பிரதமர் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை: பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். பிரதமரின் வருகையையொட்டி, பாதுகாப்பு பணியில் 22,000 போலீஸார் ஈடுபட உள்ளதாகவும், 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னைப் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னைப் பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி: பிரதமர் நரேந்திர மோடி 26.05.2022 அன்று மாலை, சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் பல்வேறு நலத்திட்ட பணிகளின் அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைக்க … Read more

மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு

மயிலாடுதுறையில் சாலையில் சென்று கொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் ஓரிரு நாட்களாக அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறையில் தனியார் கல்லூரியில் பயின்றுவரும் மாணவர் தனது வகுப்பை முடித்துக்கொண்டு புல்லட் இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அவர் சிறிது தூரம் சென்றபோது இருசக்கர வாகனத்தின் இன்ஜின் பகுதியில் உள்ள வயரில் மின் கசிவு ஏற்பட்டு சிறிய அளவில் தீப்பற்ற தொடங்கியிருக்கிறது. இதனை கவனித்த மாணவர் பிறகு சாலையோரமாக இரு … Read more

துபாய் வாழ் தமிழர்கள் கவனத்திற்கு… 90% டிஸ்கவுண்ட் தரும் மால்கள் இவைதான்!

3-day Super Sale has resumed in Dubai  from May 27 to 29, discounts of up to 90 per cent will be offered on three-day sales at all three locations Dubai Mall, Dubai Marina Mall and Dubai Hills Mall: நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 3 நாள் சூப்பர் சேல் மீண்டும் துபாயில் தொடங்கவுள்ளது. இந்த சூப்பர் சேல் மே 27 முதல் 29 வரை … Read more

தமிழகத்தில் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!

தமிழகத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஒன்று முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். 1 முதல் 10ம் வரையிலான மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 13-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். … Read more

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படிநீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (மே 26) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், … Read more

வாகனத்தின் பின் பக்க டயர் வெடித்ததில் மீன் ஏற்றிச் சென்ற டெம்போ வாகனம் கவிழ்ந்து விபத்து..! பெண் பலி

நாகை மாவட்டம் குருக்கத்தில் மீன் ஏற்றிச் சென்ற டெம்போ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மீனவப் பெண்கள் 8 பேர் டெம்போ வாகனத்தில் மீன்களை ஏற்றிக் கொண்டு அதிகாலையில் வியாபாரத்திற்கு சென்றுக் கொண்டிருந்த போது வாகனத்தின் பின் பக்க டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில், பாரம் தாங்காமல் டெம்போ வாகனம் கவிழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்தோடு 7 பெண்கள் படுகாயமடைந்தனர். Source link

சட்டம் – ஒழுங்கு | “இன்னும் 4 ஆண்டு கால திமுக ஆட்சியை நினைத்தால் பயமாக இருக்கிறது” – வானதி சீனிவாசன்

கோவை: “சமூக நீதி, சட்டம் – ஒழுங்கு ஆகியவற்றை வெறும் வார்த்தைகளில் வைத்துக் கொண்டிருக்காமல் திமுக அரசு அதை செயலில் காட்ட வேண்டும்” என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவையில் இன்று (மே 25) செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது: “உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஓராண்டில் 75 சதவீதம் உயர்ந்திருந்த போதிலும், ரஷ்யா, உக்ரைன் போர் சூழல் காரணமாகவும் விலை அதிகரித்த போதிலும் … Read more

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன குழந்தை: 1 மணி நேரத்தில் மீட்ட ரயில்வே போலீசார்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெற்றோர் காணாமல் தவித்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை மீட்டு 1 மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்த ரயில்வே காவல்துறையினர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் வினோத்குமார் – லதா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ருத்விக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வினோத் தனது குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று தனது மகனுக்கு மொட்டை அடித்து நேர்த்திகடன் செலுத்திவிட்டு சென்னை திரும்பினர். இதையடுத்து மீண்டும் விசாகப்பட்டினம் செல்வதற்காக, இன்று அதிகாலை … Read more

அவசர கதியில் ‘அரைகுறையாக’ முடிக்கப்படும் தூர்வாரும் பணிகள்: டெல்டா விவசாயிகள் குற்றச்சாட்டு!

எஸ்.இர்ஷாத் அஹமது தஞ்சாவூர் காவிரி டெல்டா பாசன வசதிக்காக மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே (மே 24-ம் தேதி) தண்ணீர் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசன ஏரிகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களைத் தூர்வாரும் பணிகள் ‘அவரச கதியில்’  மேற்கொள்ளப்பட்டு, ‘அரைகுறையாக’  செய்து முடிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் வழக்கமாக ஜுன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து … Read more

பள்ளி மாற்றுச் சான்றிதழில் தாய்மொழி குறித்த தகவல்.! நாம் தமிழர் கட்சிக்கு பெருமிதம் என சீமான் கருத்து.!

நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக பள்ளி மாற்றுச் சான்றிதழில் தாய்மொழி குறித்த தகவல் இடம்பெறும் என்பது நாம் தமிழர் கட்சிக்கு பெருமிதம் என்று சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு அரசு ஆவணங்களில் தாய்மொழி எது என்கிற குறிப்பு இதுவரை எந்த இடத்திலும் பதியப்படுவதில்லை. ஆனால், தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் தத்தம் தாய்மொழியை அரசு ஆவணங்களில் முறையாக அடையாளப்படுத்தும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.  குறிப்பாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா … Read more