திருவாரூரில் 2 பேருக்கு பன்றி காய்ச்சல்

திருவாரூர்: திருவாரூர் அருகே அகரதிருநல்லூரை சேர்ந்த 5-வது படித்து வரும் அரசு பள்ளி மாணவர் ஒருவர் மற்றும் மன்னார்குடி கீழமூன்றாம் தெருவை சேர்ந்த 59 வயது நபர் ஒருவர் என 2 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறுகையில், பன்றி காய்ச்சல் உறுதி செய்யபட்ட இருவரும் அவர்களது வீடுகளிலேயே சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்த காய்ச்சல் நோய்க்காக அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டுகள் … Read more

மாமனாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய மருமகன் – போலீஸ் வலைவீச்சு!

காரைக்குடி அருகே மாமனாரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிய மருமகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூரைச் சேர்ந்தவர் 55 வயதான நாகப்பன். இவரது மகள் ராக்கம்மாளுக்கும், அதே ஊரைச் சேர்ந்த சின்ன கருப்பு என்பவரது மகன் ராமச்சந்திரன் என்பவருக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தனது மகள் ராக்கம்மாளை பார்ப்பதற்காக நாகப்பன் மருமகன் ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மாமனாருக்கும், மருமகனுக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் தனது … Read more

அரக்கோணம் இல்லை | சென்னை பெருநகர் விரிவாக்கம் 5,904 ச.கிலோ மீட்டராக குறைப்பு

சென்னை: சிஎம்டிஏ விரிவாக்க திட்டம் 8,878 சதுர கிலோ மீட்டலிருந்து 5904 சதுர கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு தற்போது 1,189 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இதில் சென்னை மாநகராட்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 16 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் உள்ளன. இந்நிலையில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் எல்லை விரிவாக்கம் செய்யப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்தது. இதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, … Read more

வேற லெவலில் மாறப்போகும் தமிழ்நாடு அரசு துறை அலுவலகங்கள்; அமைச்சர் மனோ தங்கராஜ் அதிரடி!

நாமக்கல் மாவட்டத்தில் மின் அலுவலகம் நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.‌ சிங் முன்னிலை வகித்தார். பத்திரிக்கையாளர் தாக்கப்பட்ட சம்பவம் – அமைச்சர் பதில் ! அரசின் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்ட இந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் காகிதமில்லா மின்- அலுவலகம் … Read more

அரசு பள்ளி தலைமை ஆசிரியரைத் தாக்கும் திமுக கவுன்சிலரின் கணவர்!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் பின்புறம் உள்ள பாஸ்கர் என்பவரது வீட்டிலிருந்து தினமும் பள்ளி வளாகத்திற்குள் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது என தலைமை ஆசிரியர் குப்பைகளை இங்கு கொட்ட வேண்டாம் என பல முறை தெரிவித்து வந்துள்ளார்.  இந்நிலையில், பள்ளியில் உள்ள செடிக்கு பள்ளி மாணவர்கள் தண்ணீர் ஊற்ற சென்ற போது, பக்கத்து வீட்டை … Read more

கோவையில் ரூ.1.18 கோடி கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட வழக்கில் 7 பேர் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு

கோவை: கோவையில் ரூ.1.18 கோடி கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட வழக்கில் 7 பேர் குற்றவாளிகள் என கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலு தீர்ப்பு வழங்கியுள்ளார். 2018-ல் வாடகைக்கு அறை எடுத்து ஜெராக்ஸ் இயந்திரம் மூலம் கள்ளநோட்டு அச்சடித்ததாக 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் வழக்கில் ஆனந்த், கீதர் முகமது, சுந்தர், ஹரி, விஜயகுமார், உதயபிரகாஷ், ராஜேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கெடுதலை மட்டுமே செய்யும் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள்! முழுமையாக ஒழிக்க கோரிக்கை!

தடை செய்யப்பட்ட, இரக்க குணமற்ற ஆப்ரிக்க கெளுத்தி மீன் பண்ணைகளை முற்றிலும் அழிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரணம் என்ன? இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். ஆப்ரிக்க கெளுத்தி மீன்கள்.. கோழி, மாடு, ஆடு இறைச்சி கழிவுகளே இவற்றிற்கு உணவாக வழங்கப்படுகிறது. இரும்பு போன்றவற்றையும் உண்கின்றன. எதுவும் கிடைக்காத பட்சத்தில் மீன்களையே உண்ணும் குணம் கொண்டவை. ஆக்சிஜன் குறைந்த அளவுகொண்ட இடங்கள், கழிவுநீர், சேறு, சகதி நிறைந்த இடங்களிலும் வளரக்கூடியவை. வெள்ளப்பெருக்கு காலங்களில், வெள்ளத்தில் கலந்து ஏரிகளில் … Read more

திருவண்ணாமலை || அழுகிய நிலையில் கிணற்றில் கிடந்த ஆண் சடலம்.! போலீசார் விசாரணை.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ராட்டினமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் 50 வயது மதிப்புதக்க ஆண் சடலம் அழகிய நிலையில் கிடந்துள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து ஆரணி காவல் நிலையத்திற்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கிணற்றிலிருந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக … Read more

எஸ்.பி.வேலுமணி வழக்குகளை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு  

சென்னை: தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த வழக்கை, எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பணிகளின் டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் … Read more

அடாவடி பந்த்… அத்துமீறும் பாஜக… வேடிக்கை பார்க்கிறதா அரசு..?

திமுக எம்பி ஆ.ராசா அண்மையில் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து நீலகிரி தொகுதி முழுவதும் இன்று இந்து முன்னணி சார்பில் ஆ. ராசாவை கண்டித்து கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கடையடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், வியாபாரிகள் போராட்டத்துக்கு ஆதரவளிக்க கூடாது என … Read more