ஏமாற்றத்தில் ஓபிஎஸ்… அந்த 4 பேருக்கு நன்றி…. அதிகாலை முதல் 'ஈ' ஓட்டம்.!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மொத்தம் உள்ள 2665 பொதுக்குழு உறுப்பினர்களில், 2400 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுகவின் 74 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கின்றனர். மேலும், வரும் 11ஆம் தேதி நடக்கவுள்ள அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் ஒற்றை தலைமையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. அதிமுகவில் … Read more

கூட்டுறவு அங்காடியில் ‘கருப்புக்கவுனி அரிசி’ விற்பனையை அதிகரிக்க அறிவுறுத்தல்

சென்னை: கூட்டுறவு அங்காடியில் ‘கருப்புக்கவுனி அரிசி’ விற்பனை அதிகரிக்க வேண்டும் என்று கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார். சென்னை ஆழவார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் வளாகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடியில் கூட்டுறவு, உணவு (மற்றும்) நுகர்வோர் பாதுகாப்புத் துறை, முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு வைக்கப்பட்டுள்ள பருப்பு வகைகள் மற்றும் சிறுதானியங்கள், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் வகைகள், மஞ்சள், … Read more

கடன் தொல்லையால் கேரள தம்பதி எடுத்த விபரீத முடிவு… காவல்துறையினர் விசாரணை..!

கடன் தொல்லையால் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி சத்தியபாமா. இவர்கள் பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அங்குள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியவர்கள் உறவினர்களுக்கு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். இதனை அடுத்து, அவர்கள் அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து விடுதி ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து … Read more

சென்னை: மழைநீர் வடிகால் வழித்தடத்தில் பாதுகாப்பற்ற மரக்கிளைகளை அகற்ற அறிவுறுத்தல்

சென்னை: மழைநீர் வடிகால் கட்டமைப்பு வழித்தடத்தில் பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என்று கூடுதல் தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வாரியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்படி ஆலந்தூர் மண்டலம், … Read more

செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் இலங்கை தமிழ் இளைஞர் செய்த விபரீத முடிவு..!

மறுவாழ்வு மையத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையியை சேர்ந்த ராணி என்பவர் பிள்ளைகளுடன் கடந்த 2008ம் ஆண்டு இலங்கையில் இருந்து வந்து ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி வசித்து வருகிறார்.  இவருன் மகன் நிரோஷன் (22) என்பவர் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார்.  இவர் அங்குள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து வேலைக்கு செல்லாமல் செல்போனில் கேம் விளையாடி சுற்றித் திரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ராணி அவரை … Read more

‘பதவியை காப்பாற்றிக் கொள்ள திமுக மீது பழிபோட முயற்சி’ – இபிஎஸ் கருத்துக்கு டிஆர் பாலு பதில்

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு தமிழகத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரைச் சந்தித்து ஆதரவு கோரினார். திரவுபதி முர்முவுக்கு அதிமுக தலைமை நிலையச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அதில் பேசியவர், “பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை முதல்வர் ஸ்டாலின் ஆதரிக்கவில்லை. திரவுபதி முர்முவை ஆதரிக்காமல், சமூக நீதி என பேசி மக்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார். திமுக காங்கிரஸ், சூழ்ச்சியால் … Read more

மகளுடன் சேர்ந்து மருமகனை கட்டையால் தாக்கிய மாமியார்.. கைகலப்பில் முடிந்த வாக்குவாதம்!

கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் கட்டையை கொண்டு தாக்கிக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்து ஜிஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் கடந்த சில ஆண்டுகளாக பெங்களூரில் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு பிரீத்தா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், தன்னுடைய கணவருக்கும் தனக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக மனைவி பிரீத்தா தனது தாயிடம் தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த பிரீத்தாவின் தாயார் கவிதா மற்றும் உறவினர் செல்வம் … Read more

ராதிகா நீங்கதானா அந்த பொண்ணு? அதிர்ச்சியில் பாக்யா…

சின்னத்திரையில் விஜய் டிவியின் அடையாளங்களில் ஒன்று பாக்கியலட்சுமி சீரியல். கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் எப்படியெல்லம் இருக்க கூடாது என்பதற்கு இந்த சீரியல் ஒரு முக்கிய உதாரணம் என்றுதான் சொல்ல வேண்டும். பெண்கள் ஆண்களுக்கு சமமாக முன்னேறி வரும் இந்த காலகட்டத்தில் பெண்களை மீண்டும் 80-க்கு அழைத்து செல்லும் வகையில் பாக்யலட்சுமி கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் இப்படி பேசிக்கொள்வது இயக்குநருக்கு கேட்டுவிட்டது போல தற்போது பாக்யா தனது கணவர் கோபி என்ன செய்கிறார் என்பது குறித்து கேள்வி … Read more

#BREAKING || அதிமுகவின் சட்டவிதிமுறைகளின்படி நான் தான்….. சற்றுமுன் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி.!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.  எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். அதே சமயத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரட்டைத் தலைமை தொடர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு, அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக இன்று சென்னை … Read more

நீதிமன்ற வளாகத்தில் ஆபாசமாக பேசி ரகளை.. போதை ஆசாமியை தூக்கிய போலீசார்..!

கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மதுபோதையில் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் வேன் டிரைவராக பணிபுரியும் நிலையில், தன் மீதான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அப்போது மதுபோதையில் இருந்த நாகராஜ் சத்தமாக பேசிக் கொண்டிருந்ததாகவும், அமைதியாக பேசும் படி ஊழியர்கள் கூறியதால் அவர் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, நாகராஜை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். Source link