தூத்துக்குடியில் பயணிகள் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கோவை சென்ற, பாஜக பிரமுகருக்கு சொந்தமான பேருந்தின் மீது மர்ம நபர்களால் வீசபட்ட குண்டு வீச்சில் பயணிகள் உயிர் தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை சரக டிஐஜி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்து தப்பி சென்ற குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டுள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் இருந்து கோவைக்கு செல்லக்கூடிய பாரதிய ஜனதா கட்சியின் ஒபிசி அணியின் மாநில துணைத்தலைவர் ரமேஸ் … Read more

குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா உலக பிரசித்தி பெற்றது. கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. மதியம் முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடைபெறும். இரவு 10 மணிக்கு சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விழா … Read more

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்த கார் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் பலி

உளுந்தூர்பேட்டை அருகே தடுப்பு கட்டையில் மோதி 20 அடி பள்ளத்தில் கார் விழுந்து விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை ராயப்பேட்டை இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் உசேன் என்பவரின் மகன் ஏஜாஸ். சேலத்தில் இவருடைய மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது, குழந்தையை பார்க்க தனது குடும்பத்தினருடன் நேற்று சேலத்திற்கு சென்று விட்டு மீண்டும் சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர், இந்நிலையில், ஏஜாஸ் ஓட்டி வந்த காரில் அவருடைய தாய் ஹமீம், … Read more

பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் ஆம்னி பேருந்து கட்டணங்கள்: உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த போக்குவரத்துத் துறை தீவிரம்

பண்டிகைக் காலங்களில் அதிகரிக்கும் ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தும் முயற்சியில் போக்குவரத்துத் துறை ஈடுபட இருப்பதாக துறையின் அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்பும் மக்களுக்கு ஆம்னி பேருந்து கட்டணம் பெரும் சுமையாக உள்ளது. வழக்கமான நாட்களில் அரசு பேருந்துகள் அளவிலான விலைக்கு பயணச்சீட்டுகளை வழங்கும் ஆம்னி பேருந்துகள், பண்டிகை நாட்களில் மட்டும் அளவுக்கு அதிகமாகக் கட்டணத்தை வசூலிப்பதாக மக்கள் தொடர் குற்றச்சாட்டை … Read more

காந்தி ஜெயந்தியை ரத்தத்தால் கொண்டாடுவதா? கமல்ஹாசன் கண்டனம்!

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அதிகரித்து வரும் நிலையில் கட்சித் தலைவர் இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சேர்ந்தோரின் வீடுகள், வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு, தீவைப்புச் சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. ஒரே நாளில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான போலீஸார் மற்றும் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட … Read more

இந்தியாவில் RSS தான் பெரிய தீவிரவாத அமைப்பு: PFI அமைப்பினர்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தமிழ்நாடு தலைவர் முகமது சேக் அன்சாரி நேற்று சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், கடந்த வியாழக்கிழமை நாடு முழுவதும் 100 கணக்கான பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனநாயக விரோத கைது இதை கண்டிகிறது எங்கள் அமைப்பு ,ஒட்டு மொத்த ஜனநாயக அமைப்புகளும் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் இந்த சூழலில் எங்களை விரும்பாத சிலர் எங்கள் மீது அவதூறுகளை … Read more

மன்னார்குடி அருகே மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு

திருவாருர்: மன்னார்குடி அருகே தளிக்கோட்டையில் பெய்த கனமழை காரணமாக மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்துள்ளனர். வயலில் தண்ணீர் பாய்ச்சச் சென்ற தந்தை அன்பரசு, அவரது மகன் அருள்முருகன் ஆகியோர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உணவக ஊழியர் தாக்கியதாலேயே என் மகன் உயிரிழந்தார்: தந்தை புகார் – சாலைமறியல்

கும்மிடிப்பூண்டி அருகே பொறியியல் பட்டதாரி இளைஞர் உணவகத்தில் தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு. குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி இளைஞர் நரேஷ் (24). சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த 22ஆம் தேதி பணி முடித்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது எளாவூர் பகுதியில் சாலையோரம் உள்ள தாபா உணவகத்தில் சாப்பிட்டுள்ளார். இதையடுத்து சார்ஜ் இல்லாத தமது … Read more