15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பாஜக பிரமுகர்!

சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் ஏழு பெண்கள், காவல் ஆய்வாளர், பா.ஜ. பிரமுகர் உள்பட 21 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இன்று தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.  சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து,  வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.  அதன்படி, சிறுமியின் உறவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த … Read more

சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

சங்கரன்கோவில்; சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்து வருகிறார். பள்ளியில் தீண்டாமை கொடுமை நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

சென்னையில் இன்று எங்கெல்லாம் பவர் கட் ?

பராமரிப்பு பணிகளுக்காக இன்று சென்னையில் உள்ள வியாசர்பாடி, பெரம்பூர் , ஐடி வளாகங்களில்  மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இந்நிலையில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாம் துண்டுக்கப்பட உள்ளது. வியாசர்பாடியில்: சிம்பிடிடி வி.எஸ் மணி நகர், அந்தல் நகர், கண்ணியம்மன் நகர், எம்ஆர்எச் சாலை, சின்ன தோப்பு, கந்தசாமி நகர், டி.ஜி சுவாமி நகர், விநாயகபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களில் மின்சாரம் துண்டக்கப்படுகிறது. பெரம்பூர்: காந்திநகர் முத்தமிழ் நகர் 7வது பிளாக் … Read more

தலைமை அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்த வேண்டும்: விஜயபாஸ்கர் வலியுறுத்தல்

தமிழகத்தில் தீவிரமாக பரவும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தலைமை அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைக் கருவிகளுடன்கூடிய காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் காய்ச்சல் பாதித்த குழந்தைகளுக்கு போதிய படுக்கை இல்லை. பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை அரசு … Read more

நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவு நேர காவலாளி அடித்து கொலை: போலீஸ் விசாரணை

நாமக்கல்: ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் வேலை செய்து வந்த இரவு நேர காவலாளி பரமசிவம் மர்மநபர்கள் அடித்து கொலை செய்துள்ளனர். கை, கால் கட்டப்பற்றதா நிலையில் தூக்கில் தொங்கிய காவலாளியின் உடலை மீட்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காவலாளி பரமசிவத்தை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் ராசிபுரம்-ஆத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Tamil news Today live: அமெரிக்காவில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததாக ஜோ பைடன் அறிவிப்பு

Go to Live Updates பெட்ரோல், டீசல் விலை சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. பிரிட்டன் ராணி எலிசபெத் உடல் இன்று நல்லடக்கம் பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் தேதி 96 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டு இன்று … Read more

மோடியை பெரியாராக மாற்றம் முயற்சிக்கும் தமிழக பாஜக; மோடி மாறி வந்தால் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம்- விசிக திருமாவளவன்.

பெரியாரும் மோடியும் ஓரே தேதியில் பிறந்தது தற்செயலான நிகழ்வு! சென்னையில் இன்று செய்தியாளர்களை விசிக தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர் ஒருவர் பெரியார் பிறந்த தினமும், பிரதமர் மோடியின் பிறந்த தினமும் பாஜகவினரால் கொண்டாடப்பட்டது. அப்போது சமூகநீதி காத்தவர் மோடி என பாஜகவினர் கூறியது பற்றி உங்களின் கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பினார். இதற்க்கு பதில் அளித்த திருமாவளவன், “பாஜகவினர் தங்களின் கட்சித் தலைவரை கொண்டாடுகின்றனர். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பெரியார் பிறந்த அதே நாளில் … Read more

மாணவர்களை பரிசோதித்து உடல்நல விவரம் பதிவேற்றுவதால் கற்பித்தல் பணி பாதிப்பு: அரசுப் பள்ளி ஆசிரியர்கள் புகார்

பள்ளிக்கல்வித் துறையில் அரசுப்பள்ளி மாணவர்களின் சுயவிவரங்கள், கல்வி சார்ந்த பல்வேறு தகவல்கள் பள்ளிக்கல்வி மேலாண்மை தகவல் மையத்தின் (எமிஸ்) தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி சமீபகாலமாக மாணவர்களின் உடல்நலம் சார்ந்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் ஏதேனும் உடல்நலக் குறைபாடு இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. அந்த பட்டியலில் ரத்தசோகை, தைராய்டு, பார்வைபாதிப்பு, காசநோய் … Read more

தமிழகத்தில் யோகா, இயற்கை மருத்துவமனை அமைக்கப்படும்: ஒன்றிய இணை அமைச்சர் தகவல்

நாமகிரிப்பேட்டை: தமிழகத்தில் மிக விரைவில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவமனை அமைக்கப்படும் என்று ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ராமதாஸ் அத்வாலே கூறினார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான மாநாடு, கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று, ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, அவர் பேசியதாவது:தமிழகத்தில் மிக … Read more

முதல்வருடன் சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, சிங்கப்பூர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் சந்தித்துப் பேசினார். இரு தரப்பு உறவுகள் குறித்தும், பல்வேறு திட்டங்கள் குறித்தும் அவர்கள் பேசியுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில், சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் தொடர்புத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ் வரன் நேற்று சந்தித்தார். அப்போது இரு நாட்டு வர்த்தகம், பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பேசினர். இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் … Read more