சென்னை: மெரினாவில் பேனா சின்னம் – மத்திய அரசு முதற்கட்ட அனுமதி

சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே வங்கக் கடலில் 360 மீட்டர் உயரத்தில் 80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள பேனா சிலைக்கு மத்திய அரசு முதல்கட்ட அனுமதியை வழங்கியுள்ளது. மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் கடலில் பாலம் போன்று அமைத்து பேனா நினைவு சின்னம் கட்டப்பட உள்ளது. இது குறித்து தமிழக அரசின் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, இது முதற்கட்ட அனுமதி மட்டுமே. இன்னமும் பல்வேறு அனுமதியை பெற … Read more

மின் கட்டண உயர்வை கண்டித்து தேனியில் அரிக்கேன் விளக்குடன் மார்க்சிஸ்ட் போராட்டம்

மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தேனி மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கே.பாலபாரதி சிறப்புரையாற்றினார். காற்றாலை மின் உற்பத்தியை முறைப்படுத்தி மின்வாரியத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறி அரிக்கேன் விளக்குடன் முழக்கமிட்டனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், கே.ஆர்.லெனின், இ.தர்மர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமச்சந்திரன், சு.வெண்மணி, டி.கண்ணன், … Read more

குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரனின் உடல் இன்று கொண்டுவரப்படுகிறது

திருச்சி: குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரனின் உடல் இன்று கொண்டுவரப்படுகிறது. முத்துக்குமரன் உடல் இன்று பிற்பகல் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது. திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடியை சேர்ந்த முத்துக்குமரன் கடந்த 7-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

கடலூர் சிறைக்கு சவுக்கு சங்கர் மாற்றம்

யூடியூபர் சவுக்கு சங்கர் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்களால் நள்ளிரவில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார் என சிறைத்துறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த யூடியூபர் சவுக்கு சங்கர். அவர் தனது ட்விட்டரில், ‘நீதித் துறை ஊழல் கறை படிந்திருக்கிறது’ என கருத்து பதிவு செய்தற்காக அவர் மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரணை … Read more

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த திமுக அரசு துணை நிற்கும்: நரிக்குறவர் இன மக்களிடம் ஸ்டாலின் உறுதி

சென்னை: பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்காக நன்றி தெரிவிக்க வந்த நரிக்குறவர் பிரதிநிதிகளிடம், ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை, சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும் திமுக அரசு துணை நிற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ‘பழங்குடியினர்’ பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நரிக்குறவர் இன மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்காக திமுகவும், திமுக அரசும் எடுத்த தொடர் முயற்சிகளின் விளைவாக, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கு … Read more

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 40,000 கனஅடியாக குறைந்தது

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 50,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடியாக குறைந்துள்ளது. 16 கண் மதகு வழியாக 17,000 கனஅடி, அணை, சுரங்கமின் நிலையம் வழியாக 23,000 கனஅடி என 40,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

திருமணமாகி 25 நாட்கள்… மாரடைப்பால் இளம் ராணுவ வீரர் மரணம்

கருங்கல் அருகே திருமணமாகி 25 நாட்களே ஆன நிலையில் ராணுவ வீரர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் கருங்கல் அருகே உதயமார்த்தாண்டம் பிச்சவிளை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (32). இந்திய எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வந்த இவர், தனது திருமணத்திற்காக ஒருமாத விடுப்பில் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி சொந்த ஊர் வந்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு கடந்த 21-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து விடுமுறை முடிந்து … Read more

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர்கள் சேர்ப்பு: அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு

சென்னை: பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர்களைச் சேர்க்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழகத்தில் கல்வியறிவின்மை, சுகாதாரச் சவால்கள் மற்றும் வேலையின்மை காரணமாகப் போராடும் நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை வரவேற்கிறேன். பாமக தலைவர் அன்புமணி: நரிக்குறவர்கள் மற்றும் குருவிக்காரர்களை பழங்குடியினத்தில் சேர்ப்பதற்கான சட்ட முன்வரைவுக்கு … Read more

ஸ்டாலினை சந்திக்கும் அதிமுகவினர்: டிடிவி தினகரன் வெளியிடும் புகைப்பட ஆதாரம்!

அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை நெருங்கும் நிலையில் அதில் ஒரு கும்பல் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளதாகவும், அதற்கான போட்டோ ஆதாரங்களை வெளியிட தயாராக இருப்பதாகவும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 114ஆவது பிறந்தநாளை ஒட்டி திருப்பூர் யூனியன் மில் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமமுகவின் தொழிற்சங்க கொடியை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிமுகம் செய்து வைத்தார். கூட்டத்தில் உரையாற்றிய … Read more