நீட் தேர்வுக்கான ஓஎம்ஆர் விடைத்தாளின் கார்பன் நகலையும் தாக்கல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை: நீட் தேர்வுக்கான ஓஎம்ஆர் விடைத்தாளின் கார்பன் நகலையும் தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை பெருமாள்புரத்தைச் சேர்ந்த மாணவர் எவால்ட் டேவிட், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வை கடந்த ஜூலை 17ல் எழுதினேன். தேர்வுக்கான ஓஎம்ஆர் விடைத்தாள்கள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியானது. அதில், எனது எண்ணில் நான் எழுதாத, வேறு நபரின் ஓஎம்ஆர் விடைத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், எனது மதிப்பெண் … Read more