RSS உள்ளிட்ட எந்த அமைப்பின் ஊர்வலம் பேரணிக்கு அனுமதி கிடையாது: தமிழ்நாடு அரசு

உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் (ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்) ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பல்வேறு சட்டம் ஒழுங்கு காரணமாக ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சட்டம் ஒழுங்கு சூழலில் ஒன்றிய அரசால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன. மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் … Read more

மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர்: ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

மதுரை: மனித கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் ஆட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று தெரியவில்லை என்று நீதிபதி வேதனை தெரிவித்தார். மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதை ஒருபோதும் நீதிமன்றம் அனுமதிக்காது என நீதிபதி கூறினார்.

சோழர்களின் சாதனையை நாம் உண்மையில் உணரவில்லை – ஆனந்த் மகேந்திரா

மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாகப் பல சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் வீடியோக்கள் பகிர்ந்து கொண்டு ஆக்டிவாக இருப்பவர். தற்போது பெருவுடையார் கோவில் என்றும் அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை வியந்து ஒரு பாராட்டிய பதிவைப் பகிர்ந்துள்ளார். ஷ்ராவன்யா ராவ் பீட்டி எனும் பிரபல டிசைனர் பதிவிட்ட தஞ்சை பெரிய கோவில் பற்றிய சிறிய வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சோழ சாம்ராஜ்யத்தின் சாதனைகளும் மற்றும் அவர்களது கட்டிட அறிவுத்திறமையும் … Read more

கருவை கலைக்க கணவன் அனுமதி தேவையில்லை.. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!

பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்வதற்கு கணவனின் அனுமதி பெறத் தேவையில்லை என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த 21 வயது கர்ப்பிணி ஒருவர், மருத்துவ விதிகளின்படி கருக்கலைப்பு செய்ய அனுமதி கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்தப் பெண், சட்ட ரீதியாக விவாகரத்து பெறவில்லை; விதவையும் இல்லை. இதனை விசாரித்த நீதிபதி அருண், “கருக்கலைப்பு செய்ய விரும்பும் கர்ப்பிணிகள், அதற்கு கணவனின் அனுமதியை பெறத் தேவையில்லை. கருக்கலைப்பு தொடர்பான … Read more

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உயர் நீதிமன்றம் அனுமதி 

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுத்தாக்கல் நடைமுறைகள் முடிந்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து கடந்த 22-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி தமிழக உள்துறை செயலாளர் டிஜிபி … Read more

அரசு பள்ளி எஸ்எம்சி(SMC) குழுக்களுக்கு வந்த பிரச்சனை.. தீர்வு காணுமா தமிழக அரசு?

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காக கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-இன் படி பள்ளி மேலாண்மை குழு SMC எனப்படும் School Management Committee) அமைக்கப்பட்டது. இந்த குழு பள்ளி வளர்ச்சியில் கவனம் செலுத்துதல், சமுதாயத்துக்கும் தொடர்பு ஊடகமாக இருத்தல், பள்ளி வயது குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பது, பள்ளியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துதல் மற்றும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை செயல்படுத்தும் … Read more

மாணவியை மருமகளாக பாவித்த ஆசிரியை: மகனுடன் பேசச் சொல்லி வற்புறுத்தல்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில், கணித பாட முதுநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சாந்தி பிரியா. இவரது வகுப்பில் படிக்கும் பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவரை மருமகளே என முறை வைத்து அழைத்து மருமகளாக பாவித்துள்ளார் அந்த ஆசிரியர். மேலும் அந்த மணவியிடம் அவரிடம் புகைப்படம் கேட்டும் தனது மகனிடம் அலைபேசியில் பேசுமாறும் வற்புறுத்தி உள்ளார். அத்துடன் மாணவிகளை, வகுப்பறையில் அவமானப்படுத்துவதும். பாடத்தில் இல்லாத கேள்விகளைக் கேட்டு அவமதிப்பதும். இரவு நேரங்களில் … Read more

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 48% வாக்குகள் பதிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 48 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தம் 2,470 வாக்குகளில் 1,183 வாக்குகள் பதிவாகி உள்ளன.

விபத்தில் மூளைச்சாவடைந்த சிறுவன்: உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய பெற்றோர்

விபத்தால் மூளைச்சாவு அடைந்த 13 வயது சிறுவனின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்கினர். வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த சின்னம்பள்ளி குப்பத்தைச் சேர்ந்த தையல் தொழிலாளி சதீஷ் – நந்தினி தம்பதியினரின் இளைய மகன் துர்கா பிரசாந்த் (13). இவர், கடந்த ஞாயிற்றுக் கிழமை (25.09.2022) மாலை பாக்கம் பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்றுவிட்டு மிதிவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சிறுவனின் மிதிவண்டி மீது மது போதையில் சென்ற அடையாளம் தெரியாத நபரின் … Read more

’16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்’: பொள்ளாச்சி போலீசுக்கு மர்ம கும்பல் கடிதம்

’16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்’: பொள்ளாச்சி போலீசுக்கு மர்ம கும்பல் கடிதம் Source link