ஆவின் பொருள்கள் விலை உயர்வு: தமிழக மக்கள் அதிருப்தி!

ஆவின் நிறுவனம் உற்பத்தி செய்யும் இனிப்பு தின்பண்டங்களின் விலை உயர்ந்துள்ளது. இதற்கான அறிவிப்பை ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஆவின் நிறுவன இயக்குநர் சுப்பையன் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் குலோப்ஜாமூன் 250 கிராம் 80 ரூபாயிலிருந்து 100ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ரசகுல்லா 200 கிராம் 80 ரூபாயிலிருந்து 90 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பால்கோவா 500 கிராம் 210 ரூபாயிலிருந்து 250 ரூபாயாகவும், பேரீச்சை கோவா 500 கிராம் 230 ரூபாயிலிருந்து 270 ரூபாயாகவும், இனிப்பற்ற பால்கோவா ஒரு … Read more

'ஸ்டாலின் ஒரு பொம்மை… மகன், மருமகன், மனைவிதான் எல்லாம்…' – செங்கல்பட்டில் சீறியெழுந்த இபிஎஸ்

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, கடந்த சில நாட்களுக்கு முன்பு, 8 ஆண்டுகளுக்கு பிறகு மின்சார கட்டணத்தை உயர்த்தியது. இதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, மாநிலம் முழுவதும் அனைத்திந்திய அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். மேலும் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில், திமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கண்டன உரையாற்றினார்.   … Read more

பவானி ஆற்றின் குறுக்கே பெரியமோளபாளையத்தில் ரூ.13 கோடியில் தடுப்பணை கட்டும் பணி தீவிரம்: நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை

பவானி: பவானி ஆற்றின் குறுக்கே ஜம்பையை அடுத்த பெரியமோளபாளையத்தில் ரூ.13.26 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்மூலம், சுற்றுவட்டாரப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் வகையில் பவானி ஆற்றின் குறுக்கே அரக்கன்கோட்டை, ஆலத்துக்கோம்பை, வாணிப்புத்தூர், அத்தாணி மற்றும் பெரியமோளபாளையம் என ஐந்து இடங்களில் தடுப்பணை கட்டப்படுகிறது. அத்தாணி அருகே கருவல்வாடிபுதூர் – அம்மாபாளையம் கிராமங்களுக்கு இடையே 155 மீட்டர் நீளமும், … Read more

இனிப்பு வகைகளின் விலையை உயர்த்தியது ஆவின்

ஆவின் இனிப்பு வகைகளின் விலை ரூ.20 முதல் 80 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் வாயிலாக, பால் மட்டுமின்றி வெண்ணெய், நெய், பன்னீர் உள்ளிட்ட 200 வகையான பால் பொருட்கள் விற்கப்படுகின்றன. இவை, ஆவின் நேரடி விற்பனை நிலையங்கள் மட்டுமின்றி, தனியார் பாலகம், சூப்பர் மார்க்கெட், மளிகை மொத்த விற்பனை கடைகளிலும் விற்கப்படுகின்றன. இந்த நிலையில் ஆவின் நிர்வாகம் இனிப்பு வகைகளின் விலையை ரூ.20 முதல் 80 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. அதன்படி குலோப் ஜாமூன் … Read more

நெருங்கும் பண்டிகைகள் | பால்கோவா, மைசூர் பா உள்ளிட்ட இனிப்புகள் விலையை உயர்த்தி ஆவின் உத்தரவு

சென்னை: ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் நெருங்கும் நிலையில் பால்கோவா, மைசூர் பா உள்ளிட்ட இனிப்புகளின் விலையை உயர்த்தி ஆவின் உத்தரவிட்டுள்ளது. பால் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விரி விதிப்பு காரணமாக ஆவின் தயிர், மோர், லஸ்ஸி, நெய் ஆகிய பொருட்களின் விலை கடந்த ஜூலை மாதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் குலாப்ஜாமூன், ரசகுல்லா உள்ளிட்ட இனிப்புகளின் விலை உயர்த்தி ஆவின் உத்தரவிட்டுள்ளது. இதன் முழு விவரம்: 125 கிராம் குலாப்ஜாமூன் ரூ.45 லிருந்து ரூ.50 … Read more

கடலில் கலைஞரின் பேனா சின்னம்: ஒன்றிய அரசு க்ரீன் சிக்னல்!

சென்னை மெரினாவில் கலைஞர் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் 39 கோடி ரூபாய் செலவில், 2,21 ஏக்கர் பரப்பளவில் கருணாநிதிக்கு பிரம்மாண்டமான நினைவிடம் அமைக்கும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாமல் கலைஞர் கருணாநிதியை கௌரவிக்கும் விதத்தில் அவரது நினைவிடத்துக்கு அருகே கடலுக்குள் 137 அடி உயரத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் எனவும், 80 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதும் … Read more

ஒரு மாத குழந்தைக்கு மது; போதையில் பெண் கொடூரம்… கடத்தப்பட்ட குழந்தையா என சந்தேகம்

திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பேருந்து நிலையத்தில் மதுரை பேருந்துகள் நிற்கும் பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிறந்து  ஒரு மாதமே ஆன  குழந்தை உடன் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்துள்ளார். அந்தப் பெண் மது அருந்தியது மட்டுமின்றி, அந்த குழந்தைக்கும் மது ஊற்றி கொடுத்ததாக அந்தப் பகுதியில் இருந்த இளைஞர்கள், பேருந்து நிலைய காவல் கட்டுப்பாட்டு பகுதிக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் பேச்சுக் … Read more

மயிலாடுதுறை அருகே மாற்று சான்றிதழில் பிறந்த தேதி, மாதம் தவறாக எழுதிய கல்லூரி: மேல் படிப்பிற்கு செல்ல முடியாமல் மாணவன் தவிப்பு

கொள்ளிடம்: மயிலாடுதுறை அருகே எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரியில் மாணவனுக்கு வழங்கிய மாற்று சான்றிதழில் பிறந்த தேதி மற்றும் மாதம் தவறாக இருப்பதால் மேல் படிப்புக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் இளங்கலை மூன்றாமாண்டு கலை, அறிவியல் மற்றும் கணித பட்ட வகுப்புகளும், முதுகலை பட்ட வகுப்புகளும் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த 2019ம் ஆண்டு மயிலாடுதுறை … Read more

முன்விரோதத்தால் கூலிப்படை மூலம் தாக்க முயற்சி… கிராம மக்கள் சாலை மறியல்

கூலிப்படையை ஏவி தாக்க முயன்றவரை உடனடியாக கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன் மற்றும் பாரதிராஜா ஆகியோருக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக பாரதிராஜா அவ்வப்போது மது அருந்திவிட்டு வந்து சுதர்சன் வீட்டின் முன்பு நின்று தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு மீண்டும் மது போதையில் வந்த … Read more

'கமிசன், கலெக்சன், கரெப்சனிலும் திராவிட மாடல்' – இபிஎஸ் குற்றச்சாட்டு

செங்கல்பட்டு: ” கமிசன், கலெக்சன், கரெப்சனிலும் திராவிட மாடல். தமிழகத்தில் லஞ்சம் இல்லாத துறையே இல்லை. பல்வேறு கூட்டங்களில், தற்போதைய முதல்வர் அதிமுகவை விமர்சனம் செய்கிறார். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் நடைபெறவில்லை என்று தவறான தகவலை பரப்பி வருகின்றார்” என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து, அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் … Read more