நீங்க முதல்ல தடை பண்ணுங்க.. அதன்பிறகு நான் நடிப்பதை நிறுத்துகிறேன்.. நடிகர் சரத்குமார் பரபரப்பு பேட்டி!

முதலில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள். அதன் பிறகு நான் அந்த விளம்பரத்தில் நடிப்பதை தவிர்க்கிறேன். குடி பழக்கம் குடியை கெடுக்கும் என்கிறீர்கள். ஆனால் மது கடையை நீங்களே நடத்துவீர்கள் என கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தரிசனம் மேற்கொண்ட பின் நடிகரும், அகில இந்திய சமத்துவ கட்சி தலைவருமான சரத்குமார் பேட்டியளித்துள்ளார். இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போச்சு! – செல்லூர் ராஜூ பேட்டி! கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆழி திரைப்பட படப்பிடிப்பிற்காக வந்த … Read more

ஒரே நேரத்தில் 300 ஆடைகள் அணிந்து உலக சாதனை முயற்சி!

கோவையை சேர்ந்த பேஷன் ஆர்ட் இன்ஸ்ட்டியூட்டில் பயிற்சி பெற்று வரும் இல்லத்தரசிகள் தாங்களே டிசைன் செய்து உருவாக்கிய ஆடைகளை தங்களது குழந்தைகள் மற்றும் மாடல்களை வைத்து ஆடை அலங்கார அணி வகுப்பை நடத்தி அசத்தியுள்ளனர்.  இந்த அணி வகுப்பை உலக சாதனை முயற்சியாக மூன்று மணி நேரத்தில் 300 ஆடைகளை சுமார் எழுபது மாடல்களை கொண்டு இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இதற்கான துவக்க நிகழ்ச்சி பேஷன் ஆர்ட் இன்ஸ்ட்டியூட் நிர்வாக இயக்குனர் சுகுணா சண்முகம் தலைமையில் நடைபெற்றது. … Read more

மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் இன்று தாயகம் வருகை

மியான்மர்: மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் இன்று தாயகம் வருகின்றனர். முதற்கட்டமாக இன்று 13 தமிழர்கள் தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.

பெங்களூரூ டூ மதுரை: காரில் கடத்திவரப்பட்ட 35 மூட்டை குட்கா – சிக்கியது எப்படி தெரியுமா?

வேடசந்தூர் அருகே முன்னால் சென்ற லாரியின் மீது பின்னால் கார் மோதி விபத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 35 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணன்பட்டி நான்குவழிச் சாலையில் மதுரையை நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் முன்னால் சென்ற லாரியின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து காரில் வந்த இரண்டு பேர் காரில் கடத்தி வந்த குட்கா மூட்டைகளை … Read more

இவைகளை வெளியிடக் கூடாது.. டிவி சேனல்களுக்கு அரசு எச்சரிக்கை..!

மத்திய அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், தனியார் டிவி சேனல்கள், இணைய செய்தி நிறுவனங்கள், ஓ.டி.டி. எனப்படும் இணைய பொழுதுபோக்கு தளங்களுக்கென தனித்தனியாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளிட்டுள்ளது. அதில், ‘வெளிநாடுகளைச் சேர்ந்த ஆன்லைன் சூதாட்ட தளங்கள், இணைய செய்தி தளங்கள் என்ற பெயரில் புதிய வகையில் விளம்பரங்கள் செய்கின்றன. இந்த சூதாட்ட தளங்களின் இணைய செய்தி தளங்கள் நம் நாட்டில் உள்ள ஊடகங்களைப் பயன்படுத்தி, சட்டவிதிகளுக்கு புறம்பாக விளம்பரங்கள் செய்து வருகின்றன. … Read more

இலங்கை போர்க்குற்ற விசாரணை | ஐ.நாவில் இந்தியா ஆதரிக்க வேண்டும்: அன்புமணி

சென்னை: இலங்கை போர்க்குற்ற விசாரணையை இந்தியாவில் நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை பேரவையில் நமது நாடு ஆதரிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த வரைவுத் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகள் கொண்டு வந்துள்ளன. ஈழப்போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி … Read more

தேவர் ஜெயந்திக்கு எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்வாரா?

தேவர் ஜெயந்தி விழா இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில் அதை முன்னிட்டு அதிமுகவில் மீண்டும் பரபரப்பு கிளம்பியுள்ளது. பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அவரது மார்பளவு சிலைக்கு அதிமுக சார்பாக தங்க கவசம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அதிமுக பொருளாளர் மதுரை அண்ணா நகர் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் கையெழுத்திட்டு தங்ககவசத்தை பெற்று விழாக்குழுவிடம் வழங்குவார். பின்னர் நிகழ்வு முடிந்த பின்னர் வங்கி லாக்கரில் வைப்பார். அதிமுக பிளவுபட்டு ஓபிஎஸ் – இபிஎஸ் … Read more

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்

கோவை: கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,வேலை நிறுத்ததில் ஈடுபட்ட  2,000 தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்தம் முடிவு செய்தனர். மாநகராட்சி நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

வாகன சோதனையில் சிக்கிய 1.5 டன் சமையல் மஞ்சள் – இலங்கைக்கு கடத்த முயன்ற இருவர் கைது

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்த 1.5 டன் சமையல் மஞ்சளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மதுரையிலிருந்து சமையல் மஞ்சளை இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனம் மூலம் கொண்டு வந்து கொண்டிருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் மண்டபம் அடுத்த வேதாளை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் உரிய ஆவணங்கள் … Read more

பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை..!

ஆயத பூஜை பண்டிகையை முன்னிட்டு, பெரும்பாலான மக்கள் வணிக நிறுவனங்கள், கடைகள், வாகனங்கள் போன்றவற்றுக்கு பூஜைகள் செய்து, பூசணிக்காய் மற்றும் தேங்காய் உடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பல வேளைகளில், சாலைகளின் நடுவே பூசணிக்காய்களை உடைத்துவிட்டு அப்படியே விட்டுச் சென்றுவிடுகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. இதில், சாலையில் விழும் வாகன ஓட்டிகள் மீது பின்னால் வரும் வாகனங்கள் மோதும் ஆபத்தும் உள்ளது. இதுபோன்றவற்றால், ஒவ்வொரு ஆண்டும் வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து … Read more