ.50,000 + இதர சலுகைகள் தகுதி: சந்தையியல் பிரிவில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 15-9-2022 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடைபெறும் இடம்: … Read more

மதுரை பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம்: மேலும் ஒருவர் கைது

மதுரை: மதுரை மேல அனுப்பானடி ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கிருஷ்ணன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் நேற்று இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் அக்குபஞ்சர் மருத்துவர் இன்று கைது செய்யப்பட்டார். மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கிருஷ்ணன் வீட்டில் வெடிகுண்டு வீசிய வழக்கில் ஏற்கெனவே மதுரை சம்பட்டி புரத்தை சேர்ந்த உசேன், நெல்பேட்டை சேர்ந்த சம்சுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், வடக்கு வாசல் மாப்பாளையத்தை … Read more

விக்கிரவாண்டி- தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

விக்கிரவாண்டி – தஞ்சாவூர் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பாமகவை சேர்ந்த வழக்கறிஞர் கே.பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையிலான 168 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை பணி தற்போது நடைபெற்று வருவதாகவும், இதில் விக்கிரவாண்டி – பண்ருட்டி – நெய்வேலி – … Read more

ஆ.ராசா, பொன்முடி சர்ச்சை பேச்சு – மௌனம் கலைத்த மு.க. ஸ்டாலின்

திமுக எம்.பி ஆ. ராசாவும், அமைச்சர் பொன்முடியும் சமீபத்தி பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளானது. குறிப்பாக பொன்முடியின் பேச்சு பலரால் ரசிக்கப்படவில்லை. மேலும், அனைத்து தரப்பினருக்குமான ஆட்சி என்று கூறிவிட்டு, பேருந்தில் ஓசியில் செல்கிறீர்கள் என பொதுவெளியில் பொன்முடி பேசிய வீடியோ சமுக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்தது. இந்தச் சூழலில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு- இந்தக் கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடைய வேண்டும் என்ற … Read more

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்

வேலூர்: சிறையில் செல்போன் பயன்படுத்தியதாக 2020-ல் பாகாயம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை விரைந்து நடத்த வலியுறுத்தி 19 நாளாக சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருந்ததையடுத்து வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

ஆஞ்சநேயர் கோவிலில் ஆபாச படம்.. தப்பியோடிய இளைஞர் கைது..!

திருவல்லிக்கேணி ஆஞ்சநேயர் கோவிலில் அமர்ந்து ஆபாச படம் பார்த்துவிட்டு தப்பியோடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை, திருவல்லிக்கேணி மேயர் சிட்டிபாபு தெருவில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்று உள்ளது. கடந்த 19-ம் தேதி இரவு, இந்த கோவிலுக்கு வந்த அடையாளம் தெரியாத 30 வயது இளைஞர் ஒருவர், கோவிலில் அமர்ந்து தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளார். அத்துடன், தான் பார்த்த ஆபாச படத்தை அங்குள்ள சிசிடிவி கேமரா முன்பும் காண்பித்துள்ளார். இளைஞரின் இந்த அநாகரீகமான செயல் … Read more

மழைநீர் வடிகாலுக்காக தோண்டிய பள்ளங்களே அரசுக்கு எமனாக மாறும்: ஜெயக்குமார்

சென்னை: “மழைநீர் கால்வாய் 1500 கி.மீ. போட்டதாக கூறுகின்றனர். பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இன்னும் அந்தப் பணிகள் முடியவில்லை. எழுதிவைத்துக் கொள்ளுங்கள், கண்டிப்பாக தோண்டப்பட்டுள்ள இந்தப் பள்ளங்களே இவர்களுக்கு எமனாக மாறிவிடும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ” தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்கள், சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு இந்த … Read more